இனி அந்த மாதிரி நண்பர்கள் எனக்கு தேவை இல்லை.. இப்போ என்னுடைய நிலைமை? "செல்லம்மா ”அர்னாவ் விளக்கம்
செல்லம்மா சீரியல் கதாநாயகன் சில நண்பர்களால் தான் தன்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைக்கு காரணம். இனி புது நண்பர்களோடு என்னுடைய குடும்ப பிரச்சனையை பகிர மாட்டேன் என கூறியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக அர்னாவ் நடித்து வருகிறார்.
சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் உடன் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் சமீபத்தில் இவர்களுடைய குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அர்னாவ் உடன் இருந்த நண்பர்கள் பலர் திவ்யாவுக்கு ஆதரவாக மாறியதால் தான் இவர்களுடைய பிரச்சனை பெரியதாக ஆனதாகவும் பிரச்சனைக்கு காரணம் தன்னுடைய நண்பர்கள்தான் என்று அப்போது அர்னாவ் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய நண்பர்கள் பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

திடீர் திருமணமும் பிரச்சனையும்
சின்னத்திரையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது என்பது புதிய அல்ல ஆனால் ஒரு சிலருடைய வாழ்க்கையில் தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பலருடைய வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகிறது. அந்த மாதிரி தான் நடிகர் அர்னாவ் மற்றும் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரின் திருமண வாழ்க்கையும் இருந்து வருகிறது. இவர்களுடைய திருமண செய்தி வெளியாகி சில மாதங்களுக்குள் இவர்களுடைய குடும்ப பிரச்சனை சமூக வலைதளத்தில் சின்னத்திரை ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவில் பெரிய அளவில் பூதாகரமாக மாறிவிட்டது.

காரணம் யார்
இந்த நிலையில் தங்களுடைய குடும்ப பிரச்சனைக்கு காரணம் தன்னுடைய நண்பர்கள்தான் என்று அர்னாவ் தெரிவித்து இருந்தார். ஆனால் திவ்யா ஸ்ரீதர் அர்னாவ் செல்லம்மா சீரியல் கதாநாயகியோடு நெருங்கி பழகுவதால் தான் எங்கள் வீட்டில் குடும்பத்தில் பிரச்சனை என்று கூறியிருந்தனர். இருவரும் மாறி மாறி ஆதாரங்களை வெளியிடுகிறோம் என்று மீண்டும் மீண்டும் குற்றசாட்டுகளை கூறிக் கொண்டிருந்தனர். தற்போது சில மாதங்களாக இவர்களுடைய பிரச்சனை அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது ஆனாலும் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதாகத்தான் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அந்த நண்பர்கள் போதும்
இந்த நிலையில் சமீபத்தில் திவ்யா ஸ்ரீதருக்கு வளைகாப்பு பங்க்ஷன் அவருடைய சீரியல் அணியினரால் எளிமையாக கொண்டாடப்பட்டது. இதே நேரத்தில் தற்போது அர்னாவ் ஒரு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். அதில் அவர் தன்னுடைய குடும்பப் பிரச்சனை பெரிய அளவிற்கு ஆவதற்கு காரணம் என்னுடைய நண்பர்களாக இருந்தவர்கள் தான். அவர்கள் தான் என்னுடைய முதுகில் குத்தி விட்டார்கள். என்னுடைய குடும்ப விஷயத்தை நான் அவர்களோடு பகிர்ந்து கொண்டதுதான் நான் செய்த பெரிய தவறு. எனக்கு என்னுடைய சொந்த ஊரான அறந்தாங்கியில் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னை பற்றி நன்றாகவும் தெரியும் என்னுடைய குடும்பத்தை பற்றியும் தெரியும் அவர்கள் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள் அவர்கள் மட்டுமே எனக்கு நண்பர்களாக இனி போதும் என்று கூறி இருக்கிறார்.

இப்போ வளர்ச்சி தானாம்
அது மட்டுமல்லாமல் இனி இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களோடு தொழில் ரீதியாக மட்டும் பேச்சு வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். குடும்ப விஷயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த 2023 வருடம் எனக்கு நல்ல ஒரு வளர்ச்சியை கொடுத்திருக்கிறது. நான் நடித்து வரும் செல்லம்மா சீரியல் பெரிய அளவில் தற்போது வரவேற்பை பெற்று முன்னேறி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நான் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். அதே நேரத்தில் என்னுடைய பிசினஸிலும் நான் கவனத்தை செலுத்தி வருகிறேன். அதனால் தேவையில்லாதவற்றை நான் தவிர்த்துவிட்டு என்னுடைய வாழ்க்கைக்கு தேவையானதை சரியானதில் மட்டும் நான் இப்போது கவனத்தை செலுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications