கடந்த மாதம் தானே கல்யாணம்! அதற்குள் பிரிவா? பிரியங்காவின் போட்டோவை பகிர்ந்து கணவர் வருத்தம்
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி கொண்டிருக்கும் விஜே பிரியங்காவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அவருடைய கணவர் வசி சாச்சி தன்னுடைய மனைவி பிரியங்கா தன்னை பிரிந்து இருப்பதாக வருத்தத்துடன் பதிவு வெளியிட்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வலம் வரும் பிரியங்கா பற்றிய செய்திகள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவருடைய இரண்டாவது திருமண புகைப்படங்களை அவர் பகிர்ந்ததும் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. பிரியங்கா ஏற்கனவே விஜய் டிவி பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனாலும் பிரியங்கா தொடர்ந்து விஜய் டிவியில் தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்காவின் இரண்டாவது திருமணம்
அதே நேரத்தில் கடந்த வருடத்தில் விஜே மணிமேகலை விஜய் டிவியை விட்டு விலகிய போது பிரியங்கா பற்றிய சர்ச்சைகள் அதிகமாக இருந்தது. அதற்கு பிறகு சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில் கடந்த மாதத்தில் பிரியங்கா தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தன்னுடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது. பிரியங்காவின் இரண்டாவது கணவர் யார் என்ற தேடலும் இணையத்தில் இருந்தது. அதோடு பிரியங்காவிற்கு ஏற்கனவே குழந்தை இருக்கிறதா? என்று கூட கேள்விகள் எழுந்து வந்தது.
விஜே பிரியங்கா ஃபோட்டோஸ்
தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு எப்போதும் பதில் கொடுக்காத பிரியங்கா இப்போதும் அமைதியாகவே இருந்தார். ஆனால் தன்னுடைய கணவரோடு வெளிநாட்டில் ஹனிமூனுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். திருமணம் முடிந்த அடுத்த சில வாரங்களிலேயே தன்னுடைய பிறந்தநாளையும் கொண்டாடி இருந்தார். அதுபோல பிரியங்கா திடீர் திருமணம் செய்வதற்கு காரணம் அவர் கர்ப்பமாக இருப்பதுதான், அதனால் தான் அவர் திடீர் திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.
பிரியங்கா கணவர் வசி பதிவு
இந்த நிலையில் இன்று பிரியங்காவின் கணவர் வசி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்காவோடு எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, "மிஸ்ஸஸ் பிரியங்கா தேஷ்பாண்டே சச்சி எப்ப வரீங்க? என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதனால் இவர்கள் இருவரும் இப்போது பிரிந்திருப்பதாக தெரிகிறது. பிரியங்கா சூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்திருப்பதால் வசி இப்படி போஸ்ட் போட்டு இருக்கிறாரா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
ரசிகர்கள் கமெண்ட்
அதில் சில ரசிகர்கள் பிரியங்காவை டேக் செய்து உங்க கணவர் உங்களை ரொமான்டிக்காக தேடிக் கொண்டிருக்கிறார், நீங்கள் சீக்கிரமாக கிளம்பி போங்க மேடம் என்று பிரியங்காவை கிண்டல் செய்து இருக்கிறார்கள். அதற்கு வசி லைக்கு கொடுத்திருக்கிறார். அதுபோல இன்னும் சில ரசிகர்கள் உங்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கிறது, இதுபோல எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications