சுவர் ஏறி குதிச்சு கல்யாணம் பண்ண காரணமே இதுதான்.. அந்த இயக்குனர்! வீட்டிலும் பிரச்சனை.. தேவயானி ஓபன்
சென்னை: நடிகை தேவயானி தன்னுடைய கணவரான ராஜகுமாரனை தான் காதலித்து திருமணம் செய்த விஷயம் பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு தன்னுடைய திருமணத்திற்கு பிறகு இயக்குனர் விக்ரமன் தங்களுக்கு செய்த உதவி குறித்தும் அந்த பேட்டியில் தேவயானி பேசி இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
வெள்ளி திரையிலும், சின்னத்திரையிலும் பாப்புலர் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தேவயானியை தெரியாதவர்களே இருக்க முடியாது. இவருடைய பல ஹிட் திரைப்படங்கள் இப்போ உள்ள ரசிகர்கள் கூட முணுமுணுக்கும் பாடல்கள் இடம் பிடித்தது தான். அதனாலேயே நடிகை தேவயானி 90 கிட்ஸ்கள் மட்டுமல்லாமல் 2கே கிட்ஸ்களுக்கும் பரிச்சயம் ஆனவர்.

தமிழில் அறிமுகமாகி கொடிகட்டி பறந்து கொண்டிருந்த நடிகைகளில் ஒருவராக இருந்த தேவயானி சினிமாவில் உச்சத்தில் இருந்த நிலையில் திடீரென்று இயக்குனர் ராஜகுமார் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.
திருமணத்திற்குப் பிறகு தேவயானிக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் சீரியலின் பக்கம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதல் முதலாக கோலங்கள் என்ற சீரியலில் நடிக்க தொடங்கி அந்த சீரியலில் பல பெண்களுக்கு முன்னோடியாக நடித்து இருப்பார். அதனாலேயே சின்னத்திரையில் இப்போ வரைக்கும் இந்த சீரியல் பாராட்டப்பட்டு வருகிறது.
நடிகை தேவயானி அவருடைய கணவர் ராஜகுமார் காதலியாக பார்ப்பதற்கு முன்பு அவருடைய ஒரு கதாநாயகியாக தான் பார்த்திருக்கிறார். இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய படம் தான் நீ வருவாய் என இந்த திரைப்படத்தில் தேவயானி, பார்த்திபன், அஜித் என மூவரோடு சேர்ந்து நடிப்பில் வெற்றியும் பெற்றிருந்தது. அந்த திரைப்படத்தை வைத்து தான் ராஜகுமாரன் மீது தேவயானிக்கு காதல் வந்திருக்கிறது.

அப்போது இதை சூசகமாக இயக்குனர் தெரிந்து கொண்டிருப்பாரோ என்னவோ அதனாலேயே இவர் தேவயானியையும் விக்ரமையும் வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை அடுத்ததாக இயக்கியிருக்கிறார். அந்த படப்பிடிப்பில் தான் ராஜகுமாரின் அன்பு, அமைதி, உழைப்பை பார்த்து தான் தேவயானிக்கு ராஜகுமார் மீது காதல் ஏற்பட்டதாம்.
அதுபோல தேவயானியின் கொஞ்சலான பேச்சு, இளகிய மனமும் ராஜகுமாருக்கு பிடித்து போக தேவயானி நம் வாழ்க்கை துணையாக வந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்துதான் இரு பக்கமும் காதல் மலர்ந்திருக்கிறது. ராஜகுமாரின் மீது இருந்த நம்பிக்கையே அவரை திருமணம் செய்ததற்கு காரணம். என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் கடைசி வரைக்கும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவரை, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அதோடு எங்களுடைய காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும் வேறு வழியில்லாமல் தான் நான் சுவர் ஏறி குதித்து போய் ராஜகுமாரனை திருமணம் செய்தேன். அதுவரைக்கும் எங்க வீட்டில் என்ன சொன்னாலும் அதை நான் கேட்டு விடுவேன். ஒரு விஷயம் கூட அம்மா அப்பாவுக்கு எதிராக செய்தது கிடையாது. ஆனால் காதல் விஷயம் வேறு மாதிரியாக இருந்ததால் வீட்டில் சம்மதிக்கவில்லை.

நம்முடைய தலையெழுத்தில் எப்படி எழுதி இருக்கிறதோ அதுபோல்தான் எல்லாமே நடக்கும். என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் சரி என்று சொன்ன என்னுடைய பெற்றோர் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் நான் தைரியமாக அந்த முடிவெடுத்தேன். நான் அந்த முடிவெடுப்பதற்கு காரணம் கூட கடவுள் தான் என்று சொல்வேன். அவர் கொடுத்த தைரியத்தால் தான் என்னால் அந்த முடிவு எடுத்து ராஜகுமாரனை கல்யாணம் செய்ய முடிந்தது.
அதுபோல எங்களுடைய கல்யாணத்திற்கு பிறகு பெரிதும் உதவியது இயக்குனர் விக்ரமன் தான். அந்த நேரத்தில் பல செய்தி சேனல்களும் எங்களிடம் பேட்டி எடுக்க ஆர்வமாக இருந்தாங்க. அதுபோல போலீஸ் கம்பிளைன்ட் இருந்ததால் ஏகப்பட்ட நெருக்கடியில் இருந்தோம். அந்த நேரத்தில் எங்களுக்கு பணரீதியாகவும், தைரியமும் கொடுத்தது விக்ரமன் சார் தான் என்று அந்த பேட்டியில் தேவயானி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications