மகள் துப்பட்டாவிலே துடி துடிக்க இறந்த விஜே சித்ராவின் தந்தை.. கடைசியாக சொன்ன வார்த்தை! அந்த அம்மா பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து பிரபலமான விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய தந்தை காமராஜ் இன்று வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சின்னத்திரை ரசிகர்களை பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் என்றால் அது விஜே சித்ராவின் இறப்பு தான். விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக பலருக்கும் பரீட்சையமாகி இருந்தாலும் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்ட்டிவாக இருந்தார்.

சோசியல் மீடியா மூலம் தன்னுடைய ரசிகர்களிடம் நெருங்கி பழகி வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு அடிக்கடி லைவில் பதில் கொடுப்பது, ரசிகர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது, அதுபோல தனக்காக ஃபேன்ஸ் பேஜ் வைத்திருக்கும் ரசிகர்கள் எல்லோரையும் கூப்பிட்டு அவர்களோடு பங்க்ஷன் கொண்டாடுவது என்று தன்னுடைய ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து பல விஷயங்களை விஜே சித்ரா செய்து வந்தார்.
அதுபோல எப்போதும் சிரித்த முகமாக ஜாலியாக வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நாசரத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கில் தொங்கியபடி விஜே சித்ராவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நசரத் பேட்டை போலீசார் விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
விஜே சித்ரா எந்த பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக போராடி தான் மீடியாவில் சாதித்திருந்தார். அவருடைய தந்தை போலீசில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் ஆரம்பத்தில் வீடியோ லைப் வேண்டாம் என்று கூறியதாகவும் ஆனால் பிறகு அவர்களை சம்மதிக்க வைத்து நான் இன்று ஒரு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன் என்று பல பேட்டிகளில் சித்ரா பேசியிருந்தார்.

அதுபோல விஜே சித்ரா அவருடைய பெற்றோருக்கு ஒரே மகள் தான். சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் அவருடைய பெற்றோர் கதறி அழுதது காண்போரை நொறுங்க வைத்தது. சித்ராவின் இறப்புக்கு முந்தைய நாள் கூட அவர் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார்.
ஆனால் அடுத்த நாளே அவர் இந்த உலகத்தை விட்டு பிரிவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. விஜே சித்ராவின் மறைவுக்கு பிறகு அவருடைய பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்கள். பேட்டிகளில் அவருடைய தந்தை எதுவும் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால் சில இடங்களில் மட்டும் தன்னுடைய உள்ளக்குமுறல்களை கொட்டிக் கொண்டிருந்தார்.
தன்னுடைய மகள் இறப்பிற்கு காரணம் அவருடைய கணவர் ஹேம்நாத் தான் என்று எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். விஜே சித்ராவின் இறப்புக்கு பிறகு அவருடைய கணவர் ஹேம்நாத் 3 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேம்நாத் நிரபராதி என்று தீர்ப்பு வந்தது.
ஹேம்நாத்தை விடுதலை செய்யவும் திருவள்ளூர் மகிமா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹேம்நாத் விடுதலையான நிலையில் அதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது சித்ராவின் தந்தை இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.

சித்ரா இறப்பதற்கு முன்பு ஆசை ஆசையாக கட்டிய வீட்டில்தான் சித்ரா இறப்பிற்கு பிறகு அவருடைய குடும்பத்தினர் வசித்து வந்தனர். அதிலும் சித்ராவின் ஒரு ரூமில் தான் அவருடைய அப்பாவும் அம்மாவும் தங்கியிருக்கிறார்கள். வழக்கமாக காலை நான்கு மணிக்கு சித்ராவின் தந்தை எழுந்து விடுவாராம். அதுபோல இன்றும் அவர் எழுந்திருக்கிறார்.
அப்போது அவருடைய மனைவி அவரிடம் காபி போடவா என்று கேட்டிருக்கிறார். வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். பிறகு சித்ராவின் அம்மா அந்த அறையை விட்டு வெளியே வந்திருக்கிறார். சித்ராவின் அப்பா மட்டும் அந்த அறையில் இருந்து இருக்கிறார். காலை 7 மணிவாக்கில் சித்ராவின் அம்மா கதவை தட்டி பார்த்திருக்கிறார்.
கதவு திறக்கப்படவில்லை என்பதால் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியோடு கதவை உடைத்து பார்த்த போது சித்ராவின் துப்பட்டாவில் அவர் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. 64 வயதாகும் காமராஜ் தன்னுடைய மகள் 2020 டிசம்பர் ஒன்பதாம் தேதி காலமான நிலையில் அதே மாதத்தில் 31ஆம் தேதி இவரும் தற்கொலை செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சித்ரா வழக்கில் ஹேம்நாத் விடுதலை என்று அறிவித்தபோது சித்ராவின் தந்தை பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் விடமாட்டேன். நான் கடைசிவரை அதற்காக போராடுவேன்.
என்னுடைய மகளின் சாவுக்கு யார் காரணம் என்று உண்மையை வெளியே கொண்டு வருவேன் என்று கண்கலங்க பேசி இருக்கிறார். இப்போது அவர் தற்கொலை செய்தது சித்ராவின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரே மகளையும் கணவரையும் இழந்து இப்போது சித்ராவின் அம்மா மட்டும் தனியாக கதறிக் கொண்டிருக்கும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த குடும்பத்திற்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது.
தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள் பல இருக்கிறது. தற்கொலை எண்ணங்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர் யாருக்கேனும் வந்தால் 104 என்ற நம்பருக்கு டயல் செய்து இலவச ஆலோசனைகளை பெறுங்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications