அய்யோ ரொம்ப மோசமானவங்க போலயே! ஆதாரத்துடன் நடிகை மகாலட்சுமி ரவீந்தர் சொன்ன பகீர் தகவல்.. உஷார்
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தன் பெயரில் போலி இன்ஸ்டா கணக்கை யாரோ உருவாக்கியுள்ளது குறித்து நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை மர்மநபர்கள் தொடங்கியுள்ளது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு நெட்டிசன்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சன் டிவி, சன் மியூசிக் உள்ளிட்ட சேனல்களில் விஜேவாக தனது பயணத்தை தொடங்கியவர் மகாலட்சுமி. இவர் பின்னாளில் சீரியல்களிலும் தென்பட தொடங்கினார். தற்போது சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சில சினிமாக்களிலும் நடித்துள்ளார்.
விஜே மகாலட்சுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளரும் யூடியூபருமான ரவீந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கருத்து வேறுபாடு
எனினும் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2019 ஆம் ஆண்டு தனது கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார். இதையடுத்து தனது மகனுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார் மகாலட்சுமி. இந்த நிலையில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் மகாலட்சுமி கமிட் ஆனார். அப்போதுதான் அந்த படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகருடன் மகாலட்சுமி காதல் ஏற்பட்டது.

காதல் திருமணம்
இந்த காதல் திருமணத்தில் முடியும் வரை இருவரும் வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொண்டனர். திடீரென கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்களது திருமண புகைப்படத்தை சுட சுட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பகிர்ந்தனர். இவர்களது திருமணம் திருப்பதியில் நிகழ்ந்தது. மகாலட்சுமி அன்பே வா சீரியலில் வாசுகி எனும் கேரக்டரில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகர், நடிகை
அந்த சீரியலின் நடிகர், நடிகைகளுக்குக் கூட இவர்களது. திருமணம் முறைப்படி அறிவித்தவுடன்தான் தெரியுமாம். இவ்வளவு ஏன் அன்பே வா சீரியலின் இயக்குநரிடம் தனது திருமணத்திற்கு முந்தைய நாள் சென்று தனக்கு அரை நாள் விடுப்பு வேண்டும் என்று மட்டும் அவர் கேட்டிருந்தாராம். அந்தளவுக்கு காதும் காதும் வைத்ததாற்போல் இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது.

ஆக்டிவ்
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர்கள் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள். 90 கிட்ஸ் வயிறெரியும் அளவுக்கு ரவீந்திரன் சமூகவலைதளங்களில் மகாலட்சுமியிடம் ரொமான்ஸ் செய்வார். மேலும் இருவரும் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவர்.

போலி இன்ஸ்டா கணக்கு
அந்த வகையில் இன்றைய தினம் மகாலட்சுமி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பதிவில் மகாலட்சுமி கூறுகையில் இன்ஸ்டாகிராமில் என் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. போலியான கணக்கிலிருந்து எந்த மெசேஜ் வந்தாலும் அதற்கு ரெஸ்பாண்ட் செய்யாதீர்கள் என அந்த போலி ஐடியை குறிப்பிட்டு போட்டிருக்கிறார். உடனே இந்த பதிவை பார்த்த சில நெட்டிசன்கள் இந்த கணக்கில் இருந்து பணம் கேட்டு தனக்கு மெசேஜ் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

ரூ 50 ஆயிரம்
50 ஆயிரம் பணம் வேண்டும் என மெசேஜ் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறு பணம் கேட்டது குறித்து அந்த கணக்கு குறித்து சைபர் கிரைமில் ரிப்போர்ட் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில் நடிகை மகாலட்சுமி பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு பணம் கேட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நக்மாவிடம் ரூ 1 லட்சம் அபேஸ்
நடிகை நக்மாவுக்கு வந்த ஒரு போன் காலில் பேசிய நபர் தான் வங்கி அதிகாரி என்றும் கேஒய்சியை அப்டேட் செய்ய வேண்டும் என பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நக்மாவின் மொபைல் எண்ணிற்கு 20 முறை ஓடிபி வந்துள்ளது. ஆனாலும் அவர் பகிரவில்லை. எனினும் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ 1 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நக்மா மும்பை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications