நெப்போலியன் வீட்டு பங்க்ஷனில் அந்த நபர் கேட்ட கேள்வி.. அதை மறக்க முடியாது.. வி.ஜே ஆதவன் எமோஷனல்
சென்னை: ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான "கொஞ்சம் நடிங்க பாஸ்" என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஆதவன் தற்போது பேட்டி ஒன்றில் நடிகர் நெப்போலியனின் பிறந்தநாள் விழாவை தான் தொகுத்து வழங்கும் போது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவம் குறித்து பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
தொகுப்பாளர்கள் என்று சொன்னதும் ஒரு சிலருடைய முகம் தான் டக்கென்று மனதிற்கு வந்துவிடும். அந்த வகையில் பலரையும் சிரிக்க வைத்த தொகுப்பாளர்களில் விஜே ஆதவனும் ஒருவர். ஆதவன் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் திரைப்பட நடிகராகவும், மிமிக்ரி கலைஞர், வீடியோ ஜாக்கி, ரேடியோ ஜாக்கி என்று பல்வேறு முகங்களை கொண்டிருக்கிறார்.

ஒரு சிலருக்கு மட்டும் தான் இயல்பாகவே பல திறமைகள் வந்து விடுகிறது. அந்த வகையில் ஆதவனும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தபோது அமிதாப்பச்சன், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், கமல்ஹாசன், பாரதிராஜா, சத்யராஜ், பிரபு என்று பல பிரபலங்களை இண்டர்வியூ செய்து இருக்கிறார். அதற்குப் பிறகு தான் இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
சுவர் ஏறி குதிச்சு கல்யாணம் பண்ண காரணமே இதுதான்.. அந்த இயக்குனர்! வீட்டிலும் பிரச்சனை.. தேவயானி ஓபன்
அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய மிமிக்ரி மூலமாக மக்கள் மனதிலும் நல்ல இடத்தை பிடித்து நான்காவது சீசன் டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்று விட்டார். அதற்குப் பிறகு ஆதித்யா டிவியில் கொஞ்சம் நடிங்க பாஸ் என்ற நிகழ்ச்சியை ஆதவன் தான் தொகுத்து வழங்கி வந்தார். தன்னுடைய மிமிக்கிரி திறமையின் மூலமாக லேட்டஸ்ட் ஆக எந்த திரைப்படம் வருகிறதோ அதே திரைப்படத்தை வைத்து மக்களிடம் நேரடியாக சென்று அவர்களை நடிக்க வைத்து இவர் வெளியிடும் வீடியோக்கள் பலரையும் சிரிக்க வைக்கும் விதமாக இருந்தது.

அதற்கு பிறகு தான் இதே பாணியை கையில் எடுத்த பல யூடியுபர்ஸ் பிராங் வீடியோக்களை வெளியிட தொடங்கி விட்டார்கள். இன்னைக்கு youtube இல் பலர் பிராங்க் செய்து கொண்டு இருப்பதற்கு ஆதவனும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அதுபோல கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சன் டிவியில் காமெடி ஜங்ஷன் நிகழ்ச்சியில் மதுரை முத்துவுடன் சேர்ந்து இவரும் நடுவராக கலந்து கொண்டார்.
அதற்கு பிறகு வாங்க சிரிக்கலாம், இதுதாண்டா சிரிப்பு, கலாட்டா ராணி என்று பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியிருந்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக இருந்த நிலையில் ஒன்பதாவது சீசனின் நடுவராகவும் என்ட்ரி கொடுத்திருந்தார். அதே நேரத்தில் நடிகர் ரகுவரன் இறந்த பிறகு அவர் நடித்த "எல்லாம் அவன் செயல்" என்ற படத்தில் ரகுவரனுக்கு ஆதவன் தான் குரல் கொடுத்திருந்தார்.
அதுபோல பிரியாணி, மாதவனும் மலர்விழியும் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் "பாஸ் பேண்ட்" என்ற ஒரு அமைப்பை வைத்து அதன் மூலம் பல பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அது உருவான கதை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில், நான் ஒரு முறை அமெரிக்காவில் நடிகர் நெப்போலியனின் பிறந்த நாளை தொகுத்து வழங்குவதற்காக போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் அவருடைய வீட்டுக்கு வெளியே நான் இருந்தபோது ஒரு நபர் வந்து நீங்க உங்க குரூப்பின் பெயர் என்ன என்று கேட்டார். அதுவரைக்கும் நாங்கள் எங்களுக்கு குரூப் பெயர் வைக்கவே இல்லை. அந்த நேரத்தில் அவர் கேட்டதும் எனக்கு வாங்க பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் கொஞ்சம் பிரபலம் இருந்ததால் அந்த பாஸ் என்ற பெயரையும் பொதுவாக எல்லாரையும் குழுவாக இணைப்பது பெயர் பேன்ட் என்று சொல்வார்கள்.
அதனால் பாஸ் பேன்ட் என்று நான் வைத்து விட்டேன். அதற்கு பிறகு எனக்கு அமெரிக்காவில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் நான் ஒரு பாடகரின் முழு பாடலையும் கூட மிமிக்ரி செய்து மற்ற பாடகர்களின் குரலில் பாடிய அசத்தியிருக்கிறேன், அதே பலரையும் கவர்ந்திருக்கிறது. அதனால் எனக்கு அமெரிக்காவில் நெப்போலியன் பிறந்தநாள் பங்க்ஷனில் நடந்த அந்த நிகழ்வை மறக்கவே முடியாது என்று ஆதவன் பேசியிருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications