ஜெயிக்க வேண்டாம்! அட்லீஸ்ட் இதையாவது பண்ணி இருக்கணும்! CSK பற்றி கோபமாக பதிவிட்ட விஜே அஞ்சனா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே அஞ்சனா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்த பதிவு இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதாவது நேற்று சிஎஸ்கே விளையாடிய விதம் குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் தன்னுடைய ஆதங்கத்தை அஞ்சனா தெரிவித்து இருக்கிறார்.
நடைபெற்று வருடம் கிரிக்கெட் மேட்ச்சில் சிஎஸ்கே அணி இந்த வருடம் ஒரே ஒரு போட்டியில் தான் ஜெயித்திருக்கிறது அதற்கு பிறகு நடந்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து மோசமான தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சிஎஸ்கே தோற்றுப் போனதை ஏற்றுக் கொள்ளாத பல பிரபலங்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

குவியும் ரசிகர்கள்
கிரிக்கெட் மேட்ச் நடைபெறுகிறது என்றதுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் குவிந்து கொண்டிருக்கிறார்கள். டிவியில் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை விடவும் நேரில் பார்த்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூட்டம் குவிந்து கொண்டிருக்கிறது.
எல்லாமே வேஸ்ட்
சிஎஸ்கே ஆடும் கிரிக்கெட் மேட்சை நேரில் பார்ப்பதற்காக பல ஆயிரங்களை பலர் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடைசியில் அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் தான் கிடைத்துக்கொண்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல தொகுப்பாளரான விஜே அஞ்சனா தன்னுடைய எக்ஸ் தளத்தில் கோபமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.
விஜே அஞ்சனா போஸ்ட்
அதில் "ஜெயிக்க வேண்டாம் அட்லீஸ்ட்...! கொஞ்சமா கேம்ல வெறி இருக்கணும் இல்ல.. சிஎஸ்கேவுக்கு இது தேவைதான்! வேறு எதுவும் சொல்வதற்கில்லை.." "கம்பேக் வேணாம்.. கப்பு வேணாம்... விசுவாசமான ரசிகர்கள் நாங்கள் எதிர்பார்க்கிறது, ஜெயிக்கணும் என்கிற எண்ணத்தில் தான் ஆடுறோம்னு காட்டுனா போதும்" என்று கோபமாக பதிவிட்டு இருக்கிறார். இதற்கு லட்சக்கணக்கானோர் லைக் கொடுத்திருக்கிறார்கள்.
வருத்தத்தில் நடிகர்கள்
நேற்று இந்த நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்காக பல பிரபலங்கள் சென்று இருந்த நிலையில் அவர்கள் தலையில் துண்டு போட்டு கொண்டு அமர்ந்திருந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் பிக் பாஸ் பிரபலமான விஷ்ணு, சௌந்தர்யா, ரவீனா போன்ற பலர் சோகமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபோல நடிகரும் கிரிக்கெட்டருமான விஷ்ணு விஷால் தன்னுடைய அதிருப்தியை எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

விஷ்ணு விஷால் பதிவு
அதில் "நானே ஒரு கிரிக்கெட்டர் என்பதால் இது குறித்து பேச வேண்டாம் என தொடர்ந்து தயங்கியே இருந்தேன். ஆனால் இது ரொம்ப கொடூரமாக உள்ளது. ஏன் இவ்வளவு கீழே வரவேண்டும்? வெல்லவே கூடாது என விளையாடலாமா?? சர்க்கஸ் போல் இருக்கிறது, விளையாட்டை விட எந்த தனிப்பட்ட நபரும் முக்கியமில்லை" என கூறியிருக்கிறார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications