என்னோட கல்யாண வாழ்க்கையில் இது தான் பிரச்சனை..! முதல் முறை வெளிப்படையாக கண் கலங்கி பேசிய பிரியங்கா
சென்னை: விஜே அர்ச்சனா சமீபத்தில் அவளும் நானும் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் கலந்து கொண்ட பிரியங்கா தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதோடு கண்கலங்கி அந்த பேட்டியில் பிரியங்கா பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா எப்போதும் சிரித்த முகமாக இருந்தாலும் அவருடைய திருமண வாழ்க்கை நினைச்ச மாதிரி இல்லை என்று கண்ணீரோடு அந்த பேட்டியில் பிரியங்கா பேசியிருக்கிறார். அதோடு தனக்கு சில கனவுகளும் ஆசைகளும் இருக்கிறது என்றும் அதில் வெளிப்படையாக பிரியங்கா பேசியிருக்கிறார்.

விஜய் டிவி தொகுப்பாளினிகளில் அதிகமான நிகழ்ச்சிகளில் இடம் பிடிக்கும் ஒரு தொகுப்பாளினியாக பிரியங்கா இருந்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை செம ஃபன்னாக தொகுத்து வழங்கி தன்னை எல்லோரும் கலாய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் ஜாலியாக அந்த இடத்தை மாற்றி விடுவது தான் பிரியங்காவின் சிறப்பு.
இந்த நிலையில் சமீபத்தில் விஜே அர்ச்சனா தன்னுடைய யூடியூப் சேனலில் தொடங்கி இருக்கும் அவளும் நானும் என்ற நிகழ்ச்சியில் பிரியங்கா கண் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அர்ச்சனாவும் பிரியங்காவும் பேசிக் கொண்டிருக்கும் போது பிரியங்கா சில தனிப்பட்ட சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் என்னுடைய லைஃப்லையும் சில சந்தோஷங்கள் வேணும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது.

என்னையும் யாராவது பயங்கரமா லவ் பண்ணனும், அப்புறம் எனக்கும் குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு ரொம்ப ஆசையா இருக்கு. என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் தப்பான முடிவு எடுத்துட்டேன். இனிமேல் என்னுடைய லைஃப்ல எடுக்கப் போற பெரிய முடிவுகளால அம்மாவை எந்த விதத்திலும் வருத்தப்பட வைக்க மாட்டேன். நான் போட்டு வச்சிருக்கிற பிளானை ஒவ்வொரு விஷயத்திலும் நிறைவேற்றிவிட்டு வருகிறேன்.
ஆரம்பத்தில் நான் பிக்பாஸுக்கு போனும் என்று நினைத்தேன். அதுபோல போய்விட்டேன். கார் வாங்குறது மாடி வீடு கட்டுவது அப்படி ஒவ்வொரு விஷயமா நான் நினைத்ததை செய்து கொண்டு வருகிறேன். இப்போ கொஞ்ச நாளா ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி இருக்கிறேன். அதுபோல எனக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது எனக்குன்னு ஒரு குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு.

அது போல என்னை யாராவது பயங்கரமா லவ் பண்ணனும்... இந்த மாதிரி விஷயங்கள் நடக்காதா என எனக்கும் ஏக்கமா இருக்கு. என்னுடைய தம்பி குழந்தையை பார்க்கும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும். அந்த குழந்தையோட விளையாடும் போது நான் ரொம்ப நிம்மதியா இருக்கிறேன். அந்த குழந்தை தான் என்னோட சந்தோஷமா இருக்கு. அந்த குழந்தைக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.
அந்த குழந்தையோட சிரிப்புதான் எனக்கு சந்தோஷம், நிம்மதி எல்லாத்தையும் என் வீட்டுல திரும்ப கொண்டு வந்து இருக்கு. கடவுள் தான் எனக்கு அந்த குழந்தையை அனுப்பி வைத்திருக்கிறார். அவளை பார்க்கும் போது நான் என்னையே பார்க்கிற மாதிரி இருக்கும். நான் சின்ன வயசுல எப்படி இருந்தேனோ அப்படித்தான் அவளும் இருக்கா.... அதற்காக அவளுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் என்று பிரியங்கா எமோஷனலாக பேசியிருக்கிறார். தற்போது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications