அந்த நேரத்தில்! நடிகர் விக்ரம் அப்படி இருப்பார் என்று நினைக்கவே இல்லை.. மனம் திறந்த நடிகை ரேணுகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரையில் பிரபலமாக நடித்து வரும் நடிகை ரேணுகா நடிகர் விக்ரம் பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக திரைப்படங்களில் மீண்டும் நடிக்கும் போது பழசை மறக்காமல் விக்ரம் பேசிய வார்த்தைகளை இப்போது நடிகை ரேணுகா நினைவு கூர்ந்து இருக்கிறார்.

What did actress Renuka say about actor Vikrams character

முதல் அறிமுகம்

ஒரு சிலர் மட்டும் தான் திரை வாழ்க்கையில் பல வருடங்களாகவே கொடி கட்டி பறந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய சம்சார சங்கீதம் என்ற திரைப்படத்தின் மூலமாக வெள்ளி திரையில் அடி எடுத்து வைத்து பல ஹிட்டான திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து, இப்போதும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரேணுகா தன்னோடு நடித்த நடிகர்கள் பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் நடிகர் விக்ரம் பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார். அதில் ரேணுகா நடித்த பட்டர்பிளை என்கிற படத்தில் ஒரு பக்கத்தில் மம்முட்டி முக்கியமான கதாநாயகனாக நடித்திருந்தாலும், அந்த திரைப்படத்தில் விக்ரம் தான் கதாநாயகன் அந்தப் படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம். அப்போது விக்ரம் கலகலப்பாக பேசி பழகி கொண்டிருப்பார்

மாறாத குணம்:

ஆனால் பல வருடங்கள் கழித்து நான் விக்ரமை பார்த்தபோது பழசையெல்லாம் நடிகர் விக்ரம் எப்படியும் மறந்து இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. என்னை பார்த்ததும் ஹலோ ரேணுகா..!? என்று ரொம்ப அட்டாச்மென்டா பேசினார். முதல் படத்தில் என்னோடு இருந்த மாதிரி அப்படியே தான் பேசிகிட்டு இருந்தார். அதை நான் பார்த்து வியந்து போய் விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

What did actress Renuka say about actor Vikrams character

அதிகமான திட்டல்கள்

கோப்ரா படத்தில் விக்ரமோடு நான் நடிக்கும்போது அவரை அதிகமாக திட்டுவது போன்ற சீன் இருக்கும். அப்போதெல்லாம் அவர் சிரித்துக் கொண்டே திட்டுங்க திட்டுங்க இன்னும் என்னவெல்லாம் திட்டனும் என்று தோன்றுகிறதோ அதையும் திட்டுங்க என்று ஆரம்பத்தில் நான் அவரோடு நடிக்கும் போது எப்படி இருந்தாரோ அப்படியே தான் கலாய்த்துக்கொண்டு இருந்தார். எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது இவ்வளவு முக்கியமான கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இவர் மாறவில்லையே என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றியது என்று ரேணுகா கூறியிருக்கிறார்.

What did actress Renuka say about actor Vikrams character

ஹிப் ஹாப் ஆதியோடு நடிப்பு

இப்போது வளர்ந்து வந்து கொண்டிருக்கும் ஹிப் ஹாப் ஆதி போன்ற முன்னணி நட்சத்திரங்களோடு தான் நடித்திருக்கும் அனுபவங்களையும் ரேணுகா பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் ஹிப்பாப் ஆதியுடன் அன்பறிவு திரைப்படத்தில் நடித்திருந்தேன். அவருடைய வளர்ப்பு அம்மாவாக நான் அந்த திரைப்படத்தில் வருவேன். அவருடைய பாசமான கேரிங் எனக்கு ரொம்பவே பிடிக்கும் ரொம்பவே. அன்பா எல்லாத்துகிட்டையும் பேசுவார். அவருடைய பாடல்களுக்கு நானும் ஒரு ரசிகை தான். அது போல சூட்டிங் தாண்டியும் பாசமாக இருப்பார். இப்பவும் பல நடிகர்கள் இந்த மாதிரி கேரக்டரோடு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+