ஜீ தமிழ் போனதும் மணிமேகலை போட்ட முதல் போஸ்ட்..பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்த செய்தி..குவியும் கமெண்ட்
சென்னை: தொகுப்பாளினி மணிமேகலை கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் பணியாற்றி வந்தார். ஆனால் கடந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு இப்போது விஜய் டிவியை விட்டு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இதுக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார். ஜீ தமிழுக்கு போனதும் முதல் முறையாக மணிமேகலை போட்ட போஸ்ட் இணையத்தில் அதிக கமெண்ட் பெற்று வருகிறது.
பொதுவாக எந்த வேலையாக இருந்தாலும் சரி அங்கு போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்ததாக தான் இருக்கிறது. ஒரு சில அலுவலகங்களில் வேலை பார்க்கும் போது சிலருக்குள் ஏற்படும் மனஸ்தாபம் காரணமாக பலர் வேலையை விட்டு வெளியேறுகிறார்கள். அதுபோலத்தான் கடந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலையும் திடீரென்று வெளியேறி இருந்தார்.

அவர் அப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளினி என்னை வேலை செய்யவிடாமல் தடுக்கிறார். அவருடைய பேச்சை கேட்டு தான் இந்த நிகழ்ச்சி சேனலில் இருக்க வேண்டும் என்பது போன்று அவர் நடந்து கொள்கிறார். எனக்கு இது உடன்பட முடியவில்லை.
நான் வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய வேலையை செய்ய விடாமல் அந்த நபர் தடுப்பதால் நான் என்னுடைய சுய கௌரவத்திற்காக விஜய் டிவியில் இருந்து விலகுகிறேன் என்று அதிரடி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அப்போது பிரியங்காவை தான் மணிமேகலை சொல்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ரகசியம்.
ஆனால் அந்த நேரத்தில் பிரியங்கா மணிமேகலைக்கு எதிராக எந்த பதிவுகளையும் வெளியிடவில்லை. ஆனால் மணிமேகலைக்கு எதிராகவும் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்து பிரபலங்கள் பலர் போஸ்ட் போட்டு கொண்டிருந்தனர். அதற்கு மணிமேகலை தன்னுடைய youtube சேனலில் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த பிரச்சனை விரிவடைந்து கொண்டு இருந்தது. பிறகு சில மாதங்களாகத்தான் இப்போது அது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் மணிமேகலை ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் விஜய் தொகுத்து வழங்கி வந்தார். அவரோடு சேர்ந்து மணிமேகலையும் தொகுத்து வழங்குகிறார். (இது குறித்து அதிகாரப்பூர்வமான செய்தி போன வாரத்திலேயே நாம் வெளியிட்டு இருந்தோம்.)
இந்த நிலையில் மணிமேகலை குறித்த அதிகாரப்பூர்வமான ப்ரோமோவை நேற்று சேனல் தரப்பில் இருந்து வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் facebook பக்கங்களில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார்.
அவமானப்பட்டு, கஷ்டப்பட்ட இடத்திலேயே கெத்து காட்டிய மணிமேகலை.. குவியும் வாழ்த்து
அதில், என்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறேன். மக்கள் வழக்கம் போல உங்களுடைய சப்போர்ட் எனக்கு கொடுக்க வேண்டும் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு மோனிஷா, தர்ஷா குப்தா போன்ற சிலர் மணிமேகலைக்கு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விராட் கோலியின் புகைப்படத்தை பகிர்ந்து "கெட்ட பையன் இந்த ஸ்டாருடா.. உன்ன மிஞ்ச யாருடா" என்று அனிருத்தின் பாடலை பயன்படுத்தி இருக்கிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் இது பிரியங்கா மணிமேகலைக்காக வைத்த ஸ்டோரியா? அல்லது விராட் கோலிக்காக வைத்த ஸ்டோரியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதுபோல டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இந்த முறை நடுவர்களாக வரலட்சுமி அறிமுகம் ஆகி இருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஆரம்பத்தில் வெளியான ப்ரோமோவில் அதிகமான சென்டிமென்ட் காட்சிகள் இருந்தது.
கனவு நிறைவேறியது! கல்யாணம் ஆகி 7 வருடங்களுக்கு பிறகு மணிமேகலை சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து
எளியவர்களின் திறமைகளை உலகறிய செய்யும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடன திறமையால் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றம் வந்து விடாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் பலருடைய கதைகளை சொல்ல இருக்கிறார்கள். அதனால் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பல எமோஷனலான காட்சிகள் வர இருக்கிறது. அதுபோல மணிமேகலை மற்றும் வரலட்சுமியின் என்ட்ரியால் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ரசிகர்களை கவர போகிறதா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications