ஏன்டா டேய்... உங்க டிக்டாக் வெறிக்கு அளவே இல்லையாடா.. சிரித்துப் பகிர்ந்த விவேக்!
சென்னை: நடிகர் விவேக்கே பெரிய காமெடிக்காரர். இதில் அவரையே சிரிக்க வைக்கும் அளவுக்கு இந்த டிக்டாக் பிரியர்கள் (சில நேரங்களில் வெறியர்களும்) அவரை வைத்து செமையாக காமடி செய்து வருகின்றனர்.
விவேக் செய்த காமெடிகள் இன்றளவும் மக்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளது. வடிவேலு ஒரு பக்கம், விவேக் மறுபக்கம் என இருவரும் செய்த காமெடி சாம்ராஜ்ஜியம் இன்னும் ரீபிளேஸ் செய்யப்படாமல்தான் உள்ளது.

இந்த நிலையில் விவேக் ஒரு காமெடி டிக்டாக்கை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா?!? என்று கேட்டு அவர் போட்டுள்ள அந்த காமெடி சீன் சாமி படத்தில் வருவதாகும். அதில் பள்ளிக்குப் போகாத மாணவர்களிடம் அவர் பேசும் காமெடிக் காட்சி இடம் பெற்றுள்ளது.
அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா?!?!😂 pic.twitter.com/tNNaKWdLI5
— Vivekh actor (@Actor_Vivek) May 12, 2019
ஆனால் இதை டிக்டாக் செய்துள்ள நபர் ஒரு நாயிடம் பேசுவது போல அதை காமெடி செய்துள்ளார். அதுதான் விவேக்கையே சிரிக்க வைத்து விட்டது. நீங்களும் பாருங்க.. சிரிங்க..












Click it and Unblock the Notifications