"ஆறு வயசு வரை சரியாக பேச்சு வரவில்லை”...விஜே லயாவை குறித்து கண்கலங்கிய அவருடைய அம்மா
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் வீஜேலயாவை பற்றி அவருடைய அம்மா பேசியிருப்பது பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறதாம்.
அழகான தமிழால் பல மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்துக் கொண்டிருக்கும் லயாவிற்கு ஆரம்ப காலத்தில் பேச்சு வரலை என்பது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்து வருகிறதாம்.

ஜீ தமிழ் நிகழ்ச்சி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தற்போது சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது. அதை விஜே லயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தன்னுடைய அம்மா தன் மீது வைத்திருக்கும் அன்பினை குறித்து இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதை வைத்து, உன்னை விட எனக்கு பெரிய கிப்ட் எதுவும் தேவை இல்லை அம்மா. என்று நெகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார். சூப்பர் மாம் நிகழ்ச்சியை விஜே அர்ச்சனாவும் அவருடைய மகளான சாராவும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜீ தமிழ் பிரபலங்கள் பலரும் தங்களுடைய குழந்தைகளோடு கலந்து கொண்டுள்ளார்கள்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பிரபலமாக இருக்கும் பல நடிகைகளை பற்றி தெரியாத பல விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். ரியாலிட்டி ஷோ என்றாலே அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இன்னொரு பக்கத்தை அதில் காட்டி விடுவார்கள். அந்த மாதிரி தான் தற்போது கூட விஜே லயா வின் வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தை பற்றி அவருடைய அம்மா கூறி இருக்கிறார். விஜே லயா அவருடைய அம்மாவுக்கு மூத்த குழந்தையாம். விஜே லயாவிற்கு முழு பெயர் சசிலயா தான் என்பது பலருக்கு தெரியாது. அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் விஜே லயா என்றுதான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் பலரும் அவரை லயா என்று அழைத்து வருகிறார்கள்.

சிறப்பான பேச்சாளர்
ஒரு விஜேவாக மட்டுமல்ல லயாவை டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு மோட்டிவேஷன் பேச்சாளராகவும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சமூக வலைத்தளம் பயன்படுத்தும் பலருக்கும் இவர் பரிச்சயமான நபராக இருந்தாலும் இவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஹீரோவின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

அம்மாவின் அன்பு
லயாவின் வீட்டில் இவரும் இவருடைய தங்கச்சியும் மட்டும் தானாம். லயாவிற்கு சின்ன குழந்தையாக இருக்கும்போது பேச்சு போட்டியில் பேச வேண்டும் என்பது ரொம்ப ஆசையாம். ஆனால் அவருக்கு ஆறு வயசு வரைக்கும் ளா...ரி போன்ற எழுத்துக்களின் உச்சரிப்பே வராதாம். ஆனாலும் அவர் ஸ்டேஜில் ஏறி பேசும் போது அந்த உச்சரிப்பு எல்லாம் அழகாக பேசுவாராம். அவர் முதல் முதலாக பேசிய போட்டியில் இவருக்கு கிடைத்த காசோலையை அவருடைய அம்மா பணமாக மாற்றி அந்த பணத்திற்கு ஒரு ஓம் டாலர் வாங்கி வைத்துள்ளாராம். அதை பற்றி சூப்பர் மாம் நிகழ்ச்சியில் அம்மா பேசியதை லயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "நீயே பெரிய கிப்ட், எனக்கு உன்ன விடவா பெரிய கிப்டா வேணும் எனக்கு" என்று என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications