அடுத்தவங்களுக்கு வழி விடணும்! இறங்கி அடிச்சு வரீங்க! பிரியங்காவிடம் நேரடியாக சொன்ன டிடி! செம சம்பவம்
சென்னை: தொகுப்பாளின்னு என்று சொன்னாலே சிலருடைய முகம் ரசிகர்களுக்கு டக்கென்று நினைவிற்கு வரும் அதில் டிடி என்ற திவ்யதர்ஷினி, பிரியங்கா மற்றும் அர்ச்சனா என பலர் இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது பிரியங்கா குறித்து வெளிப்படையாக டிடி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கமெண்ட் பெற்று வருகிறது.
ஒரு சில தொகுப்பாளர்கள் தான் தொடர்ந்து பல வருடங்களாக குறிப்பிட்ட ஒரு சேனலில் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் பிரியங்காவும் ஒருவர். இவர் விஜய் டிவியில் பல வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். அதற்கு முன்பு டிடி இதுபோல விஜய் டிவியில் பல வருடங்களாக வேலை பார்த்திருந்தார்.

டிடியின் விலகல்
ஆனால் பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கிய பிறகு சில வருடங்களிலேயே டிடிக்கு நிகழ்ச்சிகள் குறைய தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் தனக்கு அதிகமான நேரம் நின்று கொண்டே வேலை பார்க்க முடியவில்லை என்பதால் வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டது, நான் உட்கார்ந்து வேலை பார்ப்பது போன்ற ஏற்பாடுகள் கேட்டிருந்தேன் அதற்கு சிலர் சம்மதிக்கவில்லை என்று பேட்டிகளில் டிடி பேசி இருக்கிறார்.
அதுபோல பிரியங்கா பற்றி ஆரம்பத்தில் அதிகமாக சர்ச்சைகள் எதுவும் கிளம்பியது கிடையாது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா போட்டியாளராக கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார்.
மணிமேகலை குற்றச்சாட்டு
அதற்கு காரணம் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டில் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று நீண்ட குற்றச்சாட்டு வைத்து ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். அப்போது மணிமேகலை பிரியங்கா பெயரை சொல்லாமல் அவரைப் பற்றி தான் மறைமுகமாக பதிவில் பேசி இருக்கிறார் என்பது பலரும் அறிந்த ரகசியம்.
டிடியின் பாராட்டு
அதற்கு பிறகு இணையத்தில் பிரியங்கா மீது அதிகமான கமெண்ட் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா பற்றி டி டி பெருமையாக பேசி இருக்கிறார். அப்போது, பிரியங்காவை பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கும். எந்த இடத்திலும் இறங்கி அடித்து வேலை செய்யும் நபர். அவங்க இதற்கு முன்பு பேசும்போது என்னை பார்த்து இன்ஸ்பயர் ஆனதாக சொன்னாங்க.
அடுத்தவர்களும் வளரனும்
அதுபோல எங்களை எல்லாம் பார்த்து இவங்க மேலே வந்து கொண்டிருப்பதாக பேசினாங்க. பொதுவா ஒருத்தங்க வரும்போது நாம அவங்களுக்கு வழி விடுவது தப்பு ஒன்றும் இல்லை. நாமும் வாழனும் அடுத்தவங்களையும் வாழ வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை..., பழக்கம். அதை நான் செய்திருக்கிறேன்.
டிடி சொன்ன விஷயம்
பிரியங்காவை பார்க்கும் போது ஒரு ரீல்ஸ் டயலாக் ஞாபகம் வரும், அதை அதில் "அடிச்சிக்யேறி மேல வா" என்று மலையாளத்தில் சொல்லுவாங்க. அதுபோல பிரியங்கா எல்லா விஷயத்திலும் மேலே வந்து கொண்டே இருக்காங்க என்று டிடி சொல்ல அதற்க்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் பிரியங்கா எமோஷனல் ஆகி இருக்கிறார்.
பிரியங்காவின் தவிப்பு
அதுபோல டிடி பேசுவதற்கு முன்பு பேசிய பிரியங்கா நான் விஜய் டிவியில் ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்த போது எனக்கு அர்ச்சனா மற்றும் டிடி மேடம் இருவரையும் பார்க்கும்போதும் பெருமையாகவும் ஒருவித பயமாகவும் இருக்கும். ஒருமுறை கேரளாவில் நாங்கள் ஒரு சூட்டிங் போயிருந்தோம் அப்போது மூன்று பேரும் கோல்ட் கலர் சாரி கட்டி இருந்தோம். அந்த நேரத்தில் மேடையில் எனக்கு அழுகை வந்துவிட்டது. நான் அழுதுவிட்டேன் என்னால் பேசக்கூட முடியவில்லை. அதை என்னால் மறக்க முடியாது என்று எமோஷனலாக பிரியங்கா பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications