எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனே.. விஜே ஆனந்த கண்ணனின் மனைவி போட்ட பதிவு.. ரசிகர்கள் கண்ணீர்!
சென்னை: புற்றுநோயால் மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மனைவி சமூகவலைதளத்தில் போட்ட பதிவை கண்ட அவரது ரசிகர்களின் கண்கள் குளமாகியுள்ளன.
1990 களின் இறுதியில் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்தக் கண்ணன். சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான இவர் ஆர்ஜேவாக பணியாற்றிவிட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார்.
குழந்தைகள் நிகழ்ச்சியின் போது அந்த குழந்தைகளிடம் நகைச்சுவையாக பேசுவார். இவரது நகைச்சுவை பேச்சுக்கும் தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்குமே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சிந்துபாத்
தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சிந்துபாத், விக்கிரமாதித்யன் உள்ளிட்ட தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் ஆனந்தக் கண்ணன் நடித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக தொலைக்காட்சிகளின் தலைகாட்டாமல் இருந்து வந்த ஆனந்தக் கண்ணனுக்கு பிரபல தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளராகும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது.

குடல் புற்றுநோய்
ஆனால் அவர் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சைகளையும் பெற்று வந்துள்ளார். ஆனால் உடல் முழுவதும் புற்றுநோய் பரவி விட்டதால் தனது 49 ஆவது வயதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சிங்கப்பூரில் உயிரிழந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனந்தக்கண்ணன்
ஆனந்தக் கண்ணனுடன் பணியாற்றியவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் நேற்று ஆனந்தக் கண்ணனின் பிறந்தநாள். இதையொட்டி அவருடைய மனைவி ராணி கண்ணன் தனது சமூகவலைதளத்தில் ஒரு எமோஷனல் பதிவை போட்டுள்ளார்.

கேக்குடன் ஆனந்தக்கண்ணன்
அதில் ஆனந்தக் கண்ணன் கையில் கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் எங்கும் நிறைந்திருக்கும் எனது அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்களின் கண்கள் குளமாகியுள்ளன. மேலும் ராணிக்கு ஆறுதல் மெசேஜ்களை அனுப்பி அவரை தேற்றும் முயற்சியையும் ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications