சொன்ன மாதிரியே கம்ப்ளைன்ட் கொடுத்த விஜே மகேஸ்வரி.. இனி தான் பலருக்கு பிரச்சனையே!
வி ஜே மகேஸ்வரி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மகனை பற்றி தவறாக பேசியவர்களுக்கு எதிராக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார்.
சென்னை: விஜே மகேஸ்வரி தன்னுடைய மகனைப் பற்றி தவறாக சித்தரித்து கிண்டல் செய்தவர்களுக்கு எதிராக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே விஜே மகேஸ்வரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கருத்தை தைரியமாக முன்வைத்து வருகிறார்.
அதனால் சமூக வலைத்தளத்தில் அவருக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.
விஜே மகேஸ்வரியை மட்டுமல்லாமல் சில நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் அவருடைய மகனின் புகைப்படங்களையும் தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

துணிச்சலான வார்த்தை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விட்டனர். அந்த வரிசையில் ஒரு நபராக இருக்கும் விஜே மகேஸ்வரி ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய கருத்தை எப்போதும் தைரியமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதும் சரி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் சரி தான் எது சரி என்று நினைக்கிறோமோ அதை தைரியமாக இவர் முன்வைத்து வந்தார். இதனால் இவருக்கு அதிகமான பாராட்டு கிடைத்து வந்தது. அதே நேரத்தில் நெகட்டிவ் கருத்துகளும் இவருக்கு வந்த வண்ணமாகவே இருக்கிறது.

அசீம் பற்றிய கருத்து
தன்னை பற்றி வரும் நெகட்டிவ் கருத்துக்களை ஆரம்பத்தில் இருந்தே விஜே மகேஸ்வரி கண்டு கொள்வதே இல்லை. இவர் தொகுப்பாளராக இருந்து நடிகையாகவும் நடித்திருந்தாலும் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் இவருக்கு வராமல் இருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தொடர்ந்து அசீமுடைய கேரக்டர் சமூகத்தில் பிரதிபலித்து விடக்கூடாது என்று பயந்து தன்னுடைய கருத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு இருப்பதால் அசீம் ரசிகர்கள் அதிகமாக மகேஸ்வரியை திட்டி வருகின்றனர்.

மகேஸ்வரியின் வார்னிங்
ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையாக விஜே மகேஸ்வரியும் என்னை என்ன வேணாலும் திட்டிக் கொள்ளுங்கள் அதைப்பற்றி நான் கண்டு கொள்ளப் போவதில்லை இதையெல்லாம் கடந்து கொண்டுதான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று பதில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் ஒரு சில நெட்டிசன்கள் விஜே மகேஸ்வரியை மட்டுமல்லாமல் அவருடைய மகன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் மிஸ் யூஸ் செய்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் அவருடைய மகனை பற்றி அவதூராக பல வார்த்தைகளையும் பேசி இருக்கிறார்கள். இது குறித்து ஏற்கனவே மகேஸ்வரி வார்னிங் கொடுத்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறதாம்.

கம்ப்ளைன்ட் பதிவு செய்யப்பட்டது
இந்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று விரைவில் புகார் அளிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வார்னிங் கொடுத்து, தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு மகனைப் பற்றி பெருமையாகவும் நெற்றிசன்களுக்கு பதிவு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய மகனின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்திய மற்றும் தவறாக பேசிய ஒரு சிலரின் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கும் ரசீதை பகிர்ந்து இருக்கிறார். தொடர்ச்சியாக அவரைக் குறித்து தவறுதலாக பேசி வந்த சில சமூக வலைதள ஐடிகளும் அதில் மாட்ட இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் மகேஸ்வரியின் துணிச்சலான செயலை பலர் பாராட்டி வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications