Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்னம்பலத்தை தூக்கி வீல் சேரில்.. எம்ஜிஆரிடம் பிரசாந்த்தின் அப்பா தியாகராஜன் பண்ண சத்தியம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வரும் பொன்னம்பலம், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.. ஒரு வீடியோவில் பேசியிருந்த பொன்னம்பலம், எனது எதிரிக்கும் டயாலிசிஸ் பிரச்சனை வரக்கூடாது.. 250 ஊசிகளுக்கு மேல் போட்டுள்ளேன். 2 நாளைக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது... உப்பு இல்லாமல் சாப்பிடுகிறேன். உலகத்திலேயே அதிகபட்ச தண்டனை இதுவாகத்தான் இருக்க முடியும், உயிரை விட்டுவிடலாம் என்று எண்ணும் அளவுக்கு இந்த கிட்னி பிரச்சனை என்னை கொண்டு சென்றுள்ளது என்று உருக்கமாக கூறியிருந்தார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, ஒரு ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி வந்தவர்.. ஆனால், அவரது உயரம், உருவத்தை கண்ட கேஎஸ் ரவிக்குமார், தன்னுடைய வால்டர் வெற்றிவேல் என்ற படத்தில் பொன்னம்பலத்தை கேரக்டர் ரோல் தந்து நடிக்க வைத்தார்..

Television Ponnambalam Actor Prashanth Thiagarajan

'கபாலி' என்ற பெயரில் நடித்து, அதுதான் ரசிகர்களிடம் பொன்னம்பலத்தை கொண்டுபோய் சேர்த்தது.. தொடர்ந்து நாட்டாமை உள்ளிட்ட படங்களில் கேஎஸ் ரவிக்குமார் தந்த வாய்ப்புகளை பொன்னம்பலமும் சரியாக பயன்படுத்தி கொண்டார்.

கிட்னி பெயிலியர்

கடந்த 2 வருடங்களாக கிட்னி பெயிலியர் பிரச்சனைால் அவதிப்பட்டு வருகிறார் பொன்னம்பலம்.. இதனால் டயாலிசிஸ் செய்து வருகிறார்.. சினிமா துறையில் பலரும் சிகிச்சைக்கான உதவிகளை செய்தாலும், பொன்னம்பலம் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை.. டிரான்ஸ்பிளேன்டேஷன் அதாவது கிட்னி மாற்று சிகிச்சைக்கு முயன்றுள்ளனர். ஆனால், அதுவும் வெற்றிகரமாக அமையவில்லை.

தெலுங்கில் நிறைய படங்களில் சிரஞ்சீவியுடன் பொன்னம்பலம் நடித்துள்ளார்.. அந்தமுறையில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை பொன்னம்பலத்துக்கு உதவியிருக்கிறார் சிரஞ்சீவி.. அதேபோல, சரத்குமார், அர்ஜுன், தனுஷ், கேஎஸ் ரவிக்குமார் என பலரும் சிகிச்சைக்காக நிதியுதவி செய்துள்ளனர்..

ஆனாலும் பொன்னம்பலத்தால் எந்திரிச்சுகூட நடக்க முடியாமல் உள்ளார்.. வீல் சேரில் அவரை தூக்கி உட்கார வைக்கிறார்கள்.

ஸ்டண்ட் கலைஞர்கள் பாவம்

ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கையே பரிதாபகரமானது.. உச்சபட்ச ரிஸ்க் எடுப்பதும் ஸ்டண்ட் கலைஞர்கள்தான்.. இவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது..

பெரும்பாலும் சண்டைப்பயிற்சி செய்பவர்கள், ரிச் புரோட்டீன்களை அதிகமாக எடுத்து கொள்வார்கள்.. புரோட்டீன்கள் அதிகம் சாப்பிடும்போது, இப்படியான கிட்னி பாதிப்புகள் ஒருசிலருக்கு வரலாம்.

சமீபத்தில், வெட்டுவோம் படத்தில் ரிஸ்க் காட்சியில் ஸ்டண்ட் செய்தவர் இறக்க நேரிட்டது. 2 லட்சம் பணத்துக்காக இப்படி செய்துள்ளார்.. கிளம்பும்போது தம்ப்ஸ்அப் காட்டிவிட்டு சென்றவர்.. ஆனால், அந்த காட்சி முடியும்போதே அவர் இறந்துவிட்டார்..

பிரியமான எம்ஜிஆர்

எப்போதுமே ஸ்டண்ட் கலைஞர்கள் மீது பிரியமாக இருப்பார் எம்ஜிஆர். அவர்களுக்காக எத்தனையோ உதவிகளை செய்துள்ளார்.. எம்ஜிஆருக்கு பிறகு ஸ்டண்ட் கலைஞர்களிடம் அன்பும், பிரியமும், வைத்தது விஜயகாந்த்தான்.

ஒருமுறை கமல்ஹாசனுக்கு ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் படுகாயம் ஏற்பட்டு , எலும்புமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது எம்ஜிஆர் இதைக்கேள்விப்பட்டு, கமலுக்கு அட்வைஸ் தந்துள்ளார்.. முகம்தான் மூலதனம் என்பதால் இதுபோன்ற ஆபத்தான காட்சிகளை தவிர்க்குமாறும், டூப் போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி கேட்டுக் கொண்டிருந்தார்.

அதேபோல நடிகர் பிரசாந்த்தின் அப்பா தியாகராஜனும், மிகச்சிறந்த பாக்ஸர்.. அன்று திருமணம் முடிந்ததுமே, எம்ஜிஆரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கும்போது, எம்ஜிஆர் ஒரு சத்தியம் செய்யும்படி கேட்டாராம்.. இனிமேல் பாக்ஸர் தொழிலை செய்யக்கூடாது, திருமணமாகி மனைவி வந்துவிட்டதால், இந்த ஆபத்தான பாக்சிங் செய்யக்கூடாது என்றாராம்.

என் உயிர் தோழன் பாபு

பாரதிராஜாவின் என் உயிர் தோழன் படத்தில், நடித்த பாபு என்ற ஹீரோ பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்த ஒரு படத்தினால் 15 படங்கள் உடனே புக்காயின. 2வது படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, 2வது மாடியிலிருந்து கீழே குதிக்கும்

காட்சி படமானது, தானே குதிப்பதாக சொன்னார்.. பல ஸ்டண்ட் கலைஞர்கள் சொல்லியும் கேட்காமல், பாபு ரிஸ்க் எடுத்தார்.. கடைசியில் முதுகுதண்டு அடிப்பட்டு, இடுப்புக்கு கீழே செயலிழந்துவிட்டது.. 30 வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்து, சமீபத்தில் இறந்துவிட்டார்.. அவருடைய திரை வாழ்க்கையுடன் மொத்த வாழ்க்கையும் அத்துடன் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+