தந்தை ஸ்தானத்தில் பால்வாக்கர் மகள் திருமணத்தை நடத்திய வின் டீசல்...உருகும் ரசிகர்கள்
சென்னை: பால் வாக்கரின் மகள் திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது அதற்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பால் வாக்கர் தற்போது உயிரோடு இல்லாத காரணத்தினால் அவருடைய நெருங்கிய நண்பரான வின் டீசல் அவர் ஸ்தானத்தில் திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார்.
பால் வாக்கரின் மகளின் திருமணத்தில் அவர் இல்லாததை நினைத்து பால் வாக்கரின் ரசிகர்கள் உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்க நடிகர்
பிரபல ஹாலிவுட் நடிகரான பால் வாக்கர் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இவர் ஒரு திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல், திரைப்படங்களில் கார் ரேஸ்ஸராகவும் பலருக்கும் அறிமுகம் ஆனவர். அவர் நடித்த Fast & Furious சீரிஸ் படங்களில் பிரபல ஹாலிவுட் கதாநாயகன் வின் டீசலுடன் இணைந்து நடித்தார். இதில் அவர்கள் நட்பு இறுகியது. வின் டீசல் தங்கையை மணமுடிப்பவராக வருவார். இவர்களை காக்க வின் டீசல் உயிரைக்கொடுக்கவும் தயாராவார். பால்வால்கரும், வின் டீசலும் நெருங்கிய நண்பர்கள். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாகவே பயணித்துக் கொண்டிருந்தனர். படத்தில் தாய்மாமனாக பால்வால்கர் மகனை அரவணைப்பார். பால்வால்கர் மறைவுக்குப்பின் நிஜ வாழ்க்கையிலும் தாய் மாமனாக தந்தை ஸ்தானத்தில் வின் டீசால் செய்த செயல் ரசிகர்களால் நெகிழ்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.

உலகம் போற்றும் நட்பு
பால் வாக்கர் மற்றும் வின் டீசல் இருவரும் பல விருதுகளையும் ஒன்றாக வாங்கி இருக்கின்றனர். விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கூட இவர்களுடைய நட்பினை பார்த்து பல ரசிகர்கள் மெச்சி போய் இருக்கின்றனர். வால்க்கர் சினிமாவில் மட்டுமல்லாமல் கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் ஆனவர். அவர் 30க்கும் மேற்பட்ட கார்களை வைத்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக வால்க்கரும், அவருடைய நண்பரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்து விட்டார். தனது 40 வயதில் அவர் இறந்து விட்டதால் அவருடைய ரசிகர்களும், நண்பர்களும் ரொம்பவே வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

தந்தையாக மாறிய நண்பன்
மறைந்த நடிகர் பால் வாக்கரின் 22 வயது மகளும் மாடலுமான மீடோ வாக்கர் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவருடைய திருமண போட்டோக்களும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்ட் போட்டிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு பலர் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கும் போது, பலர் உருக்கமான வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். அதில் திருமணத்தின் போது பால் வாக்கரின் இடத்தில் வின் டீசல் இருப்பது பலருக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறதாம். தன்னுடைய நண்பரின் மகளை தன் மகள் போல இவர் பார்த்துக் கொள்வதை பார்த்து பலர் இவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

உருக்கமான கேப்ஷன்
மீடோ வாக்கர், டொமினிக்கன் குடியரசில் நடிகர் லூயிஸ் தோர்ன்ட்ன் ஆலன் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். தன்னுடைய திருமண படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மீடோ வாக்கர் இன்று பதிவிட்டிருக்கிறார். அதில் ஒரு சில உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். மணப்பெண்ணின் தந்தை நடந்து செல்லும் இடத்தில் வின் டீசல் மணப்பெண்ணை கைபிடித்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். இந்த போட்டோவிற்கு மீடோ வாக்கர் ஐயோ என்று கேப்ஷன் கொடுத்து போஸ்ட் போட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications