யோகிபாபுவை அசிங்கப்படுத்தினேனா? நான் எதுக்கு மன்னிப்புக் கேட்ணும்! உதவாக்கரைகள்! பாவனா விளக்கம்
சென்னை: ரவிமோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவின் போது யோகிபாபுவை அவமதித்ததால் தொகுப்பாளினி பாவனா மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லப்பட்ட நிலையில் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என விஜே பாவனா விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் துவக்க விழாவை சென்னையில் நடத்தினார். இந்த தொடக்க விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில்தான் யோகிபாபுவை பாவனா அவமதித்ததாக கூறி ரசிகர்கள் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த விழாவில் யோகிபாபு அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற பாவனா, "எங்க இருந்தீங்க நீங்க, உங்கள நான் பார்க்கவே இல்லையே, முன்னாடி வாங்க, மைக்கை பிடிங்க, கொஞ்சம் எழுந்து நில்லுங்க சார்" என்றார்.
எழுந்து நின்ற யோகிபாபு
அப்போது யோகிபாபுவும் எழுந்து நின்றார். அப்போது பாவனா, கொஞ்சம் மைண்ட் கேம் விளையாடலாமா, உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது என கேட்டார். அதற்கு யோகி பாபுவோ, "என்னை வச்சு ரவி சார் படம் பண்றாரு, அந்த படம் நல்லா வரணும். அவரது தயாரிப்பு நிறுவனமும் நல்லபடியா வளரணும் என யோகிபாபு கூறினார். உடனே பாவனா நல்லவரு மாதிரி பேசுறீங்க. அதை தாண்டி என்ன நினைக்கிறீங்க என கேட்டார்.
சேர் போடாதீங்க
இதை கேட்டதும் யோகிபாபு, "பின்ன நான் பின்னாடி நிற்கும் போது அந்த மனுஷனுக்கு வழி விடாதீங்க, சேர் போடாதீங்கன்னு உன்னை மாதிரி நான் நினைக்கலயேம்மா, நான் நல்லதுதானே நினைத்தேன்" என்றார்.
ரவிமோகன் ஸ்டுடியோ திறப்பு விழா
இதனால் சற்று அதிர்ந்த பாவனா, "ஆமா நீங்கள் ரொம்ப நல்லவருதான்" என சொல்ல, அதற்கு யோகிபாபு, "அத ஏன் கொஞ்சம் சிரிச்சிகிட்டு சொல்லலாமே, குழாயடி சண்டை போடுற மாதிரி பேசுற" என பதிலடிக் கொடுத்தார். இந்த உரையாடல் இணையத்தில் வைரலானது.
இதையடுத்து "யோகிபாபு என்றால் உங்களுக்கு கேவலமா என கேட்டு நெட்டிசன்கள் கமென்ட்டுகளை பதிவிட்டனர். மேலும் worst behaviour Bhavana என டேக் செய்து வந்தனர்.
விஜய் டிவியில் நடந்தது என்ன?
ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் யோகிபாபு சிறு ரோல்களில் நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் ரைட்டராகவும் இருந்தார். உதவி இயக்குநராகவும் பணிபுரிந்திருந்தார். அதே தொலைக்காட்சியில் பாவனாவும் பணிபுரிந்து வந்தார்.
பாவனா- யோகிபாபுவுக்கு என்ன பிரச்சினை
அந்த நேரத்தில் பாவனாவுக்கும் யோகிபாபுவுக்கும் இடையே ஏதாவது பிரச்சினை நடந்திருக்குமோ என ரசிகர்கள் விவாதித்து வந்தனர். இந்த நிலையில் பாவனா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: "மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. நானும் யோகிபாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை பலரும் தவறான கோணத்தில் பார்த்து அதை பகிர்ந்து வருகிறார்கள்.
ஜாலி பேச்சு
இதற்கு முன்னர் நானும் யோகிபாபுவும் இப்படி ஜாலியாக பேசிக் கொண்டதை எல்லாம் நீங்கள் பார்த்துள்ளீர்களா? குறிப்பாக ஐபிஎஸ் சமயங்களில் சிஎஸ்கே போட்டியின் போது, நாங்கள் அதே போல் மிகவும் ஜாலியாக பேசதான் முயற்சித்தோம்.
30 நொடி வீடியோ
வெறும் 30 நொடி வீடியோவை பார்த்துவிட்டு யோகிபாபுவை நான் அசிங்கப்படுத்திவிட்டேன் என பலரும் பல கதைகளை காட்டுகிறார்கள். யோகிபாபுவை எனக்கு நன்றாக தெரியும். நாங்கள் ஜாலியாகதான் பேசினோம். அதை புரிந்து கொள்ளாமல் சில உதவாக்கரைகள் வெறுப்பை பரப்புகிறார்கள், இதுல நான் மன்னிப்பு வேற கேட்க வேண்டும் என்கிறார். இவ்வாறு பாவனா காட்டமாக பேசியிருந்தார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications