கன்னக் குழி அழகி.. கலக்கல் வில்லி.. மனசை கவ்வும் சங்கீதா!
சென்னை: தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரையில் வில்லியாக கலக்கி கொண்டிருக்கும் சங்கீதா தன்னுடைய கன்னக் குழி அழகில் ரசிகர்களை மயக்கி வருகிறார்.
இவர் எதிர்மறை கேரக்டரில் நடித்தாலும் இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது . இவருடைய போஸ்ட்டுகளிலும் போட்டோஸ்களும் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.
சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் சங்கீதா.அதைத் தொடர்ந்து அடுத்து சன் டிவியில் அழகு சீரியலில் வில்லி பூரணவாக கலக்கிக் கொண்டிருந்தார்.

வில்லி கேரக்டர்
இந்த சீரியலில் முதலில் இவர் நல்ல பாஸிட்டிவ் கேரக்டரில் நடித்து பின்பு வில்லி கேரக்டருக்கு மாறியவர். இது இவருக்கு முதலில் பிடிக்கவில்லை என்றாலும் விருப்பம் இல்லாமல் தான் இதில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் வில்லியாக நடிப்பது இவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதனால் இந்த சீரியலில் இவர் விருப்பப்பட்டு நடிக்கவில்லையாம். இருந்தாலும் இவ்வளவு பெரிய அளவில் ரீச் ஆகும் என்று இவர் எதிர்பார்க்கவில்லையாம்.

என்னா ஒரு தாக்கம்
இந்த சீரியல் முடிந்த பிறகுதான் இவர் நடித்த கேரக்டரின் தாக்கத்தை ரசிகர்களிடம் பார்த்து வியந்து போயுள்ளார். திடீரென இந்த சீரியலை முடித்ததும் அவருக்கு ரொம்பவே கஷ்டமாக தான் இருந்தது. தன்னுடைய குடும்பத்தை மிஸ் பண்ணுவது போல உணர்கின்றாராம். இந்த சீரியலுக்காக இவருக்கு சன் குடும்பம் விருதுகள் வழங்கப்பட்ட போது ரொம்ப உணர்ச்சி வசப்பட்டார்.

சொல்லிக் கொடுத்த ரேவதி
இவருக்கு இந்த சீரியலில் நடிப்பதற்கு நடிகை ரேவதி தான் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தாராம். இவர் கண்ணை உருட்டி கண்ணிலேயே காட்டும் கோபத்தைக் கூட ரேவதி தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல இந்த சீரியலில் தலைவாசல் விஜய்யும் இவரும் மாமன் மருமகளாக நடித்திருந்தாலும் அவருடைய குழந்தை போல தான் பாசம் காட்டுவாராம்.

உரிமையுடன் பழகினால் பிடிக்கும்
தன்னுடைய குடும்பத்தில் ஒருவரை போலதான் உரிமையுடன் பழகுவது சங்கீதாவிற்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதுமட்டுமல்ல சீக்கிரமாக இவருக்கு திருமணம் நடக்கப் போகுது போல. ரசிகர்கள் இவரிடம் திருமணம் எப்போது என்று கேட்பதற்கு சீக்கிரத்தில் இருக்கும் என்று அவருடைய க்யூட்டான சிரிப்பில் சிரிச்சுகிட்டே சொல்லியிருக்கிறார்.

ரொமான்ஸ்தான் வரலை
அதுமட்டுமல்ல வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்துல இவருக்கு மாப்பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் எதுவும் இல்லையாம். இவருக்கு சீரியலில் நடிக்கும்போது ரொமான்ஸ் சீன்களில் நடிப்பதுன் ரொம்பவும் கஷ்டமாக இருந்ததாம். கொஞ்சம் கூட ரியல் லைப்லயும் ரொமான்ஸ் வரவில்லை, ரீல் லைஃப்லையும் வரவில்லை என்று ரொம்பவே பீல் பண்ணி இருக்கிறாராம். இவர் ரொமான்ஸில் நடிக்கும்போது மட்டும் திணறுவதை கண்டு டைரக்டர் டென்ஷனாகி விடுவாராம்.

நல்லா அழுதாராம்
அதுமட்டுமல்ல அந்த சீரியலில் இவர் தன்னுடைய குழந்தை இல்லை நீ எடுத்து வளர்த்த பொண்ணுதான் என்று இவரது அம்மா சொன்னதும் இவர் அழவேண்டும் .அந்த சீனில் இவர் இவரை அறியாமலேயே ரொம்பவும் அழுது விட்டாராம். அதை பார்த்து எல்லாரும் ஊக்கப்படுத்தினார்கலாம். இந்தளவு நடிப்பை உள்வாங்கி நடிக்கிறார் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். கல்லுக்குள் நீர் இருப்பதை போல இவருக்கும் நடிப்பு இருக்கிறது என்று சிலர் கலாய்த்து இருக்கிறார்கள்.

வானிலை அறிவிப்பு
அதுமட்டுமல்ல இவர் செய்திகளில் வானிலை வாசிப்பவராக பணியாற்றியிருந்தார். இது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்த நிகழ்ச்சியாக இருந்தது. செய்திகளில் பார்க்கும் போது இவர் வானிலை சொல்லும் அழகை பார்ப்பதற்காகவே சில ரசிகர்கள் செய்திகளை பார்த்து இருக்கிறார்களாம். இந்த மாதிரி இவர் படபடவென்று பேசுவது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கும். அதுமட்டுமல்ல வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பிரபலங்களின் வாழ்க்கையையும் அவர்களை கலாய்த்தும் இவர் படபடவென்று பேசுவது நிறைய ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. இருந்தாலும் சீரியல்களில் இவர் மாறுபட்ட கேரக்டரில் நிகழ்ச்சியில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications