மனைவி கணவன் படுக்கையில் வேறொரு பெண்.. அதிர்ச்சியில் நின்ற விபஞ்சிகா! இது அநாகரீகத்தின் உச்சக்கட்டம்
சென்னை: என்சிஆர்பி புள்ளிவிவரப்படி, கடந்த 5 வருடத்தில், இந்த நாட்டில், கணவனால் கொலை செய்யப்பட்டு இறந்த மனைவிகள் 35 ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள்.. இதில் தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை அதிகமில்லை என்றாலும், அது தீராமல் உள்ளது.. விபஞ்சிகா சம்பவம் துபாயில் நடந்திருந்தாலும், அவர்களது திருமணம் கேரளாவில் நடந்துள்ளது, விபஞ்சிகாவுக்கு ஒரு நியாயத்தை கேரள போலீஸார் பெற்றுத்தர வேண்டும்" என்று மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கேரளாவை சேர்ந்தவர் நிதிஷ் .. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வேலை பார்த்து நிதிஷூடன் அவருடைய தந்தை மற்றும் தங்கை நீத்து உள்ளிட்டோர் தங்கியிருக்கிறார்கள்.. திருமணத்துக்கு பிறகு கொல்லத்தை சேர்ந்த விபஞ்சிகாவும், நிதிஷூடன் ஷார்ஜாவில் வசித்து வந்தார்..

ஆனால், நாளுக்கு நாள் வரதட்சணை கொடுமைக்கு அதிகமாகி, கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார் விபஞ்சிகா.. கேரளாவையே உலுக்கி வரும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது..
பட்டினி, காயங்கள்
இந்நிலையில், King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ் வேந்தன், "நகையை இன்னும் வாங்கிட்டு வா என்று விபஞ்சிகாவுக்கு டார்ச்சர் தர துவங்கியிருக்கிறார் நிதிஷ்.. "என் அம்மாவை இதுக்கு மேல் கஷ்டப்படுத்த முடியாது, அவங்களே பாவம்" என்று சொல்லியிருக்கிறார்..
அப்போது முதலே விபஞ்சிகாவுக்கு சாப்பாடு சரியாக தராமல் பட்டினி போட்டுள்ளனர்.. தாறுமாறாக அடித்துள்ளனர்.. முகம், தலை, உடம்பெல்லாம் கடுமையான காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்..
விபவி பெண் குழந்தை
உடுத்திக் கொள்ள நல்ல டிரஸ்ஸையும் தருவதில்லை.. ஒரு ரூமிலிருந்து இன்னொரு ரூமுக்கு செல்லவும் நிர்வாணமாகவே செல்ல வேண்டியிருந்திருக்கிறது.. நாளடைவில் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.. அப்போது விபவி என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளது..
இதற்கு பிறகு வேறு பெண்களை அழைத்து கொண்டு, வீட்டுக்கு வந்துள்ளார் நிதீஷ்.. ஒரே கட்டிலில், அந்த பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.. இதை விபன்சிகா தட்டிக்கேட்டதற்கு, "இஷ்டம் இருந்தால் இரு, இல்லாட்டி வெளியே போ" என்று நிதீஷ் சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தை மாமனாரிடம் சொன்னதற்கு, "ஆம்பள என்றால் இப்படித்தான் இருப்பாங்க" என்று சொல்லி, மருமகளிடமும் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார்..
வீடியோ ஆதாரங்கள்
இதை கணவரிடம் சொன்னதற்கு, என் அப்பாவுக்கும் சேர்த்துதான் உன்னை கல்யாணம் செய்துள்ளேன், அப்பாவை அட்ஜெஸ்ட் செய்துக்கோ என்று விபஞ்சிகாவிடம் சொல்லி உள்ளனர்.. விபஞ்சிகா அழகாகவும், தலைமுடி நீளமாகவும் இருந்ததால், அவரை மொட்டையடித்து விட்டுள்ளனர்..
சொந்த ஊருக்கும் குழந்தையை தூக்கி கொண்டு போக முடியாத சூழ்நிலையில்தான், அனைத்து ஆதாரங்களையும், வீடியோக்களையும் ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்துவிட்டு, கடிதம் ஒன்றையும் கைப்பட எழுதிவிட்டு, குழந்தையை தலைகாணியை வைத்து கொன்றுவிட்டு, விபன்சிகாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஃபேஸ்புக்கில் விபஞ்சிகா அப்லோடு செய்த வீடியோக்களை , சதீஷ் தரப்பினர் டெலிட் செய்துள்ளனர்.. ஆனால், அதற்குள் விபன்சிகா உறவினர்கள், அந்த வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்துவிட்டார்கள்..
இது அநாகரீகத்தின் உச்சக்கட்டம்
பெண்களுக்கு சகித்து கொண்டு, பொறுத்து போகும் தன்மை அதிகம்.. ஆனால் விபஞ்சிகா உச்சக்கட்ட முடிவை எடுத்துள்ளார்.. குழந்தையை உயிருடன் வைத்துவிட்டுபோனாலும், கொன்றுவிடுவார்கள் என்பதால், தன்னுடனே கொன்றுவிட்டார்.. இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாலும், அது வீட்டுக்கு வெளியே இருப்பது வேறு.. ஆனால், நிதீஷ், விபஞ்சிகா முன்னிலைலேயே இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டுள்ளார்.. இது அநாகரீகத்தின் உச்சக்கட்டமான செயலாக பார்க்கிறேன்..
இந்த விஷயத்திலும் பெண்ணின் பெற்றோரையே காரணம் சொல்கிறேன்.. ஏற்கனவே இப்படித்தான் ஒரு இந்திய பெண்ணை, அமெரிக்காவுக்கு அழைத்து சென்று, ஓடும் காரிலிருந்து கதவை திறந்து, அந்த பெண்ணை தள்ளி விட்டு கொலை செய்தார்கள்.. அந்த சம்பவத்தை நினைத்து பார்த்திருக்க வேண்டும்.. ரிதன்யா விவகாரத்துக்கு பிறகாவது, விபன்சிகாவின் வீட்டில் யோசித்திருக்க வேண்டும்.
அணு அணுவாக சித்ரவதை
இதனிடையே, விபஞ்சிகாவை போலவே அதுல்யா என்ற கொல்லத்தை சேர்ந்த பெண்ணும் இதே கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்.. இந்த கணவரின் பெயர் சதீஷ்..
எந்த பெண்ணும் அனுபவிக்காத கொடுமையை எல்லாம் அனுபவித்து விட்டார் அதுல்யா.. போதையில் வீட்டில் அடைத்து வைத்து, கணவன் சதீஷ் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.. கணவனால் உடம்பெல்லாம் அணுஅணுவாக கடித்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.. தன்னுடைய உடம்பிலுள்ள காயங்களை போட்டோ, மற்றும் வீடியோ எடுது உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications