சீரியல் முடிந்ததும் மகிழ்ச்சி செய்தி சொன்ன விஜே தீபிகா.. ரசிகர்களிடம் கேட்ட அந்த கேள்வி தான் ஹைலைட்
சென்னை: விஜே தீபிகா தற்போது தன்னுடைய மகிழ்ச்சியை கூறி வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
பல நாட்களாக ஆசைப்பட்டது தற்போது நிறைவேறிய மகிழ்ச்சியில் தீபிகா ஆனந்த கண்ணீரை சிந்தி இருக்கிறார்.
தனது சொந்த உழைப்பிலே புது கார் வாங்கியது பற்றி உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.

கிராமத்து பொண்ணு : திருநெல்வேலி அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்த விஜே தீபிகா தொகுப்பாளராக வேண்டும் என்று தான் சென்னை வந்துள்ளாராம். வீட்டில் படிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு சென்னை வந்த இடத்தில் படித்துக் கொண்டு ஒவ்வொரு டிவி சேனலாக ஏறி இறங்கி இருக்கிறார்.
இவர் வாய்ப்புக்காக சென்ற போதெல்லாம் அனைத்து கதவுகளும் மூடிக்கொண்டதாம். ஆரம்பத்தில் எந்த மாதிரி உடை உடுத்த வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை கூட எனக்கு தெரியாது அதனால் பலரும் என்னை பார்த்ததுமே நிராகரித்து விட்டார்கள் என்று வருத்தமாக கூறியிருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோரை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீசன் 2.. இனி கதை இது தானா? பிரபலம் வெளியிட்ட முக்கிய தகவல்
பாண்டியன் ஸ்டோர் ஐஸ்வர்யா: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு விஜேவாக ஒரு சேனலில் இவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். அப்போது சில போட்டோ சூட் நடத்தி இருக்கிறாராம் . அதன் மூலமாகத்தான் இவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு காலேஜ் படிக்கும் போது பரியேறும் பெருமாள் படத்தில் கயல் ஆனந்தியின் தோழியாக நடிக்க வாய்ப்பு இருந்ததாம். ஒரு சில சீன்களில் நடித்து இருந்ததாலோ என்னவோ இவருக்கு நடிப்பின் மீதும் பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யாவாக பலருடைய மனதையும் கவர்ந்து விட்டார். அதுவும் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதும் இவருடைய ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வந்தார்கள்.
தீபிகா ஹாப்பி அண்ணாச்சி: பல நாள் ஆசை நிறைவேறிவிட்டதாக தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர் முதல் முறையாக தன்னுடைய சொந்த உழைப்பில் இந்த நிலையில் புது கார் வாங்கியாச்சு. என்னோட அடுத்த கனவு நிறைவேறி விட்டது. காருக்கு என்ன நேம் வைக்கலாம் கமெண்ட்ல சொல்லுங்க என்று கூறி இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் கோபத்தை காட்டிய அண்ணாமலை.. விஜயா போடும் ப்ளான்.. முத்து சொன்ன வார்த்தை
அதோடு என்னுடைய சாய்ஸ் சுப்பிரமணி என்றும் விஜே தீபிகா தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஜே தீபிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்காக பலமுறை முயற்சி செய்து தான் அந்த வாய்ப்பு கிடைத்திருந்தது.
ஆனாலும் ஆரம்பத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவருடைய முகத்தில் அதிகமான பருக்கள் இருப்பதால் அதை காரணம் காட்டி இவரை சீரியலில் இருந்து விலக சொல்லி இருக்கின்றனர். பிறகு இவர் நேசித்த அதே கேரக்டர் சில வருடங்கள் கழித்து மீண்டும் அவருக்கே கிடைத்திருந்தது.அதோடு இப்போது அந்த சீரியல் முடிவடைந்திருக்கும் நிலையில் இவர் சொன்ன அடுத்த மகிழ்ச்சியான செய்திக்கு ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் அடுத்ததாக புதிய சீரியலில் தொடர வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications