"வெட்டுக்கிளி" பாலாவுக்குப் பிறந்த நாள்.. கவுண்டர் கொடுக்கும் ரசிகர்கள்!
சென்னை: விஜய் டிவியின் வெட்டுக்கிளிக்கு பிறந்தநாள் . அதாவது வெட்டுக்கிளி என்று அன்போடு அழைக்கப்படும் பாலாவுக்குப் பிறந்த நாள்.
இதையடுத்து வெட்டுக்கிளியை கையில் பிடித்திருக்கும் பாலாவின் போட்டோவை போஸ்ட் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர் திரைப் பிரபலங்கள்.
அவர்கள் மட்டுமல்லாமல், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பாலாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி விட்டனர்.

காரைக்காலிலிருந்து
கஷ்டமான குடும்பத்தில் பிறந்து வெறும் 130 ரூபாயுடன் சென்னையில் காலடி எடுத்து வைத்த பாலா தான் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் காமெடி கவுண்டர் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய பிறந்தநாளுக்கு இவருடைய ரசிகர்கள் அதிகமாக வாழ்த்துக்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

நண்பர்கள்
ரசிகர்கள் ஒரு பக்கம் என்றால் அவருடைய நண்பர்கள் ஒரு பக்கம் தங்களால் முடிந்த அளவுககு இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் போஸ்ட் போட்டு கொண்டாடி வருகின்றனர். காரைக்காலில் பிறந்த இவர் 2017 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு சீசன் 6 இல் ஸ்டாண்டப் நகைச்சுவையாக தனது காமெடியை தொடங்கியிருக்கிறார் .கடைசியில் அந்த சீசனில் டைட்டிலை வென்றார் .

சினிமா வாய்ப்பு
இதில் கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. 2018-ஆம் ஆண்டில் வெளியான ஜூங்கா திரைப்படத்தில் அறிமுகமானார் . அந்தப்படத்தில் விஜய்சேதுபதியுடன் கலக்கலாக அவருக்கே டப் கொடுத்திருக்கிறார் .அதற்கு பிறகு புலிக்குட்டி பாண்டி போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் .

குக் வித் கோமாளி
நான் சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு போய் விட்டேன் அதனால் இனி சின்னத்திரைக்கு வரமாட்டேன் என இவர் சொல்லாமல் மீண்டும் விஜய் டிவியில் கலக்க ஆரம்பித்தார். சூப்பர் சிங்கர் ,90ஸ் கிட்ஸ் 2k கிட்ஸ், அது இது எது , சிரிச்சா போச்சு போன்ற விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் கலக்கியிருக்கிறார். அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற வகையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கன்டஸ்டன்ட்டாக கலந்துகொண்டு குழந்தைகளை அதிகமாக கவர்ந்து விட்டார் .

கேபிஒய் பாலா
விஜே பாலா என்று சொன்னாலே அவருடைய ஸ்டாண்ட் அப் காமெடி தான் ஞாபகத்திற்கு வரும். அதுவுமில்லாமல் கேபிஒய் பாலா என்று சொன்னாலும் அனைவருக்கும் டக்கென்று ஞாபகத்திற்கு வந்துவிடும் .கலக்கப்போவது யாரு சீசன் 6 வெற்றியாளராக இவர் நடிகர் சந்தானதிடமிருந்து விருதை வாங்கி இருக்கிறார் .இதுவே இவருடைய நடிப்புக்கு கிடைத்த பெரிய அவார்டு என்று அவர் கூறியிருந்தார்.

அப்பவே அப்படி
இவர் ஸ்கூல் படிக்கும்போதே காமெடியில் கலக்கியிருக்கிறார். தன்னுடைய பிரண்ட்ஸ்களை கலாய்ப்பதிலும் சரி டீச்சர்களின் கோபத்தை தீர்ப்பதிலும் சரி இவர் வித்தியாசமாக அடுத்தவர்களை கலாய்த்து விடுவதால் இவரை எப்படியாவது சினிமாக்களில் நடித்து வைக்க வேண்டும் என்று இவருடைய நண்பர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். அதனால் தான் இவர் இந்த அளவிற்கு உயர்வதற்கு அவருடைய நண்பர்களும் ஒரு காரணம் என்று அடிக்கடி அவர் கூறியிருக்கிறார் .

முதல் நிகழ்ச்சி
நண்பர்களின் உதவியோடு தான் 'சிரிச்சா போச்சு 'நிகழ்ச்சிக்காக காரைக்காலில் இருந்தபோது அமுதவாணனிடம் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர் . இவர் அப்போது அமுதவாணனிடம் உங்களுடைய நிகழ்ச்சிக்கு என்னையும் கூப்பிட்டு விட்டு செல்வீர்களா என கேட்டிருக்கிறார் .அப்போது நீ பதினொன்றாம் வகுப்பு தான் படித்து கொண்டிருக்கிற படிப்பை முடி பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டு அமுதவாணனும் வந்து விட்டார்.

நண்பர்கள் உதவி
ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அமுதவாணன் கூறிய அந்த சிறிய நம்பிக்கையுடன் அவருடைய நண்பர்களின் உதவியுடன் சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால் வரும்போது வீட்டிலிருந்து ஒரு பைசாவை கூட எடுத்து வரவில்லையாம். பாலாவின் நண்பர்கள் தான் அவருக்கு ரயில் டிக்கெட் வாங்கி கொடுத்து இருக்கின்றனர் .அவர்கள் பாலாவிடம் 130 ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர் . சென்னை வந்ததும் அமுதவாணனை சந்தித்து அவரால் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சிறிய வாய்ப்பையும் விடலை
இந்த நிகழ்ச்சி தான் இவரை மட்டுமல்லாமல் இவருடைய வாழ்க்கையையும் டோட்டலாக மாற்றிவிட்டது .தனக்கு கிடைத்த சிறிய வாய்ப்பையும் துரும்பென பிடித்து தற்போது பெரிய அளவில் வளர்ந்து இருக்கும் இவருக்கு இதேபோல இன்னும் வளர வேண்டுமென இவருடைய நண்பர்கள் புகழ் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .பிரபலங்கள் மட்டும் அல்லாமல் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை மழை பொழிந்து வருகின்றனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications