கடை திறப்பு விழாவிற்கு சென்ற மணிமேகலைக்கு கிடைத்த அவமானம்..அவரே வெளியிட்ட வீடியோ
சென்னை: தொகுப்பாளராக பல பேருடைய மனதை கவர்ந்த மணிமேகலை தற்போது தனக்கு நடந்த அவமானம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
மணிமேகலை தற்போது அவருடைய சொந்த ஊரில் பெட்டிக்கடையை திறந்து வைத்திருக்கிறார்.
குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய பிறகு மணிமேகலையின் நிலைமை இப்படி மாறிவிட்டது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தொகுப்பாளர் மணிமேகலை பலருக்கும் பரீட்சயமானவர். இவர் விஜய் டிவியில் செல்ல பிள்ளையாக பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். தொகுப்பாளராகவும் போட்டியாளராக இருந்திருக்கிறார். அதுவும் குக் வித் கோமாளியில் மூன்று சீசன்களாக தொடர்ந்து கோமாளியாக இவர் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது சில மாதங்களுக்கு முன்பு இந்த நான்காவது சீசனில் இருந்து வெளியேறி இருந்தார்.
மணிமேகலை சின்ன திரையிலும் சமூக வலைத்தளத்திலும் பலருக்கும் பரிட்சயமானவர். தன்னுடைய youtube சேனல் மூலமாக தான் செய்யும் அன்றாட நடவடிக்கைகளை அப்படியே வீடியோவாக வெளியிட்டு பல லைக்களை அள்ளி அதில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட யூடியூப் மூலமாக உங்களுக்கு வருமானம் அதிகமாக வருகிறதா அல்லது விஜய் டிவி மூலமாக வருமானம் வருகிறதா என்று கேட்டதற்கு கூட youtube மூலமாகத்தான் அதிக வருமானம் வருகிறது என்று மணிமேகலையே வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளிக்கு பிறகு விஜய் டிவியில் தற்போது தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பட்டிமன்றம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் மணிமேகலை தன்னுடைய சொந்த ஊரில் புதியதாக வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். அதற்காக அடிக்கடி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று அங்கே இருக்கும் நபர்களோடு வீடியோ வெளியிட்டு வருவது இவருடைய வாடிக்கை தான்.
அந்த ஊரில் மணிமேகலையின் உறவினர்களாக ஒரு சில சிறுவர்கள் எப்போதும் மணிமேகலையோடு இருந்து வருகிறார்கள். அவர்களோடு சேர்ந்து மணிமேகலை பல காமெடியான வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது தன்னுடைய சொந்த ஊரில் இருக்கும் அவரோடு சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நபர் புதிய பெட்டிக்கடை தொடங்கி இருப்பதற்கு தன்னை சிறப்பு விருந்தினராக அழைத்து அந்த கடையை திறந்து வைக்க சொல்லி இருக்கிறார்கள் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதுக்கு அவருடைய கணவர் யாரும் திறப்பு விழாவிற்கு கூடாததால் நீயா ஒவ்வொருத்தருக்கா போன் போட்டு நான் வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயா? என்று கலாய்த்து அவமானப்படுத்த அதனால் கோபமான மணிமேகலை பிறகு அதை கண்டுகொள்ளாமல் வா நம்ம இருவரும் சேர்ந்து போவோம் என்று அந்த ஊர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அழைத்துக் கொண்டு பெட்டிக்கடையில் இவர் செய்த அட்ராசிட்டி தற்போது வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications