Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைங்கன்னா சித்துவுக்கு அவ்வளவு பிடிக்கும்.. கொஞ்சி தீர்த்து விடுவார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகளை கண்டாலே குழந்தைகளோடு குழந்தைகளாய் மாறி கொஞ்சி தீர்த்து விடுவார் விஜே சித்ரா. அதைச் சொல்லிச் சொல்லி அவரது தோழர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.

2020 பிறந்ததில் இருந்து மக்களை பாடாய்படுத்தி தான் எடுத்து வந்து கொண்டிருக்கிறது. முடியப் போகும் தருவாயிலும் சோகத்தை அது அள்ளித் தந்து கொண்டிருக்கிறது.

அதிகப்படியான நோயினாலும் மரணங்களும் இயற்கை சீற்றங்களாளும் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது திரைத்துறையிலும் அடுத்தடுத்ததாக துர்மரணங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

 சித்து இல்லையே

சித்து இல்லையே

தற்போது கூட பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரில் நடிக்கும் வி ஜே சித்ராவின் மரணமும் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விஜே சித்ரா அனைத்து வீட்டு பெண்களின் மனதிலும் தங்கள் வீட்டு பெண் போல ஒரு நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

 இப்படி இருக்கணும் மருமகள்னா

இப்படி இருக்கணும் மருமகள்னா

அதுவும் மருமகள் என்றால் இந்த மாதிரி ஒரு மருமகள் தான் கிடைக்க வேண்டும் என்று மாமியார்கள் ஆசைப்படும் அளவுக்கு இவருடைய கேரக்டர் அமைந்திருந்தது. எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் இவரை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் அனைவரிடமும் குழந்தைபோல பழகி வந்தார்.

 எப்போதும் ஹேப்பிதான்

எப்போதும் ஹேப்பிதான்

இவர் எப்போதுமே ஜாலியாக இருந்து கொண்டு அடுத்தவர்களையும் ஜாலியாக வைப்பதில்தான் தனது கவனத்தை செலுத்துவார். தனது மனக் கவலைகளை நினைத்து எப்போதும் புலம்பிக் கொண்டிருக்காமல் சந்தோஷமாக வாழும் வாழ்க்கையை வாழவேண்டும் என்று அடிக்கடி தன்னுடைய மோட்டிவேஷன் ஸ்பீச் தன்னுடைய ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டி வந்தவர்.

 நல்ல ரோல்மாடல்

நல்ல ரோல்மாடல்

பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். .நடுத்தர வர்க்கத்தை மான ஒரு குடும்பத்தில் பிறந்து இந்த அளவிற்கு 28 வயதிலேயே வெற்றி அடைந்து இருப்பது என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல. இவர் 20 வயதில் தொகுப்பாளராக காலடி எடுத்து வைத்தாலும் இந்த எட்டு வருடங்களுக்குள் பெருமளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் . பெரிய திரைகளில் கிடைக்கும் ரசிகர்களை விடவும் இவருக்கு அதிகப்படியாக தான் ரசிகர்கள் இருந்தனர்.

 சீரியல் ரசிகர்கள்

சீரியல் ரசிகர்கள்

இவரது சீரியலைப் பார்க்கும் பெண் ரசிகர்களும் இவருக்காக தான் இந்த சீரியலை பார்க்கிறோம் என்று கூறுமளவிற்கு இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடி வந்தனர். அதுமட்டுமல்லாமல் இவர் தனது ரசிகர்களை தனது உறவினர்களாகத்தான் பார்த்தார். ரசிகர்களின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது மட்டுமல்லாமல் அவரால் சில நேரங்களில் செல்ல முடியாத நேரங்களிலும் கூட போன்களில் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி வந்தவர்.

 ரசிகர்கள்னா ரொம்பப் பிடிக்கும்

ரசிகர்கள்னா ரொம்பப் பிடிக்கும்

அதுமட்டுமல்லாமல் இவர் தனது இன்ஸ்டாகிராமில் தான் போடும் போஸ்ட் களுக்கு கமெண்ட் போடும் ரசிகர்களுக்கு கூட எவ்வளவுதான் தான் பிசியாக இருந்தாலும் ஃபிரியாக இருக்கும் நேரங்களில் அவர்களின் கமெண்ட் களுக்கும் பதிலளித்து வந்தார். அதனாலேயே இவரை ரசிகர்கள் இவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் தங்கள் வீட்டு பெண் போல தான் நினைத்து வந்தனர்.

 குழந்தைங்கனா உசுரு

குழந்தைங்கனா உசுரு

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இன்ஸ்டாகிராமில் இவரது ரசிகரான ஒரு பெண் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்திருக்கும் இவர் தற்போது இல்லை என்பதை அவருடைய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்லாமல் இவருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம்.

 குட்டீஸ்னா விட மாட்டார்

குட்டீஸ்னா விட மாட்டார்

அதனால்தான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் குழந்தைகளை அடிக்கடி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சி வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். அவர் மட்டுமல்லாமல் அந்த வீடியோக்களை அவருடைய ரசிகர்களும் பரப்பி வந்தனர் . அப்படி பல குழந்தைகளோடு இவர் கொஞ்சிய வீடியோக்கள் வைரலாக பரவி வந்தது. தற்போது இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனாவின் குழந்தையாக நடித்துக் கொண்டிருக்கும் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சம் வீடியோ தான் வைரலாக பரவி வருகிறது.

 கற்பனை கூட செய்து பார்க்க முடியலை

கற்பனை கூட செய்து பார்க்க முடியலை

எவ்வளவுதான் ஒருவர் கெட்டவராக இருந்தாலும் அவர் இறந்துவிட்டால் அவரை பலரும் நினைத்து கஷ்டப்படுவார்கள் .ஆனால் சித்ரா அனைவர் மனதிலும் நல்ல ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தவர் .தற்போது அவர் இல்லை என்பதை நினைத்துப் பார்க்கும் போதே மனதில் பெரிய கனமாக இருக்கிறது என்று பலரும் அவர் அந்த குழந்தையை கொஞ்சி விளையாடிய வீடியோவை வெளியிட்டு வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த அளவிற்கு சந்தோசமாக அந்தக் குழந்தையை குழந்தையாக மாறி கொஞ்சி விளையாடிய இவர் தற்போது இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்திருப்பது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாகவும் அவர்களது ரசிகர்களுக்கு பெரும் சோகமாகவும் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+