Thug Life: மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் சாஃப்ட் ஃபீலே இல்லை! தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?
'இந்தியன் 2' படத்திற்கு பிறகு வந்த திரைப்படமாக 'Thug Life' (தக் லைஃப்) வெளியானது. மணிரத்னம் இயக்கியதால், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. அதிலும் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பதும், படத்தின் ஹைப் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தது.

பாடல்கள், டீசர் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு தரம் படத்தின் மீது ஒரு சிறந்த வரவேற்பை உருவாக்கின. ஆனால், படம் திரையரங்குகளில் வெளியான பிறகு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போனது. கதை மெதுவாக இருந்ததுடன், கதையின் தனித்துவம் இல்லாததால் பெரும்பாலானோர் ஏமாற்றமடைந்தனர்.
தொழில்நுட்ப தரம், படத்தொகுப்பு சிறப்பாக இருந்தாலும், கதையின் வலிமை இல்லாதது படத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்தது. இதனால், 'Thug Life' பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தும், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சாதிக்க முடியாத படமாகவும், மணிரத்னத்தின் சமீபத்திய படங்களிலேயே ஏமாற்றமாக பார்க்கப்படும் படமாகவும் அமைந்துள்ளது.
'தக் லைஃப்' தோல்வியின் முக்கிய காரணம், திரைக்கதையில் ஒரு நேர்த்தி இல்லை, ஒரு படத்திற்கு வெற்றி என்பது அந்த கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை வைத்து தான் அப்படத்தின் வெற்றி பேசப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தில் கதை போகும் திசை மிக பலவீனமான ஒன்று.
மணிரத்னத்தின் திரைக்கதைகளில் எப்போதும் ஒரு மெதுவான ஃபீல் இருக்கும். ஆனால் தக் லைஃப் படம் அந்த மெதுவான ஃபீலை தாண்டி, சலிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. பல இடங்களில் அழகிய ஷாட்கள் இருந்தாலும், காட்சிகள் உருப்படியாய் நகரவில்லை. எடிட்டிங் செய்தார்களா என்று கேட்கும் அளவிற்கு காட்சிகள் இருந்தன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தாலும், பெரும்பாலான பாடல்கள் மனதில் நிலைத்து விடவில்லை. பின்புல இசை (BGM) கூட, படத்துக்கு ஜீரோ தன்மையை அளித்தது. ரகுமான் இனி வரும் படங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மணிரத்னம் - கமல் கூட்டணி ரசிகர்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் அதற்கேற்ப இல்லை விமர்சனங்கள், சமூக வலைதள விமர்சனங்கள் - all negative பக்கம் சாய்ந்துவிட்டன. இதனால், முதல் நாள் வசூல் கூட பெரிய அளவில் இருக்கவில்லை. பல திரையரங்குகளில் முதல் ஷோமே ஆட்கள் குறைவாக இருந்தது.
'தக் லைஃப்' ஒரு பிரமாண்டமான Visual movie எனினும், உணர்வுப் பிணைப்பு இல்லாததால் ரசிகர்களை பாதிக்க முடியவில்லை. கதையின் சாரம்சம் உணர்ச்சி வடிவில் தெரிவதில்லை. ஒரு திரைப்படம் ரசிகர்களின் மனதில் பதியவேண்டும் என்றால், அதில் உற்சாகம் மட்டுமல்ல, உணர்வும் முக்கியம். ஆனால் 'தக் லைப்'யில் கதையின் நெஞ்சை உருக்கும் தருணங்கள் இல்லாதது, பாத்திரங்கள் ஆழமற்றது, உரையாடல்கள் தாக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் படம் வெறும் செயற்கை தன்மையோடு நகருகிறது. இதனால், படம் பார்வையாளர்களிடம் தொடர்பு கொள்ள முடியாமல் தவறி விட்டது.
'தக் லைஃப்' ஒரு missed opportunity. பெரிய நட்சத்திரங்கள், பெரிய இயக்குநர், பெரிய இசையமைப்பாளர் என்றாலும், உள்ளடக்கம் இல்லாமல் படம் வெற்றி பெற முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மணிரத்னம் மற்றும் கமல் இருவரும் தங்களது ரசிகர்களை இன்னொரு முறையும் ஏமாற்றிவிட்டனர் என்பதே தற்போதைய விமர்சனப் பார்வை. இத்தனைக்கும் மணிரத்னம், கமல், சிம்பு மூன்று பேரும் இயக்குனர்கள் பல வெற்றி படங்களை கொடுத்தவர்கள் அப்படி இருக்க எப்படி இப்படி மிக பெரிய வாய்ப்பை தவற விட்டார்கள் என்று கேள்விக்குறியாக உள்ளது.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications