லாஸ்ட் வேஸ்ட் பெஸ்ட்.. திட்டிய ஆன்மீகவாதி டி. ராஜேந்தர்.. கடந்து போன சாய் தன்ஷிகா.. கைகொடுத்த விஷால்
சென்னை: எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், விஷாலின் பெற்றோருக்கும், தன்னுடைய மகனுக்கு வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். இப்போது திருமண அறிவிப்பு வந்துள்ளது அனைவருக்குமே மகிழ்ச்சிதான்" என்று விஷால் - சாய் தன்ஷிகா குறித்து கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அத்துடன் சாய் தன்ஷிகா பற்றியும் பெருமையுடன் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
Cheyyar Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "அவள் பெயர் தமிழரசி என்ற படத்தை மீரா கதிரவன் எடுத்தார்.. இப்போதும் இஸ்லாத்தை பின்னணியாக வைத்து கடையநல்லூர் பகுதியை சுற்றி எடுத்து கொண்டிருக்கிறார்.. கஸ்தூரி ராஜா அதில் முதன்மையான கேரக்டரில் நடிக்கிறார்.. அந்த படம் பிரமாதமாக வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

இவ்வளவு கோபமா
இலக்கியத்திலிருந்து சினிமாவுக்கு வந்த மீரா கதிரவன், கவனிப்படக்கூடிய டைரக்டராக வரவேண்டியவர். 7 வருடங்களுக்கு முன்பு விழித்திரு என்ற படத்தை துவங்கினார்.. தி.நகரில் இதற்கான விழா நடைபெற்றது..
அப்போது மேடையில் டி.ராஜேந்தர் பெயரை சொல்லவில்லை என்பதற்காக, பயங்கரமாக தன்ஷிகாவை திட்டிவிட்டார்.. எதுக்காக டி.ஆர். அவ்வளவு கோபப்பட்டார் என்று தெரியவில்லை... அவர் திட்டியதை பார்த்து, சாய் தன்ஷிகா கண் கலங்கி நின்றார்.
அப்போது ஒட்டுமொத்தமாக தன்ஷிகா மீதுதான் அனைவரின் கவனமும் திரும்பியது.. டி.ஆர். இப்படி பேசக்கூடியவர் இல்லையே என்று மீடியாக்களும் கடும் அதிர்ச்சியடைந்தன. அரங்கமே அமைதியாகிவிட்டது.. இது தொடர்பாக டி.ஆரை பலரும் விமர்சித்திருந்தனர்.. விழித்திரு படம் சின்ன பட்ஜெட் என்பதால், ஏதாவது பரபரப்பாக பேசி, அந்த படத்துக்கு புரமோஷன் தர
வேண்டும் என்பதற்காக டி.ஆர். இவ்வாறு பேசினாரா? என்றுகூட சந்தேகம் எழுந்தது.
கடவுள் பக்தி கொண்டவர்
இந்த சம்பவம் முடிந்த 3 மாதம் கழித்து, தன்ஷிகா, சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நான் கோபக்காரி தான்.. டி.ஆர். என்னை பேசியபோது கோபம் வரத்தான் செய்தது.. ஆனால் சமீபகாலமாக ஆன்மீகத்தில் நான் இருக்கிறேன்.. யோகா செய்து வருகிறேன்.. அதனால் என்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டேன்..
தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லக்கூடிய டி.ஆர், இவ்வளவு கோபமாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. கடவுள் பக்தி கொண்டவர்கள், ஒரு பெண்ணை மேடையில் வைத்து இப்படி யாருமே பேசமாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவில் போராடித்தான் நடிக்க வந்தார் தன்ஷிகா.. எல்லா திறமை இருந்தும், 2ம் நிலை கதாநாயகி அளவுக்குத்தான் அவரால் உயர முடிந்தது.. எனினும், தற்போது யாருமே எதிர்பார்க்காமல், விஷால் தன்னுடைய திருமணத்தை அறிவித்துவிட்டார்.
50 வயது தாண்டிய விஷாலுக்கும் மன ரீதியான, உடல் ரீதியான பிரச்சனை உள்ளது.. பிரியாணி சாப்பிடும்போது கடவுளை வேண்டியிருந்தது, மிகப்பெரிய அளவில் டிரோல் செய்யப்பட்டிருந்தது.
காதல், நிச்சயதார்த்தம்
மதகதராஜா படவிழாவில் கை, கால் உதறியது.. விழுப்புரம் திருநங்கை விழாவிலும் மயக்கம் போட்டு விழுந்தது போன்ற பரபரப்புகளும் நடந்தன.. இதனால் பலவிதமான தகவல்கள் அவரது உடல்நிலை குறித்து உலா வந்தது..
இதையடுத்து, விஷால் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு கெட்ட பழக்கம் இருந்தது.. ஒருகட்டத்துக்கு பிறகு நான் விட்டுட்டேன்" என்றார்.. இப்படி சொல்ல ஒரு தைரியம் வேண்டும். ஏற்கனவே காதல், தோல்வி , நிச்சயதார்த்தம் என அனைத்துமே அவரது வாழ்வில் நடந்துவிட்டது.
எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், விஷாலின் பெற்றோருக்கும், தன்னுடைய மகனுக்கு வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். இப்போது திருமண அறிவிப்பு வந்துள்ளது அனைவருக்குமே மகிழ்ச்சிதான்" என்று கூறியிருக்கிறார்.
சலசலப்பை அன்று ஏற்படுத்தியிருந்த விழாவில், "என்னை ஏன் லாஸ்ட்டா பேச சொன்னீங்க? நான் வேஸ்ட்? இல்ல நான் பெஸ்ட்.? இது எனக்கு நீங்க வைக்கிற டெஸ்ட்? என அவருக்கே உரிய பாணியில் அடுக்கு மொழியில் பேசினார். டி.ஆர்., பேசிக் கொண்டிருக்கும் போதே, நடுவில் குறிக்கிட்டு தன்ஷிகா மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து சாரி சொன்னார். ஆனால், அதற்கும் அசராத டி.ஆர், "நீ கட்டி வரல சாரி. இப்போ சொல்ற சாரி" என வெளுத்து வாங்கியது, தன்ஷிகா கண்ணீர் விட்டு மேடையிலேயே அழுது விட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications