வில்லிசை கலையில் விஸ்வரூபம் எடுத்த 19 வயது "வில்லுப்பாட்டு மாதவி.." தமிழ்நாடு ட்ரெண்டிங்கே இவர்தான்!
தென்காசி: சுரண்டை பக்கத்தில் உள்ள அச்சங்குன்றம் என்ற ஊரை சார்ந்த வில்லுப்பாட்டு மாதவி தற்போது சமூக வலைத்தளத்தில் பிரபலமாகி வருகிறார்.
அழிந்து வரும் வில்லுப்பாட்டு கலையை மிகவும் ஆர்வத்தோடு கற்று அதில் சாதித்து வரும் மாதவி இளைய தலைமுறையினர் பலரும் இதை ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி பலருக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறார்.
தெய்வத்திற்காக மனம் உருகி பாடும் கலையை செய்து வரும் வில்லிசை மாதவி இந்த கலையில் தான் சந்தித்து வரும் சவால்களை பற்றி ஒன் இந்தியா தமிழ் சேனலுக்காக நம்மோடு பகிர்ந்து இருக்கிறார்.

வில்லிசை கலை
வில்லிசை என்பது தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கலைகளில் ஒன்று. ஆரம்ப காலங்களில் இருந்து வில்லுப்பாட்டு கோவில் கொடைகளில் முக்கிய பங்கு வகிக்கும். இன்று வாழ்க்கை முறை மாறி இருக்கும் சூழ்நிலையிலும் பல இடங்களில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இறை வாழ்த்து, முதல் சுவாமி பிறப்பு, வளர்ப்பு, உச்சாட்டம், படுகளம், ஊட்டுக்களம், முத்துவரம் படுகளம், எழுப்புதல், கும்மி என இந்து சமயத்தின் பல கிராமிய கதைகளையும், தமிழ் இலக்கியங்களையும், கடவுள்களின் கதைகளையும் இசையோடு சேர்ந்து பாடப்படும் ஒரு அற்புதமான கலை தான் வில்லுப்பாட்டு. இது குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற ஒன்று. அது மட்டும் அல்லாமல் கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களிலும் வில்லிசை என்றும் நாஞ்சில் வசை என்று அழைக்கப்படுகிறது. இந்த வில்லிசையில் உடுக்கை,தாளம், குடம், கட்டை போன்ற இசை கருவிகளை வைத்துக்கொண்டு ஒரு குழுவாக பிரிந்து கோவில் திருவிழாக்களில் பக்தர்களை கவர்ந்து பல புராணக் கதைகளையும், வரலாறுகளையும் எடுத்து உரைத்து வருவார்கள். இது 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட்டாக இருந்த நிலையில், தற்போது 2k கிட்ஸ்கள் பலர் வில்லிசை என்றால் என்ன? என்று கேட்கும் நிலைமை வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் 2k கிட்ஸ் ஆக இருக்கும் மாதவி நான் இதற்கெல்லாம் விதிவிலக்கு. என்னுடைய கலையை அழிந்து போக விடமாட்டேன் என்று புதிய முயற்சி எடுத்து வருகிறார்.

வில்லிசையில் ஏற்பட்ட ஆர்வம்
வில்லுப்பாட்டு மாதவிக்கு தற்போது தான் 18 வயது நிறைவடைந்து. 19 வயது பிறந்திருக்கிறதாம். நான்கு வருட காலமாக இந்த தொழிலை சந்தோஷமாக செய்து வரும் மாதவி சின்ன வயதில் தன்னுடைய பாட்டி ஊரான ரெட்டியார்பட்டிக்கு செல்லும் போது அங்கே கோவிலில் தொடர்ந்து ஒரே தரப்பினர் வில்லிசை பாட்டு பாடி இருக்கிறார்களாம். அப்போது அந்த பாட்டை இவர் ரசித்து கேட்டு இருக்கிறார். அதே நேரத்தில் அவருடைய வீட்டிலும் நம்ம வீட்டில் யாராவது வில்லுப்பாட்டு பாடினால் நல்லா இருக்கும் என்று கூறினார்களாம். ஏற்கனவே மாதவிக்கு இரண்டு அக்கா மற்றும் ஒரு தம்பி இருக்கின்றனர். அவருடைய அக்கா இருவரும் இதில் ஆர்வம் இல்லாததால் மாதவிக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக நான் இந்த கலையை கற்றுக் கொள்கிறேன் என்று வீட்டில் கூறி இருக்கிறார். வீட்டில் உள்ளவர்களும் இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லையாம், உறுதுணையாக இருந்திருக்கின்றனர். அப்போது மாதவி ஒன்பதாம் வகுப்பு தான் படித்திருக்கிறார். வில்லுப்பாட்டு முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிலே கவனத்தை செலுத்தி இருக்கிறார். பின்பு பள்ளிக்கு செல்லாமல் விலகி இருக்கிறார். தற்போது தொலைதூர கல்வியில் பத்தாம் வகுப்பு எழுதி பாஸ் பண்ணி இருக்கிறார். இனி தொடர்ந்து படிப்பிலும் கவனத்தை செலுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.

முதல் அனுபவம்
வில்லுப்பாட்டின் முதல் அனுபவமே அவருடைய சொந்த ஊரில்தான் கிடைத்திருக்கிறது. அவருடைய ஊர் கோவிலில் முதல் முறையாக மாதவி வில்லிசை பாடும் போது ஆரம்பத்தில் பலர் பெண் பிள்ளையை இப்படி பாட வச்சிருக்காங்களே!? என்று இளங்காரமாக கேட்டாலும், பிறகு இவருடைய பாட்டு திறமையை பார்த்து பலர் பாராட்டி இருக்கிறார்கள். பிறகு அதைத்தொடர்ந்து இதுவரைக்கும் 300க்கும் மேற்பட்ட பங்க்ஷன்களில் இவர் வில்லிசை இசைத்து இருக்கிறாராம். முதல்முறையாக தன்னுடைய ஊரை விட்டு வேறு கோவிலில் பாடும் போது இவருக்கு
சிறிது நடுக்கம் இருந்ததாகவும், அதற்குப் பிறகு அது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் குழந்தையாக இருக்கும் போது கோவிலுக்கு சென்று சாமியின் அருகில் நிற்பதற்கே பயந்து விடுவாராம். சாமி ஆடும் நபர் பக்கத்தில் வந்துவிட்டால் வீட்டிற்கு ஓடி வந்து விடும் இவர், பிறகு இப்படி ஒரு கலைஞராக மாறி பல பேருக்கு தன்னுடைய பாட்டாலே அருள் வர வைத்துக் கொண்டிருக்கிறாராம்.

மறக்க முடியாதது
மறக்க முடியாத அனுபவம் என்று பல விஷயங்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதில் நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு கூட தனக்கு நடந்து இருக்கிறது. குறிப்பாக சில ஊர்களில் பெண்கள் குரூப் புடவை எடுத்தால் எனக்கும் ஒரு புடவை எடுத்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் பாட்டு பாடிய பிறகு பலர் எங்களுக்கு பணமாலை போட்டு இருக்கிறார்கள். ஊரில் இருப்பவர்கள் பலர் பாராட்டி பொன்னாடை போர்த்தி இருக்கிறார்கள். அப்படி போர்த்திய பொன்னாடைகளை சேகரித்து வைத்திருக்கிறேன். இதுவெல்லாம் எங்களுடைய கலைக்கும், திறமைக்கும் கிடைக்கும் பாராட்டு என்கிற போது மேலும் சந்தோஷமாகவும், உத்வேகமாகவும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

மாற்ற நினைப்பது
சமுதாயத்தில் இந்த மாதிரி செயல்கள் எல்லாம் மாறினால் இன்னும் வில்லிசை கலை மேலும் வளரும் என்று நினைப்பது என்றால்? அது சில ஊர்களில் சில இளைஞர்கள் செய்வதுதான். நாம் அந்த இடத்தில் கடவுளை நினைத்து அவருக்காக பாட்டு பாடி கொண்டிருக்கும்போது, சிலர் அருகில் வந்து கத்திக் கொண்டிருப்பது, விசில் அடித்து கொண்டிருப்பது, நம்முடைய அனுமதி இல்லாமலேயே போட்டோ எடுத்து நம்மை பாட விடாமல் நக்கல் செய்து கொண்டிருப்பது போன்ற செயல்கள் தான் வருத்தமாக இருக்கிறது. பல ஊர்களில் கிராமங்களில் எங்களுடைய கஷ்டங்களை புரிந்து கொண்டு எங்களுக்காக அங்கு இருப்பவர்களை அப்புறப்படுத்தி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் அதை கண்டு கொள்வதில்லை. அது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஒரு ஊருக்கு பாட போகிறோம் என்றால் அங்கே சரியான கழிப்பறை வசதியோ, சரியான சாப்பாடும் சில நேரங்களில் கிடைப்பதில்லை. அப்போது அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களைப் போன்று வரும் தொழிலாளர்களுக்கு தனியாக ஒரு அறை எடுத்து தந்து உதவினால் நன்றாக இருக்கும் என்றும் கூறி இருக்கிறார்.

பரம்பரை சார்ந்து வருகிறதா
ஆரம்பத்தில் இந்த கலை பரம்பரை சார்ந்து வந்திருக்கிறது. குறிப்பாக ஒரு வீட்டில் அப்பா வில்லுப்பாட்டுக்காரராக இருந்தால் அவரை தொடர்ந்து அவருடைய மகன், அவரை தொடர்ந்து பேரன் என அப்படி பலர் வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை. என்னுடைய வீட்டிலும் இதற்கு முன்பு யாருமே வில்லிசை பாடியது இல்லை. நான் தான் முதல்முறையாக பாடுகிறேன். இதுபோல பலரும் இந்த கலையை அழிந்து விடாமல் காப்பாற்றி வர வேண்டும். இது கடவுளுக்கு செய்யும் செயலாக தான் நான் பார்க்கிறேன் என்றும்,இதில் நம்முடைய வரலாறு இனிவரும் தலைமுறைக்கு எடுத்து சொல்லும் கலைகளில் ஒன்றாக இதுவும் இருக்கிறது. இதில் முன்பு இருந்தவர்கள் மாதிரி இப்போ நிறைய பேர் இல்லை. இன்னும் பத்து வருடங்கள் கழித்து பார்த்தால் வில்லுப்பாட்டு கலைஞர்கள் என்று ஒரு சிலர் கூட இருப்பார்களா? என்கிற நிலைமை வந்து விட கூடாது என்று வில்லிசைக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் என்னுடைய வாழ்க்கை இலட்சியமே வில்லிசையில் சாதிப்பது தான். என்னுடைய உயிர் மூச்சு வில்லிசை மேடையிலே பிரிய வேண்டும் என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

பிரபலமாக காரணம்
வில்லிசை மாதவி இந்த கலையை ஒரு மாத காலம் கற்றிருக்கிறார். அப்போது அவருக்கு அங்கே குரு வணக்கம் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். பிறகு தன்னுடைய முயற்சியாலே குறுகிய காலத்திற்குள் பல விஷயங்களை கற்று தேர்ந்தெடுக்கிறார். பல கோவில்களின் வரலாறுகளை தெரிந்து கொண்டு அதை அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்த கருத்துக்களையும் கூறி அந்த இடத்தை கலகலப்பாக மாற்றி சமூக வலைத்தளத்தில் தற்போது அதிகமாக கலக்கி வரும் வில்லிசை மாதவி இப்ப வரைக்கும் எந்த ஒரு சமூக வலைத்தளத்தை பயன்படுத்தவில்லை. அவர் சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு அக்கவுண்டும் இல்லாமல் தான் இருந்து வருகிறார். ஆனால் இணையத்தில் கொடி கட்டி பறக்கிறது அவருடைய வில்லிசை வீடியோ. தன்னுடைய திறமையாலும் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறார். இவருடைய வில்லிசை கச்சேரியை நம்ம ஊரிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அவரை தொடர்புகொள்ள வேண்டிய செல்போன் நம்பர் இதுதான். 8098649680 மற்றும் +919940805380.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications