ஆட்டுக்கறி இங்கதான் விவேக் வாங்குவாரா? சந்தான பாரதிக்கே அமித்ஷா போட்டோ பார்த்து சர்ப்ரைஸ்: பிரபலம்
சென்னை: "பிரபலங்கள் என்றாலும், அனைவருக்கும் குடும்பம் என்று ஒன்றிருக்கும், அந்த குடும்பத்துக்கும் வேதனை, இழப்பு, வலி இருக்கும் என்பதை ஏன் மீடியாக்கள் உணர்வதில்லை? அதில் 1 சதவீதமாவது உணர்ந்தால், இப்படியெல்லாம் கன்டென்ட் போடுவார்களா? ஒரு விஷயத்தை ஆயிரமாக பெரிசு பண்ணி செய்தி வெளியிடுகிறார்கள் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேதனையை தெரிவித்துள்ளார்.
தன்னுடைய குடும்பத்தை பற்றி, சில யூடியூப் சேனல்கள் அவதூறு பரப்பியதற்கு பாடகி கல்பனா கண்டனம் தெரிவித்துள்ளார். துணிச்சலாகவும், தைரியமாகவும் செய்தியாளர்களுக்கு கல்பனா தந்த பேட்டியை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வரவேற்றுள்ளார்.

MediaCircle யூடியூப் சேனலுக்கு பாலாஜி பிரபு தந்துள்ள பேட்டியில், பல்வேறு யூடியூப் சேனல்கள் இதுபோல, தவறான தலைப்புகளை பதிவிட்டு, செய்திகளையும் தவறாக வெளியிடுவதாக வேதனை தெரிவித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:
"ஒரு பிரபலம் வீட்டில் இறப்பு நடந்துவிட்டால், சுற்றி சுற்றி வந்து மீடியாக்காரர்கள் தொந்தரவு தருகிறார்கள்.. அவர்களின் சோர்வை புரிந்து கொள்வதில்லை. சமீபத்தில் விஜய் ஆண்டனி வீட்டிலும் இப்படித்தான் நடந்தது.
விஜய் ஆண்டனி மகள்
பிளஸ் 2 படிக்கும் பெண் தவறான முடிவெடுத்து இறந்துவிட்டார் என்றால், அந்த குடும்பத்திலுள்ள தாய், தகப்பனின் மனநிலைமை எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட சூழலில் கேமராவை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய முயல்கிறார்கள். "எங்களை ஏன் உள்ளே விட மாட்டேங்கறீங்க?" என்றும் கேள்வி கேட்கிறார்கள்.
சர்ச்சில் சடலத்தை வைத்து ஜெபம் செய்யும்போதும், சர்ச்சுக்கு கேமராவுடன் ஓடுகிறார்கள். ஒரு ஆட்டோ டிரைவர் யாரையோ சர்ச்சில் இறக்கிவிட வந்தால், அந்த ஆட்டோ டிரைவரிடம் சம்பந்தமே இல்லாமல் பேட்டி எடுக்கிறார்கள். ஏன் இப்படி யூடியூபர்கள் இருக்காங்க? பிணத்தை அடக்கம் செய்யும் வரை இவர்கள் இப்படி தொந்தரவு செய்தார்கள். குடும்பத்தினரின் சோகத்தை புரிந்து கொள்வதேயில்லை.
விவேக் ஆட்டுக்கறி
நடிகர் விவேக் இறந்தபோதும், இப்படித்தான் பல விஷயத்தை பரப்பிவிட்டார்கள். யூடியூப்களில் என்னென்ன போட முடியுமோ, அத்தனையும் போட்டார்கள்.. விவேக் வீட்டு தெருவை கூட்டி பெருக்குபவர்களிடம்கூட பேட்டி எடுத்தார்கள்.. தோட்டக்காரன், இஸ்திரிக்காரன் என ஒருத்தரையும் விடுவதில்லை..
"விவேக் இங்கேதான் ஆட்டுக்கறி வாங்குவார்" என்று யூடியூப்பில் தலைப்பு போடுகிறார்கள்.. வாரம் எவ்வளவு கறி வாங்குவார்? வெறும் கறி மட்டும்தான் வாங்குவாரா? தலைக்கறி விரும்பி சாப்பிடுவாரா? ஈரல், மூளை வாங்குவாரா? என கேள்விகளை கேட்டு வீடியோ போடுகிறார்கள்... ஒருத்தர் இறந்தபிறகு அவர் எங்கே கறி வாங்கினால் என்ன?
காந்திமதியும், ஜெயம் ரவியும்
ஒரு விஷயத்தை ஒன்றுக்கு மூன்றாக, நான்காக பேசினால் பரவாயில்லை.. ஒன்றுக்கு ஆயிரமாக பெருசு பண்ணி எழுதுகிறார்கள். ஜெயம் ரவி, காந்திமதி இருவரின் போட்டோவையும் போட்டோவிட்டு, ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி யார் தெரியுமா? என்று யூடியூப் தலைப்பில் போடுகிறார்கள்..
உடனே இதைப்பார்த்து அதிர்ச்சியாகும் வாசகர்கள், ஜெயம் ரவிக்கும், காந்திமதிக்கும் என்ன தொடர்பு? என்று ஆர்வத்துடன் அந்த வீடியோவை கிளிக் செய்து பார்க்கிறார்கள். கடைசியில் காந்திமதிக்கும், ஜெயம் ரவிக்கும் சம்பந்தமே இல்லாமல் அந்த செய்தி இருக்கும்.
இதெல்லாம் ஒரு கன்டென்ட்டா? கன்னாபின்னாவென்று யூடியுப்களில் தலைப்பு போட்டால், அதையும் மக்கள் பார்க்கிறார்கள்.. எதை வீடியோவாக போட்டாலும் பார்க்கிறார்கள்.
நடிகைக்கு மறுமணம்
தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வளர்ந்த பிரபல நடிகையின் கணவர் புறா அலர்ஜியால் இறந்துவிட்டார்.. உடனே மீடியாவில், "அது என்ன புறா, அந்த புறாக்கும், நடிகையின் கணவருக்கும் என்ன பகை? புறா ஏன் உயிரை பழி வாங்கியது?" என்று எழுத ஆரம்பித்துவிட்டார்கள்..
இப்படியெல்லாமா நியூஸ் போடறது? உடனே அந்த நடிகைக்கும், இந்த நடிகருக்கும் திருமணமா? என்று அடுத்த புரளியை கிளப்பிவிட்டார்கள். யார் யாரை திருமணம் செய்தால் உங்களுக்கென்ன? நியாயமாகவும், உண்மையாகவும், ஆதாரப்பூர்வமாகவும் செய்திகள் வந்தால் அதை மீடியாவில் போடலாம், தவறில்லை.
தளபதி வீடு ஹோம் டூர்
ஒருசிலர், கேமராவை ஹெல்மெட்டில் மாட்டிக் கொண்டு, பைக்கில் கிளம்பி விடுகிறார்கள்.. "தளபதி வீட்டை சுற்றிப்பார்க்கலாம் வாங்க" என்று ஹோம்டூர் வீடியோ போடுகிறார்கள்.. "தளபதி வீட்டில் இத்தனை பிரம்மாண்ட அறைகளா? இத்தனை கிச்சனா? இத்தனை பெட்ரூமா? இத்தனை கார்களா? " என்று யூடியூப்களில் தலைப்பு போடுகிறார்கள்.
இதோ தளபதி வீட்டு தெருவை அடைந்துவிட்டோம், இதோ தளபதி வீட்டை நெருங்கிவிட்டோம், என்று சொல்லி, விஜய் வீட்டு காம்பவுண்ட் சுவரில் போய் நின்றுவிடுவார்கள்.
அந்த காம்பவுண்ட சுவர் மொத்த வீட்டையும் மறைத்திருக்கும். வீட்டு வாசலிலேயே கேமராவை வைத்து கொண்டு நிற்பார்கள். அந்த நேரம் பார்த்து, யாராவது ஒருவர் காரில் கிளம்பி வெளியே போனால், "இதோ தளபதி போகிறார் பாருங்கள்" என்று கேமராவை காட்டுவார்கள். அந்த கருப்பு கண்ணாடி காரில் உள்ளே யார் இருக்கிறார் என்றே தெரியாது.
மாரிமுத்து இறப்பு
மாரிமுத்து என்ற ஒரு நடிகர் இறந்துவிட்டார்.. அவரது உடல் மதுரையில் ஏதோ மலை கிராமத்தில் அடக்கம் செய்யப்படுவதாக தகவல் வந்ததுமே, அங்கேயே கேமராவை கொண்டுபோய்விட்டார்கள்.. சடலம் காலை 6 மணிக்கு வருகிறது என்றால், இவர்கள் முந்திய நாள் இரவு 12 மணிக்கே அந்த கிராமத்துக்கு போய்விட்டார்கள். "மாரிமுத்துவை எவ்வளவு வருடங்களாக உங்களுக்கு தெரியும்" என்று அங்கிருக்கும் கிழவி, அப்பாத்தாவிடம் பேட்டி எடுக்கிறார்கள.
அமித்ஷாவா? சந்தான பாரதியா?
அனைவருக்கும் குடும்பம் என்று ஒன்றிருக்கும், அந்த குடும்பத்துக்கும் வேதனை, இழப்பு, வலி இருக்கும் என்பதை ஏன் யாருமே உணர்வதில்லை? அதில் 1 சதவீதமாவது உணர்ந்தால், இப்படியெல்லாம் கன்டென்ட் போடுவார்களா?
அமெரிக்காவில் ஜனகராஜ் பைத்தியமாக திரிகிறார் என்று போட்டுவிட்டார்கள்.. ஆனால் ஜனகராஜூக்கு விசாகூட கிடையாது. அமித்ஷா போட்டோவுக்கு பதிலாக, சந்தானபாரதி போட்டோவை போடறாங்க? சந்தான பாரதியே இதை பார்த்து அதிர்ச்சியாயிட்டாரு.. இதெல்லாம் எங்கே போயி முடியுமோ தெரியல" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications