வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாடகை வீட்டில் இருக்கும்போது, வீட்டின் பழுதுபார்ப்பு செலவுகளை நைஸாக குடியிருப்போர் தலையில் ஹவுஸ் ஓனர்கள் கட்டிவிடுவது உண்டு. ஆனால், எல்லா செலவையும் குடியிருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று சட்டம் சொல்கிறது. அப்படியெனில் எந்த செலவுகள் யாருடையது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

பொதுவாக, ஒரு வாடகை ஒப்பந்தத்தில் பழுதுபார்ப்பு குறித்த விதிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், சட்டம் யார் யாருக்கு என்ன பொறுப்பு என்பதை வரையறை செய்திருக்கிறது.

Tenant vs Landlord

வீட்டு உரிமையாளரின் பொறுப்புகள்

வீட்டின் கட்டமைப்பைச் சார்ந்த பெரிய பழுதுகளுக்கு உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும்.

  • சுவர்களில் ஏற்படும் விரிசல்கள் மற்றும் கட்டுமானக் குறைபாடுகள்.
  • வீட்டின் வெளிப்புறத்தில் வர்ணம் பூசுதல்.
  • மின்சார வயரிங் (Wiring) தொடர்பான பெரிய பிரச்சனைகள்.
  • தண்ணீர் தொட்டி மற்றும் பிரதான குழாய் அமைப்புகளில் ஏற்படும் கசிவுகள்.
  • கதவு மற்றும் ஜன்னல் நிலைகளில் ஏற்படும் பாதிப்புகள்.

வாடகைக்கு இருப்போரின் பொறுப்புகள்

அன்றாடப் பயன்பாட்டினால் ஏற்படும் தேய்மானங்கள் மற்றும் சிறிய பழுதுகளை வாடகையாளர் கவனிக்க வேண்டும்.

  • மின்சார சுவிட்சுகள் மற்றும் சாக்கெட்டுகள் மாற்றுவது.
  • பல்புகள் மற்றும் டியூப் லைட்கள் மாற்றுவது.
  • குழாய் வாஷர்கள் (Tap washers) மற்றும் சிறிய கசிவுகளைச் சரிசெய்தல்.
  • கழிவறை மற்றும் சமையலறைச் சாதனங்களின் சிறிய பராமரிப்பு.
  • வாடகையாளர் கவனக்குறைவால் ஏற்படும் சேதங்கள்.

வாடகை சட்டம் கூறுவது என்ன?

இந்திய அரசின் மாதிரி வாடகை சட்டத்தின்படி, பழுதுபார்ப்புச் செலவுகளை இரு தரப்பினரும் சுமூகமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதாவது, அவசியமான ஒரு பழுதுபார்ப்பை உரிமையாளர் செய்ய மறுக்கும் பட்சத்தில், வாடகையாளர் அதைச் செய்துவிட்டு, அந்தச் செலவை மாத வாடகையில் கழித்துக்கொள்ள சட்டத்தில் இடமுண்டு. ஆனால், இதற்கு முன்னதாக உரிமையாளருக்கு முறையான அறிவிப்பு (Notice) வழங்கப்பட வேண்டும்.

வாடகையாளர் ஒரு சேதத்தை ஏற்படுத்திவிட்டு அதைச் சரிசெய்ய மறுத்தால், உரிமையாளர் அந்தத் தொகையை வாடகையாளர் வழங்கிய முன்பணத்தில் இருந்து கழித்துக்கொள்ளலாம்.

பிரச்சனையை தவிர்க்க

வாடகைக்கு போகும் போதே, எந்தெந்த பழுதுகளுக்கு யார் பொறுப்பு என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வீட்டிற்குள் குடியேறும் முன்பே மின்சாரம் மற்றும் பிளம்பிங் வசதிகள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குடியேறும்போது வீட்டில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், அதை புகைப்படம் எடுத்து உரிமையாளரிடம் தெரிவிப்பது பின்னாளில் எழும் சிக்கல்களைத் தவிர்க்கும். எந்தவொரு பழுது ஏற்பட்டாலும், அதை உடனடியாக உரிமையாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+