பிரிந்திருப்பதாக கணவர் போட்ட போஸ்ட்.. வேதனையோடு பிரியங்கா வெளியிட்ட பதிவு.. இவ்வளவு பெரிய பிரச்சனையா?
சென்னை: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் விஜே பிரியங்காவை அவருடைய கணவர் பிரிந்திருப்பதாக நேற்று போஸ்ட் போட்டு இருந்தார். இந்த நிலையில் பிரியங்கா இன்று வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தான் எதற்காக கணவரை பிரிந்து இருக்கிறேன் என்பது விளக்கம் அளிப்பது போன்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வலம் வரும் விஜே பிரியங்காவிற்கு அறிமுகமே தேவை இல்லை. சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா விஜய் டிவியில் கலந்து கொள்ளாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா நிகழ்ச்சியிலும் அட்டனன்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். நான் தொகுப்பாளினியாக மட்டுமல்ல போட்டியாளர்களாகவும் வருவேன் என்று பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சி உட்பட எல்லா நிகழ்ச்சியிலும் தலை காட்டிக் கொண்டிருக்கும் பிரியங்கா பற்றிய செய்திகள் இணையத்தில் எப்போதுமே பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

விஜே பிரியங்கா புகைப்படம்
சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் இருந்து மணிமேகலை விலகிய போது பிரியங்காவின் பெயர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு சில வாரங்கள் மட்டும் அமைதியாக இருந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் செய்ததாக புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது.
முதல் திருமணம்
பிரியங்காவிற்கு ஏற்கனவே விஜய் டிவி பிரபலம் ஒருவருடன் திருமணம் நடந்திருந்த நிலையில் சில வருடங்களிலேயே அது விவாகரத்தில் முடிந்து விட்டது. ஆனால் தன்னுடைய விவாகரத்து பற்றி பிரியங்கா எந்த இடத்திலும் வாய் திறக்காமல் இருந்தார். சோசியல் மீடியாவில் தான் அவர் முதல் கணவரை பிரிந்து விட்டார் என்ற பேச்சுகள் எழுந்து வந்தது. அதற்கு பிரியங்கா ஆமாம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை.
விஜே பிரியங்கா இரண்டாவது திருமணம்
இந்த நிலையில் திடீரென்று எனக்கு இரண்டாவது திருமணம் முடிந்து விட்டது என்று பிரியங்கா போஸ்ட் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பிரியங்காவின் இரண்டாவது கணவர் யார்? என்ற தேடலும் இணையத்தில் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியை விட்டு பிரியங்கா விலகிவிடுவார் என்று வதந்திகளும் பரவி வந்தது.

விஜே பிரியங்காவின் கணவர் பதிவு
ஆனால் பிரியங்கா தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சில வாரங்கள் மட்டும் அவர் சூப்பர் சிங்கர் உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை. இந்த நிலையில் தான் பிரியங்காவின் கணவரான வசி நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் "மிஸஸ் பிரியங்கா தேஷ்பாண்டே வசி, நீங்க எப்போ திரும்பி வர போறீங்க? மிஸ் யூ" என்று பதிவிட்டு இருந்தார்.
பிரியங்கா பதிவு
இதனால் பிரியங்காவும் அவருடைய கணவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்றும் பிரியங்காவை அவருடைய கணவர் மீண்டும் சீக்கிரமாக திரும்பி வர சொல்லி போஸ்ட் போட்டு இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. இப்படியான நிலையில் இன்று பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் "தனக்கு காலில் அடிபட்டு இருப்பதாகவும் தான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து இப்போது மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு வந்து கொண்டிருப்பதாகவும்" குறிப்பிட்டு இருக்கிறார். இதனால்தான் பிரியங்கா அவருடைய கணவரை பிரிந்து இருக்கிறார் என்று தெரிகிறது. கணவர் பதிவு வெளியிட்டதை தொடர்ந்து இப்போது பிரியங்காவும் காலில் அடிபட்டு இருக்கும் விஷயத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications