திடீர்னு எல்லாம் தவறாகி.. காதலர் தினத்தில் டிடி பேசிய உருக்கமான வீடியோ.. எல்லாத்துக்கும் காரணம்?
காதலர் தின வாழ்த்துக்கள் கூறி டிடி, காதலின் பிரிவு பற்றியும் உருக்கமாக பேசிய வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
சென்னை: தொகுப்பாளர் டிடி காதலர் தினத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நாம் உருகி உருகி காதலித்த நபர்கள் பிரிந்து சென்ற பிறகு படும் துயரங்கள் என்னவாக இருக்கும் என்பது பற்றி அவர் அதில் உருக்கமாக பேசியிருக்கிறார்.
காதலர் தினத்தில் காதலர்களுக்கு வாழ்த்து கூறி, பலருடைய வலிகளை பற்றி பேசிய டிடியை நடிகை குஷ்பூ பாராட்டி இருக்கிறார்.

முன்னணி தொகுப்பாளர்
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வரும் டிடி இவர் விஜய் டிவி மட்டுமல்லாமல் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும், திரைப்பட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகள் போன்ற பல பிரமாண்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் அது மட்டும் அல்லாமல் பலருக்கும் ஒரு மோட்டிவேஷன் கொடுக்கும் நபராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வரும் டிடி பல நேரங்களில் பல விஷயங்களைப் பற்றியும் பேசி வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

உனக்கான வழியை கண்டுபிடிக்கும்
டிடிக்கு அவருடைய சொந்த முயற்சியாலே பல வெற்றிகளை பெற்று வந்தாலும், அவருடைய திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்தித்து வந்தவர் தான். ஆனாலும் அதை நினைத்து இவர் துவண்டு விடாமல் தன்னுடைய அடுத்தடுத்த வாழ்க்கை இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார் .இந்த நிலையில் தற்போது instagram பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், அன்பை இழந்துவிட்டதாகவோ அல்லது காதலில் தோற்று விட்டதாகவோ நினைக்கும் அனைவருக்கும் இது உங்களுக்கானது. நான் காதலில் பெற்ற சிறிய அனுபவத்திலிருந்தும் என் மன வேதனையிலிருந்தும் காதல் உனக்கான வழியை கண்டுபிடிக்கும், திறந்திருக்கும் என்று காதலர் தினத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நமக்குள் வரும் கேள்விகள்
காதலில் நல்லா போய்க்கிட்டு இருக்கும். திடீர்னு ஒரு நாள் அது எல்லாம் தவறு என்று ஆகி நம்ம கிட்ட பேச மாட்டாங்க, நமக்கு மெசேஜ் பண்ண மாட்டாங்க, கால் பண்ண மாட்டாங்க, ஒரு நாள் அப்படியே நம்மள ஹோல்ட் பண்ணி விடுவாங்க.
நாம எப்பவுமே என்ன நினைப்போம்னா நாம என்ன தப்பு செஞ்சோம்? என்ன நடந்தது? அந்த நாள் வரைக்கும் கரெக்டா தான போய்கிட்டு இருந்தது. ஆனா அப்போ அந்த நாள்ல நான் என்ன செஞ்சது அவங்களுக்கு தப்பா போயிருக்கும்? இல்லனா நான் ஏதாவது சொல்லனும்னு நெனச்சது தப்பா போயிட்டா? என்று நம்ம என்ன பேசணும்? என்ன செஞ்சோம்? என்று என்ன? என்ன? வென திருப்பி திருப்பி அந்த நாளை நாம நினைச்சுக்கிட்டே இருப்போம்.

டிடியின் விளக்கம்
அந்த நாளில் என்ன தப்பு நம்ம மேல இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக நாம ட்ரை பண்ணுவோம். ஆனா இது சரியான தீர்வு அல்ல, அவங்க உங்கள லவ் பண்ண முடியாத காரணத்தினால் தான் அவங்க நம்ம கிட்ட இருந்து விலகிப் போய் இருப்பாங்க. தவிர உண்மையிலேயே நம்ம மேல தப்பு இருக்காது. அப்படி ஏதாவது தப்பு இருந்திருந்தால் அவங்க நம்ம கிட்ட சொல்லி இருப்பாங்க. அவங்க திடீர்னு ஒரு நாள் நம்மகிட்ட இருந்து மாயமா மறையும் போது, ப்ளீஸ் நீங்க உங்களுடைய சுய அறிவை திறந்து பாருங்க. காதல் என்பது நிஜமா நடக்கணும் என்று இருந்தால் அது இயல்பா இனிமையா நடக்கனும். நாம் நம்மளை மீண்டும் மீண்டும் அவங்க கிட்ட நிரூபிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறி அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications