பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஷாலினியுடன் லிவ்- இல் இருக்கிறேன்.. ஆனால்! விஜே ஆதவன் ஓபன்
சென்னை: விஜே ஆதவன் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி பிரபலமாக இருக்கிறார். அதேபோல ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் சமீபத்தில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே சீரியல் நடிகை விஷாலினியுடன் இவருக்கு திருமணம் முடிந்து விட்டது என்ற செய்தி பரவி வந்த நிலையில் அது குறித்து ஆதவன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜே ஆதவன் ஆரம்பகாலம்
ஆதித்யா சேனல் தொடங்கிய சமயத்தில் அதில் தொகுப்பாளராக இருந்தார். பிறகு அந்த சேனலில் ஒளிபரப்பான "கொஞ்சம் நடிங்க பாஸ்" என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பெயர் வாங்கியவர் தான் ஆதவன். அதேபோல ரேடியா ஜாக்கியாக இருந்து ஆதித்யா சேனலில் தொகுப்பாளினியாக வந்தவர் விஷாலினி. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது என சில மாதங்களுக்கு முன்பு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் இது குறித்து ஆதவன் பேசும்போது எங்களுக்குள் திருமணம் ஆகவில்லை நாங்கள் இருவரும் லிவ்- இங் உறவில் இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

விஜய் ஆதவன் பேட்டி
இது பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசும் போது, நானும் சின்னத்திரை நடிகை விலாசினியும் லிவ்-இங் உறவில் இருக்கிறோம். எனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஒரு பெண் குழந்தை இருக்கிறது. முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் நாங்கள் இருவரும் பிரிந்து தான் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். என்னுடைய மகள் என்னுடன் தான் இருக்கிறார். விலாசினிவுடன் எனக்கு பல வருடங்களாக நட்பு இருக்கிறது. எங்களுக்குள் இருந்த புரிதலால் நாங்கள் இப்போது லிவ்- இங் உறவில் இருக்கிறோம்.
விஜே ஆதவன்- நடிகை விலாசினி குழந்தை
எங்கள் இருவருக்கும் மீரா ஆதவன் என்ற பெண் குழந்தை இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகளையும் நான் கவனித்து வருகிறேன். நான் லிவ்- இன் இருப்பதால் இதை வெளியில் சொல்ல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்று பேசி இருக்கிறார். விலாசினி மற்றும் ஆதவன் பற்றி பல சர்ச்சைகள் பரவி வந்த நிலையில் இப்போது அதற்கு ஆதவனே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
விலாசினி நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை போன்ற படங்களில் படங்களில் நடிகை ஸ்ரீ திவ்யாவிற்கு குரல் கொடுத்தவர் இவர்தான். அதேபோல கேடி பில்லா கில்லாடி ரங்கா, பொதுவாக எம்மனசு தங்கம் போன்ற படங்களில் கதாநாயகிகளுக்கும் இவர்தான் குரல் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குயிலி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சீரியல் நடிகை விலாசினி
அதேபோல ஜீ தமிழில் வாகை சூடவா சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பும் ஜீ தமிழில் ஒரு சில சீரியல்களில் நடித்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆதவன் மற்றும் விலாசினி தம்பதியின் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது அதற்கு பிறகு தான் இவர்கள் இருவருக்கும் குழந்தை இருக்கும் விஷயமே பலர்க்கும் தெரியவந்தது.
அடுத்தடுத்து கர்ப்பத்தை அறிவித்த விஜே பிரியங்கா, நடிகை சமந்தா.. ஒற்றுமையும் வேற்றுமையும்! ரசிகர்கள் சொல்வது இதுதான்!
அது குறித்து நாம் விலாசினியிடம் பேசும் போது அவர் அப்போதே இது குறித்து விளக்கம் கொடுத்திருந்தார். நாங்கள் இருவரும் லிவிங்கில் இருக்கிறோம் என்று கூறியிருந்தார். இப்போது ஆதவனும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். விலாசினிக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து அது விவாகரத்தில் முடிந்து விட்டது. தன்னுடைய முதல் திருமணத்தில் தான் பட்ட வேதனைகள், சித்திரவதைகள் குறித்து அவர் ஏற்கனவே பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
