எல்லா உண்மைகளையும் சொல்லப் போறேன்.. அதனால்தான் கல்யாணம் கூட ஆகல.. புது அவதாரத்தில் நடிகை சோனா
சென்னை: நடிகை சோனா கவர்ச்சி நடிகையாக சினிமாவில் முத்திரை குத்தப்பட்ட நிலையில் சீரியலின் பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்தி சில சீரியல்களில் நடித்து வந்தார். அதிலும் கடைசியாக அவர் நடித்த மாரி சீரியலில் இருந்து திடீரென்று விலகி இருந்தார்.
இந்த நிலையில் நடிப்பை தாண்டி ஏற்கனவே சோனா தயாரிப்பாளராக ஒரு திரைப்படத்தை தயாரித்து இருந்த நிலையில் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இப்போது நடிப்புக்கு முழுக்கு போட்ட சோனா ஒரு இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார். அதுவும் தன்னுடைய சொந்தக் கதையையே இயக்கப் போகிறாராம். அது பற்றி அவரே கூறிய தகவல்களை பார்க்கலாம்.
நம்பிய இளையராஜாவால் கதறி அழுதேன்.. காப்பாற்றியது 'இந்த' பிரபலம் தான்.. லிவிங்ஸ்டன் எமோஷனல்
அந்த வகையில் நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் அதற்குப் பிறகு வடிவேலு உட்பட்ட சில நகைச்சுவை நடிகர்களோடு நடித்து இருக்கிறார். திரைப்படங்களில் அதிகமாக இவர் கவர்ச்சியான கேரக்டர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில் மன்னார்குடி கமகமக்க என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.
அதைத்தொடர்ந்து அந்த பாடல் மூலமாக பிரபலம் அடைந்த சோனா அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் குத்து பாடல்களுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். இந்த நிலையில் தான் அவர் சினிமா நடிப்பில் இருந்து விலகி வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய கனிமொழி என்ற திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளரானார். ஏற்கனவே தொழிலதிபராக இருந்த சோனா நடிகையாக மாறி அதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஆனார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் நஷ்டத்தை கொடுத்தது.
அதேபோல சோனாவிடம் இருந்த பணத்தையும் பலர் ஏமாற்றியதாகவும் அந்த நேரத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனாலேயே தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பலமொழிகளில் நடித்து வந்த சோனா சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். அதை தொடர்ந்து சீரியலில் களம் இறங்கினார். ஜீ தமிழில் ஒளிபரப்பான மாரி சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சீரியலில் இருந்து திடீரென்று தான் விலகுவதாக கூறிவிட்டு விலகி இருந்தார்.
அதற்குப் பிறகுதான் சோனாவிற்கு ஒரு மாற்றம் கிடைத்திருக்கிறது. சோனாவின் கதையை தொடர்கதையாக எழுத பிரபல நாளிதழ் முன்வர அந்த நாள் இதழில் தொடர்கதையாக வெளியாகி இருக்கிறது. பிறகு அந்த கதையை புத்தகமாக வெளியிடலாம் என்று சோனாவும் சிலருடைய தூண்டுதல் பெயரில் முன்வந்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து அந்தக் கதையை ஏன் ஒரு வெப் சீரிஸ் ஆக எடுக்கக் கூடாது என்று சோனா நினைத்து இப்போது தன்னுடைய பயோபிக்கை சோனாவே எழுதி இயக்கியிருக்கிறார்.
அந்த வெப்சீரிஸ்க்கு ஸ்மோக் என்ற தலைப்பையும் சோனா கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரிஸ் மூலம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிறை குறைகள் என எல்லாத்தையும் சொல்ல இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதை அதை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் அவரிடம் இந்த வெப் சீரிஸில் உங்கள் வாழ்க்கையில் அரசியல் தலைவர்களின் குறுக்கீடு எதுவும் இருந்ததா? அதை பற்றியும் எதையும் சொல்லி இருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.
20 வயசு பொண்ணு இருக்கு.. விஜய்யோடு சர்ச்சை.. படிப்பு ரொம்ப முக்கியம்.. நடிகை சங்கீதா எமோஷனல்
அதற்கு சோனா அரசியல் தலைவர்களோஅல்லது சினிமா பிரபலங்களோ என யாரும் இதுவரை என்னை அந்த வகையில் அப்ரோச் செய்யவில்லை. என் வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை என்ன நடந்ததோ அதை தான் அந்த கதையில் சொல்லி இருக்கிறேன் என்று இயக்குனராக மாறி இருக்கும் சோனா சொல்லி இருக்கிறார்.
அதோடு தன்னை சினிமாவில் ஒரு கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்திவிட்டதாலையே தனக்கு திருமணம் நடக்கவில்லை என்றும் நானும் சக பெண்கள் போல வீட்டு வேலைகளை செய்கிறேன். நடிப்பையும் செய்கிறேன். ஆனால் எனக்கு குத்தப்பட்ட முத்திரையால் திருமணம் ஆகாமல் போய்விட்டது என்று வருத்தத்தையும் அந்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
-
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications