கோலிவுட்டில் நுழைந்த வில்லுப்பாட்டு மாதவி.. கோவில் திருவிழாக்களை கலக்கிய நாட்டுப்புற குரல்.. யார் இந்த 2k கிட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழ்நாட்டில் கோவில் திருவிழாவுக்கு அடிக்கடி போகிறவர்களாக இருந்தால் வில்லுப்பாட்டு மாதவி என்ற பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு காலத்தில் வில்லுப்பாட்டு என்றாலே வயதானவர்கள் தான் அதை ரசிப்பார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று யூடியூப் மூலம் மாதவியின் பாடல்களை கேட்டு பலர் ரசிகர்களாக மாறி இருக்கிறார்கள்.

அதற்குக் காரணம் அவரது குரல் மட்டுமல்ல, அவர் பாடும் விதம், கதையை சொல்லும் பாணி, நடுவே கொடுக்கும் நகைச்சுவை, உணர்வுபூர்வமாக பாடும் நடை என இவை எல்லாமே ரசிகர்களை கட்டி போட்டு விடும். அதனால் தான் தென் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் இந்த வருடம் "மாதவி வருகிறாராம்" என்று சொன்னாலே அந்த ஊரே உற்சாகமாகிவிடும்.

Villupaattu Madhavi Vetta Saami Arulnithi Ameer

சினிமாவில் வில்லுப்பாட்டு மாதவி

இப்படி கிராமிய இசையின் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய மாதவி இப்போது அடுத்த கட்டத்திற்கு போயிருக்கிறார். ஆமாம் அவர் சினிமாவிலும் பாடகியாக அறிமுகம் ஆகிறார். அருள்நிதி, இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ள "வேட்ட சாமி" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சுடலை மாடன் "வேட்டை பாடலை" தான் மாதவி பாடி இருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் இந்த பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தில்லு முல்லு
மண்வாசனை மாறாத ஒரு நாட்டுப்புற பாடலுக்கு உண்மையான நாட்டுப்புறப் குரலே வேண்டும் என்று நினைத்ததால் மாதவியை தேர்வு செய்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இன்று சோசியல் மீடியாவில் மாதவிக்கு என்று தனி ரசிகர்கள் உள்ள பட்டாளம் இருக்கிறது. அவர் பாடிய வில்லுப்பாட்டு வீடியோக்கள் வெளியாகும் போது எல்லாம் லட்சக்கணக்கான நியூஸ் கிடைக்கிறது. ஆனால் மாதவி சோசியல் மீடியாவில் தன்னுடைய வீடியோக்களை வெளியிடுவது கிடையாது.

Villupaattu Madhavi Vetta Saami Arulnithi Ameer

வில்லுப்பாட்டு மாதவியின் பாடல்கள்

மாதவியின் வில்லுப்பாட்டை ரசிக்கும் மக்கள்கள் அதை வீடியோவாக பதிவு செய்து சோசியல் மீடியாவில் வெளியீட்டு தான் அவர் பிரபலமாக இருக்கிறார். அதிலும் சுடலை மாடன், அம்மன், அய்யனார், இசக்கி அம்மன் உள்ளிட்ட கிராம தெய்வங்களை பற்றிய அவரது பாடல்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

வில்லிசை கலையில் விஸ்வரூபம் எடுத்த 19 வயது
மாதவின் இன்னொரு சிறப்பு என்றால் வில்லுப்பாட்டை பழைய தலைமுறைகளோடு மட்டும் நிறுத்தாமல் 2 கே கிட்ஸ்களும் ரசிக்கும் அளவுக்கு அதை மாற்றிக் கொண்டு சென்று இருக்கிறார். அவரும் 2k கிட் என்பதால் தான் இன்றைய இளைஞர்களுக்கு அவர் பரீட்சையமாக மாறி இருக்கிறார். நூற்றுக்கணக்கான மேடைகளில் பாடி பல விருதுகளை வாங்கி இருந்தாலும் சினிமாவில் பாட வேண்டும் என்ற கனவு இப்போதுதான் நினைவாகி இருக்கிறது.

Villupaattu Madhavi Vetta Saami Arulnithi Ameer

சினிமா பாடலுக்கு மறுப்பு

இதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் பாட வாய்ப்பு கிடைத்தாலும், அந்த சினிமா பாடல் தனக்கு செட் ஆகாது என்று அவர் அதற்கு மறுத்துவிட்டாராம். ஆனால் இப்போது கடவுள் பாடல் என்றதும் ஓகே சொல்லிவிட்டேன் என்று அவர் கூறி இருக்கிறார். கோவில் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான மக்களை கைதட்டவைத்த வில்லுப்பாட்டு மாதவி இனி வெள்ளித்திறையிலும் தனது குரலால் ரசிகர்களை கவர போகிறார். இந்த ஒரு பாடல் அவருக்கு இன்னும் பல திரைப்பட வாய்ப்புகளை திறந்து வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+