வினோதினி வீட்டை விட்டு ஓடிப் போயிட்டாளாம்.. பாவம் செம்பா மாட்டிக்கிட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் செம்பாவின் நிலைமைக்காகவே மக்களால் விரும்பி பார்க்கப்படுதுன்னு பேசிக்கறாங்க.

அதுகாகாத்தன அந்த புள்ளைக்கு பாவம் அடிமேல் அடி, கஷ்டத்துக்கு மேல கஷ்டம்னு கொடுக்கறாங்க. அப்பப்போ சப்போர்ட் செய்து புருஷனா லட்சணமா ரொமான்ஸும் செய்துகிட்டு இருந்தான்.

Vinothini runs away from home

இப்போ அதுவும் இல்லை... செம்பா வினோதினியின் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண போக , வீடே அவளை வெறுக்குது. புருஷன் கார்த்திக்கும், செம்பாகிட்ட வினோதினி கல்யாணம் நின்னு போனது நின்னு போனதுதான். அவளுக்கு இனிமே ஹரீஷ் கூட கல்யாணம் நடக்காது. நானா பார்க்கற மாப்பிள்ளைதான் வினோதினிக்கு.. ஏதாவது சொல்லிக் குடுத்து விநோதினியை ஹரிஷோட சேர்த்து வைக்க நினைச்சே..அவ்ளோதானான்னு எச்சரிக்கறான்.

அதோட, கோயிலில் போயி வினோதினிக்கு வேற மாப்பிள்ளைதான் பார்ப்பேன்.. இது சத்தியம்னு சாமிகிட்ட அடிச்சு சத்தியம் செய்திருக்கேன்னு வேற சொல்றான். செம்பா ஒண்ணும் சொல்லாம இருக்கா.

Vinothini runs away from home

ராத்திரி, வினோதினி வீட்டை விட்டு ஓடிப்போக நினைக்கறா.. விரலில் ஆர்மோனியம் வாசிச்சு ரொமான்ஸ் பண்ணினானே அந்த ஹரீஷ் கூட. மூத்த அண்ணி வந்து பார்க்க, வினோதினி அப்போதுதான் கிளம்பு தயாராகறா.

என்ன இன்னும் தூங்காம இருக்கேன்னு அண்ணி கேட்க, செம்பா அண்ணி வரேன்னு சொன்னாங்க அதான் அண்ணி முழிச்சுகிட்டு இருக்கேன்னு வாய்க்கு வந்ததை சொல்லிடறா. அதுக்கு ஏத்த மாதிரி, நைட்டு கேட் தொறந்து இருக்க, அதை பூட்ட செம்பா போறா.

Vinothini runs away from home

அதை பார்த்த பெரிய அண்ணி, என்ன செம்பா இந்த நேரத்துல கேட்டை தொறந்துகிட்டு இருக்கேன்னு கேட்கறாங்க .இல்லை அண்ணி.. கேட் திறக்கற சத்தம் கேட்டுச்சு.. வந்து பார்த்தேன்.. திறந்து கெடக்குன்னு.. அதான் பூட்டினேன்னு சொல்றா செம்பா.

இல்லையே என் வீட்டுக்காரர்தானே வந்து பூட்டிட்டு போனார்னு சொல்லிட்டு போறாங்க. கார்த்தாலே பார்த்தா வினோதினியை காணோம்.. ஹரீஷ் கூட ஓடிப்போயிட்டா... ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு சொல்ற மாதிரி இதுக்கு செம்பாதான் உடந்தைன்னு பெரிய அண்ணி சொல்ல செம்பா தப்பு செய்யாம மாட்டிக்கிட்டா...

கார்த்திக் அவளை மிரட்டறான்..அடிக்க போறான்..இனியும் சும்மா அழுகாச்சியைத்தான் நீங்க பார்க்க போறீங்களாடா..முடியலை..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+