பாஸ்போர்ட் ஆபீஸில் நடந்த அவமானம்.. 2 மணி நேரம் கூனி குறுகி.. விஜே மணிமேகலை வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் விஜே மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் செய்த சிறு தவறால் இரண்டு மணி நேரம் கூனி குறுகி அவமானப்பட்டதாக வெளிப்படையாக பேசி இருக்கிறார். பாஸ்போர்ட் ஆபீஸில் தனக்கு இது இரண்டாவது முறையாக நடந்த அவமானம் என்றும் மணிமேகலை கூறி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை குவித்து வருகிறது.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய விஜே மணிமேகலை இப்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர்தான் இப்போது தொகுப்பாளராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சில சீசன்களாக கோமாளியாக மணிமேகலை கலந்து கொண்டார். ஆனால் கடந்த சீசனில் தான் இதற்கு மேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டு பிறகு தொகுப்பாளராக சில மாதங்கள் கழித்து வந்திருந்தார்.

அதேபோல மணிமேகலை சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவ்வாக இருக்கிறார். சமையலே தெரியாத இவர் திருமணத்திற்கு பிறகு சமையலால் தனக்கு ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அதிகமாக வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகமாக கலாய்க்கப்படுகிறது. மணிமேகலை அவருடைய கணவர் உசேனை காதலித்து திருமணம் செய்து கொண்டது சில வருடங்களுக்கு முன்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

மணிமேகலையின் குடும்பத்தினர் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கொடுத்து வந்தனர். அதன் காரணமாகவோ என்னவோ அடுத்தது youtube சேனல் ஒன்று தொடங்கிய மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் பாலோவர்களாக மாறி விட்டனர். விஜய் டிவியில் இவருக்கு கிடைக்கும் வருமானத்தை விட யூடியூப் சேனலில் இவருக்கு அதிகமான வருமானம் கிடைத்து வருகிறது.

அதனால் தான் வாங்கும் குண்டூசி முதல் வீடு வரை என எல்லா விஷயங்களையும் மணிமேகலை தன்னுடைய youtube சேனலில் வீடியோவாக வெளியிட்டு விடுகிறார். இதை பார்த்து பலர் மணிமேகலைக்கு கமாண்ட் போட்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க இப்போது மணிமேகலை தன்னுடைய கணவரோடு சென்னையில் உள்ள பாஸ்போர்ட் நிலையத்திற்கு சென்றபோது அங்கு அவசர அவசரமாக கிளம்பி போனாதால் இரண்டு கால்களிலும் வெவ்வேறு செருப்புகளை போட்டு போயிருக்கிறார்.

இதை அவர் கவனிக்காமல் ஆபீசுக்கு சென்ற பிறகுதான் அங்கு வைத்து பார்த்திருக்கிறார். பிறகு அதை வீடியோவாக எடுத்த மணிமேகலை நான் ஆபீஸில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் பட்ட அவமானம் இருக்கே ரொம்ப கேவலமாக இருந்தது. யாரும் இதுபோல செஞ்சுடாதீங்க என்று புலம்பியபடி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதே நேரத்தில் மணிமேகலை கவலைபடாமல் இது தான் இப்போது ட்ரெண்டிங் என்று சொல்லிவிடுங்கள் என்று ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications