சின்ன பையனை சின்னாபின்னமாக்கிட்டாரே பாலா.. விஷால் "மாறு கண்ணை" தைச்சிட்டாங்களே.. போட்டுடைத்த பிரபலம்
சென்னை: விஷால் உடல்நிலை இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணமே டைரக்டர் பாலாதான். அவன் இவன் படத்தில், மாறுகண் கேரக்டர் நடிக்க வேண்டும் என்று சொல்லவும், பாலாவின் பேச்சை கேட்டுக்கொண்டு, கண் இரண்டையும் மாறுகண் போல தைத்துக்கொண்டார் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது: "கண்டிப்பாக மகதகராஜா விழாவுக்கு விஷால் வரவேண்டும் என்று சொன்னதால், தவிர்க்க முடியாமல் கலந்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. அங்கே மைக்கை பிடித்து விஷாலால் பேச முடியல. வாய் குழறுவது தெரிந்து.

விஷால் இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணமே டைரக்டர் பாலாதான். அவன் இவன் படத்தில், மாறுகண் கேரக்டர் நடிக்க வேண்டும் என்று சொல்லவும், பாலாவின் பேச்சை கேட்டுக்கொண்டு, கண் இரண்டையும் மாறுகண் போல தைத்துக்கொண்டார் விஷால். மாறுகண்போல அந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று பலரும் நினைத்தார்கள்.. ஆனால், விஷாலின் 2 கண்களும் ஆபரேஷனில் தைக்கப்பட்டது.
மாறுகண்: 15 நாள் ஷூட்டிங் எடுத்துவிட்டு, விஷாலை விடுவித்திருக்கலாம். ஆனால், 2 வருஷம் இதே மாதிரி மாறுகண் வைத்து ஷூட்டிங் எடுத்தார் பாலா. கடைசியில் நரம்பு தளர்ச்சி நோய் வந்துவிட்டது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் பாலாதான்.
சண்டைக்கோழி 1-ல் விஷாலை பார்த்தாலே, உடம்பு முரட்டுத்தனமாக இருக்கும். மிகசிறந்த நடிகரான அவரை அழைத்து சென்று, பெண் தன்மையாக அந்த படத்தில் நடிக்க வைத்தார் பாலா. எப்போதுமே ஆண் தன்மை அதிகமாக உள்ள ஆண்களை, அதிகமாக பரதநாட்டியம் கற்றுக் கொள்ளக்கூடாது என்பார்கள். சிவசங்கர் என்ற பிரபல நடனமாஸ்டர், நளினத்தன்மையுடன்தான் கடைசிவரை இருந்தார். அப்படியே அவருக்கு பழகிவிட்டது.
சேது விக்ரம்: விக்ரமையும் சேது படத்தில் இளைக்க வைத்து, சாப்பாடு தராமல், என்னென்ன அலங்கோலம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து, கடைசியில் விக்ரம் பாலாவிடமிருந்து தப்பிச்சிட்டார். அடுத்ததாக நந்தாவில் சூர்யா தப்பிச்சிட்டார்.. பிதாமகனில் 2 பேருமே தப்பிச்சிட்டாங்க.,.. முடியை எல்லாம் செம்பட்டையாய் மாற்றி, பல்லில் கறைபடிந்து விக்ரம் பிதாமகனில் காணப்பட்டார்.
நாம எத்தனை பேரை நடைமுறை வாழ்க்கையில் பார்க்கிறோம். கிராமங்களில் பார்க்கிறோம்.. ஆனால், எல்லாரும் இப்படியா தோற்றத்தில் இருக்காங்க.. காரணம் என்னவென்றால் பாலாவின் சிந்தனை குரோதமானது.. சமுதாயத்தை அவர் பார்க்கும் பார்வையே மோசமானது.
பாலுமகேந்திரா: சேது படத்தை பாலுமகேந்திராவிடம் போட்டு காட்டினார் பாலா. ஆனால் பாலுமகேந்திரா எதுவுமே படத்தை பற்றி பேசாமல் போய்விட்டாராம்.. இதை நேரடியாகவே பாலுமகேந்திராவிடம் பாலா கேட்டதற்கு, "நீ என்னுடைய குழந்தை.. எப்படி உன்னால் இவ்வளவு கோரமாக சிந்திக்க முடிந்தது? இப்படியெல்லாம் ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா?" என்று கேட்டாராம்.
பாலா இயற்கையாகவே சைக்கோ மாதிரியான கேரக்டர். எல்லாவற்றையும் துச்சமாக நினைப்பவர்.. யாரையுமே மதிப்பது இல்லை.. திமிர்தனமாக நடந்து கொள்வார்.. விக்ரம் மகன், அதர்வா, எல்லாருமே அவரிடமிருந்து தப்பிச்சிட்டாங்க. விஷாலுக்கு கண்ணில் சிகிச்சை முடிந்து, தையல் பிரித்ததுமே, பயங்கரமான தலைவலி வந்துள்ளது.. நரம்பு பிரச்சனை வந்தால்தான் இப்படியொரு தலைவலி வரும். இதனால் மிகவும் அவஸ்தைப்பட்டார்.. மார்க் ஆண்டனி ஷூட்டிங்குக்கு அவரால் வரவே முடியல.
சின்ன பையன்: ஒரு சின்ன பையனை கொண்டுபோய், சின்னாபின்னமாக்கிவிட்டார் பாலா.. விஷால் போல, கண்ணை தைத்துக்கொண்டு நடிக்க தயாரா? என்று பாலாவை நான் கேள்வி கேட்கிறேன். வித்தியாசமான கேரக்டர் என்பதற்காக, ஒரு சின்னப்பையனின் வாழ்க்கையை கெடுப்பீங்களா? இன்னும் கல்யாணம்கூட ஆகல,. குழந்தைக்குட்டி எதுவுமே இல்லை.. இன்னும் விஷாலுக்கு சிகிச்சை நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாலா தன்னுடைய சிந்தனைக்கு, ஒரு பையனை கொண்டுபோய் பணயம் வைத்துவிட்டார்
மூளையில் நரம்பு பிரச்சனையில் சின்ன கோளாறு என்றாலும் அது சிக்கலாயிடும். இதுபோக விஷாலுக்கு கெட்ட பழக்கமும் உள்ளது.. இது அவரது தனிப்பட்ட விஷயம் என்றாலும், இதுவும் அவரது உடல்நிலை குறைவுக்கு காரணம். எந்த பழக்க வழக்கமாக இருந்தாலும் ஒரு அளவு இருக்கு.. நவரச நடிகர் கார்த்திக் பழக்கவழக்கமும் இப்படித்தான். மேடையில் அவர் பேசினால் காமெடியாக இருக்கும்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications