காலில் அடிபட்டு கட்டுடன் விஜே மணிமேகலை.. சோகத்தில் பதிவு.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரீட்சையமான விஜே மணிமேகலை காலில் கட்டோடு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தனக்கு காலில் எப்படி அடிபட்டது என்பது குறித்து சோகமாக விளக்கமும் கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் மணிமேகலை மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ரசிகர்களும் பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் விஜே மணிமேகலைக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. சமூக வலைத்தளத்திலும் விஜய் டிவியிலும் பிரபலமான ஒரு நபராகத்தான் மணிமேகலை வலம் வந்து கொண்டிருக்கிறார். மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கலந்து கொண்டிருந்தார்.
அதுபோல பல வருடங்களாக தான் ஆசைப்பட்ட படியே தன்னுடைய சொந்த கிராமத்தில் இடம் வாங்கி அங்கு பெரிய பங்களா போன்ற வீடு ஒன்றையும் கட்டிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சுக துக்கங்களை ரசிகர்களிடம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் மணிமேகலை இப்போது தனக்கு காலில் அடிபட்டு பெரிய கட்டு போட்டு இருக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில், "எதிர்பாராத விதமாக வழுக்கும் தளத்தில் கீழே விழுந்துவிட்டேன். காலில் காயம். எழவும் முடியவில்லை. மனசோர்வோடு இருக்கிறேன் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.இந்த நிலையில் ஏற்கனவே மணிமேகலைக்கு சில மாதங்களுக்கு முன்புதான் காலில் வெண்ணீர் சிந்தி கொஞ்ச நாட்கள் அவதிப்பட்டு இருந்தார்.

அதை தொடர்ந்து அப்போதும் இவருக்காக அதிகமான ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர். அதற்குப் பிறகு மணிமேகலை அடுத்தடுத்து தன்னுடைய வாழ்க்கையில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இப்போது திடீரென்று இவருக்கு மீண்டும் காலில் அடிபட்டு இருப்பது குறித்து பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல சில மாதங்களுக்கு முன்பு மணிமேகலை திடீரென உடல் எடை கூடி விட்டது குறித்தும் அதிகமான சர்ச்சைகள் பரவி வந்தது. அதாவது மணிமேகலைக்கு உடல் நல பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விட்டதா? அல்லது கர்ப்பமாக இருக்கிறாரா? என்பது போன்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். அது குறித்தும் மணிமேகலை விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு காலில் அடிபட்டு இருப்பதற்கு பிரபலங்கள் பலரும் வருத்தங்களை தெரிவித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவருக்காக வேண்டிக் கொள்வதாக கூறியிருக்கின்றனர்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications