இதனால் தான் மணிமேகலை வெளியேறினாரா? அவரே வெளியிட்ட வீடியோ.. வெயிலில் இப்படியா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை தன்னுடைய சொந்த ஊரில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்தோடு மணிமேகலை வெளியேறி இருப்பதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் எதற்காக மணிமேகலை வெளியேறினார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மணிமேகலை எதற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்கிற தகவலை இதுவரைக்கும் கூறவில்லை.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய சொந்த ஊரில் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

லொட லொட பேச்சு
பொழுது போக்குவதற்கும், பாடல் கேட்பதற்கும், சன் மியூசிக் மற்றும் இசையருவி மட்டுமே இருந்த காலகட்டத்தில்,சினிமா கதாநாயகி களையும் தாண்டி பல இளைஞர்களின் அபிமான விஜே வாக இருந்தவர் மணிமேகலை. இவரது கேப் விடாத லொட..லொட.. பேச்சுக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.அந்த காலகட்டத்தில் எல்லாம் மக்களை எளிதில் ரீச் செய்வதற்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்,போன்ற சோசியல் மீடியாக்கள் இருந்திருந்தால் இன்று இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகிகளில் ஒருவராக கூட இருந்திருக்கலாம்..!

ஜோடியாக ரீ என்ட்ரி
விஜே வாக நல்ல பிரபலமாக இருந்தாலும், ஹுசேன் உடனான காதல் திருமணத்திற்கு பின்பு சின்ன கேப் விட்டதால் அதன்பின்பு மணிமேகலை பண்ணிய நிகழ்ச்சிகள் அவரை பழைய மாதிரி பெரிதளவு ரீச் செய்யவில்லை. ரியாலிட்டி ஷோவுக்காகவே உருவாக்கப்பட்டது போல் நிகழ்ச்சிகளை வழங்கும் விஜய் டிவியில், தன் கணவருடன் இணைந்து 'மிஸ் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சிக்காக, சன் நெட்வொர்க்கில் இருந்து விஜய் டிவி பக்கம் தன் ரூட்டை மாற்றினார். அன்றிலிருந்து இவர் கேரியர் என்னவோ ஏறுமுகம் தான். 'மிஸ் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' ஷோவில் ரன்னர் -அப், பாக வந்தாலும் மணிமேகலையை.. பழைய விஜே மணிமேகலையாக..... நமது ரசிகர்கள் தூசுதட்டி ரசிக்க ஆரம்பித்தனர்.

துரு துருவென கோமாளி
'குக் வித் கோமாளி' இந்த நிகழ்ச்சியில் பெயரில் மட்டும் தான் 'கோமாளி' ..,ஆனால் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி ஒரு 'கதாநாயகன்' தான். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி அதன் போட்டியாளர்களை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில் திடீரென நுழைந்து விஜே மணிமேகலையும், 'பூவோடு சேர்ந்த.. நாரும் மணப்பது போல்' நிகழ்ச்சியில் இணைந்த மணிமேகலையும்..செம ஃபேமஸ் ஆகிவிட்டார். ஆரம்பத்தில் எப்படி துருதுருவென இருந்தாரோ.., அதே எனர்ஜி கொஞ்சமும் குறையாமல் இருப்பது தான் இவரது பிளஸ்.

திடீர் விலகல்
பொதுவாக தமிழ்நாட்டில் விஜய் டிவியில் பணியாற்றினால் சோசியல் மீடியாவில் அதிகமான பார்வையாளர்களை பெற்று விடலாம். இவரும் அதைப் பயன்படுத்தி யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் மூலம் நன்கு கல்லா கட்டி வருகிறார். தனக்கிருக்கும் பேச்சுத்திறமை மூலமே '90ஸ்'கிட்ஸ் மற்றும், 2கே'கிட்ஸ் க்கு நன்கு பரிச்சயமான செலிபிரிட்டி ஆக வலம் வரும் மணிமேகலை, பேச்சு திறமைக்கு.. பேஸிக்காண பட்டிமன்றத்தையும் விட்டுவைக்கவில்லை.
இந்த நிலையில் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலக போவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய வருத்தங்களை கூறி அடுத்த ப்ராஜெக்ட் இதைவிட சிறப்பாக அமைய வேண்டும் என்று தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு எதற்காக மணிமேகலை வெளியேறினார் என்று கேள்வி பதில் கிடைக்கவில்லை.

கிராமத்தில் கொண்டாட்டம்
இந்த நிலையில் எப்போதும் விடுமுறை நாட்களில் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து அங்கே பல வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வரும் மணிமேகலை தற்போது சொந்த ஊரில் ஹோம் டூர் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். கிராமத்தில் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் இவர் ஜாலியாக இருப்பதை அதில் பதிவு செய்திருக்கிறார். இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து இளவெயிலில் இவர் நின்று கொண்டு அதன் அழகை ரசிப்பதை அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் இதனால்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகு நீங்களா? இனி அப்போ எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டாரா? தன்னுடைய சொந்த ஊரில் மணிமேகலை செட் ஆகிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications