என் வீடே சுடுகாடாகிடுச்சே! காலைல 4 மணிக்கு சித்ரா ரூமுக்கு போனாரே! அப்பறம்... தாய் கண்ணீர்
சென்னை: என் வீட்டையே சுடுகாடாக்கிட்டானே ஹேமந்த், சித்ரா பாருடி அப்பா பாருடி என அவருடைய தாய் கதறி அழும் காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது. நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சித்ராவின் தாயும், தந்தையும் தனது மூத்த மகள், மகன், பேரன் பேத்திகளுடன் இருந்தார்களாம்.

கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சித்ராவின் தாய் கண்ணீர் விட்டு கதறுகிறார். அவர் கூறுகையில், "ஹேமந்தை விடுதலை செய்து எப்போது தீர்ப்பு வந்ததோ அப்போது முதலே அவர் அதிக மன உளைச்சலுக்குள்ளானார். வழக்கமாக 4 மணிக்கு எழுந்துவிடுவார்.
அது போல் இன்றும் காலை 4 மணிக்கு எழுந்துவிட்டார். நான் போய் காபி வேண்டுமா என கேட்டேன், வேண்டாம் என கூறிவிட்டார். பிறகு திடீரென சித்ராவின் அறைக்குச் சென்றார். அங்கு போய் தூங்க போகிறார் என நினைத்தேன். பிறகு 6 மணிக்கு எழுப்பலாம் என போன போதுதான் இந்த சம்பவம் நடந்தது.
அப்போது கூட அவர் எழுந்து நின்று கொண்டு எதையோ செய்து கொண்டிருக்கிறார் என நினைத்தேன். ஆனால் தூக்கில் தொங்கிவிட்டாரே, ஹேமந்த் என் வீட்டை சுடுகாடாக்கிவிட்டான். ஆண் பிள்ளை போல் தைரியமாக இருந்த என் மகளை கொன்றான், தற்போது என் கணவரையும் கொன்றுவிட்டானே! சித்ரா அப்பாவை பாருடி, அவரையும் கூட்டிட்டு போய்ட்டியே என கதறினார்.
அடையாறில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் காமராஜ் (64). இவருக்கு இரு மகள்கள் , ஒரு மகன். அதில் ஒருவர் மகள்தான் சித்ரா. காமராஜ் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றார்.
கல்லூரி படிப்பை முடித்த சித்ரா, மாடலாகும் ஆசையில் சில விளம்பர காட்சிகளில் நடித்திருந்தார். அதன் மூலம் சீரியல், சினிமா என பிரபலமடைந்தார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே அவருடைய திறமையால் பிரபலமடைந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இவர் ஹேமந்த் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இவர்கள் ஊரறிய நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. திருமணத்திற்கு மண்டபம் எல்லாம் பார்த்தாகிவிட்டது.
இந்த நிலையில்தான் கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் தொலைகாட்சி சேனலின் நிகழ்ச்சிக்காக பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் ஹேமந்துடன் தங்கியிருந்தார். அங்கு அவர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது என தெரியவில்லை.
திடீரென 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி அந்த ஹோட்டல் அறையில் இறந்துகிடந்தார். இவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை அடுத்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் புகார் அளித்தனர்.
தனது மகள் இறப்பில் ஹேமந்துக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கானது பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஹேமந்தும் கைது செய்யப்பட்டார். அவர் சித்ராவை சந்தேகப்பட்டார், அடித்து துன்புறுத்தியுள்ளார் என்று அவருடைய நண்பர்களும், சித்ரா கடைசியாக தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் ஒரு கட்டத்தில் கலகலப்பாக இல்லை என அந்த நிகழ்ச்சியில் சித்துவுடன் கலந்து கொண்டவர்களும் சாட்சி கூறினர்.
ஹேமந்த் எப்படிப்பட்டவர் என்பது குறித்தெல்லாம் நடிகை ரேகா நாயர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்பதால் ஹேமந்த் விடுதலைச் செய்யப்பட்டார். சித்ரா இறந்த போதே அவருடைய தந்தை காமராஜ் சாப்பிடாமல் மாத்திரை போடாமல் மன உளைச்சலில் இருந்தாராம்.
எனினும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்பதில் காமராஜ் உறுதியாக இருந்தாராம். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் ஹேமந்த் விடுதலை செய்யப்பட்டார். அப்போது காமராஜின் உடல்நிலையும் மன நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாம்.
இந்த நிலையில் திருவான்மியூரில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை சித்ராவின் துப்பட்டாவிலேயே காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து போலீஸார், காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications