Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நன்றி மறவாமல் ஜி.பி முத்து செய்த செயல்... இது மட்டும் வேண்டாம் கண்டிக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி பி முத்து பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தன்னுடைய வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஜி பி முத்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்து வந்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிசயமாக இருக்கும் ஜி பி முத்து இப்போதும் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

ஆரம்பத்தில் தற்கொலை முயற்சி

ஆரம்பத்தில் தற்கொலை முயற்சி

டிக் டாக் செயலி மூலமாக பலருக்கும் பரீட்சையமான ஜி பி முத்து இந்த ஆப் தடை சட்டம் செய்யப்பட்ட பிறகு இந்த ஆப் மூலமாக தனக்கு கிடைத்த ரசிகர்களால் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்து விட்டார். ஆரம்பத்தில் செய்து வந்த வேலைகள் எல்லாமே நஷ்டத்தில் முடங்கிவிட குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக குழந்தைகள் மனைவியை விட்டுவிட்டு இவர் தற்கொலை முடிவுக்கு சென்று கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டு தற்போது தன்னுடைய சொந்த முயற்சியால் இவர் செய்த செயல்கள ரசிகர்களின் ஆதரவை பெற்று வாழ்க்கையில் வளர்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸில் இருந்து வெளியேற்றம்

பிக் பாஸில் இருந்து வெளியேற்றம்

டிக் டாக் பிரபலமாக இருந்த இவர் யூட்யூப் மூலமாக வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இவர் இப்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் .இந்த நிலையில் தான் இவருக்கு இருக்கும் ரசிகர்களின் பலத்தை பார்த்த விஜய் டிவி இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறக்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 நாட்கள் கூட இருக்க முடியவில்லை என்று தன்னுடைய குடும்பத்தை நினைத்து நினைத்து பீல் பண்ணிக்கொண்டு மன அழுத்தத்தால் இருந்த ஜி பி முத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார்.

உயிர் நண்பனின் மறைவு

உயிர் நண்பனின் மறைவு

ஜி பி முத்து அன்பாக பழகுபவர்களையும் தனக்கு உதவி செய்தவர்களையும் மறக்காமல் பல இடங்களில் நினைவுபடுத்தி பேசி வருகிறார். அந்த வகையில் இவருடைய உயிர் நண்பன் செல்வகுமார் பற்றி அடிக்கடி பேசி வருவார். அவருடைய நண்பர் திடீரென தற்கொலை செய்து கொண்ட பிறகு இவர் ஒரு சில நாட்கள் மன வருத்தத்தோடு இருந்து வந்தார். இதனை தொடர்ந்து பார்க்க வரும் ரசிகர்களையும் பார்க்க வர வேண்டாம். யாரிடமும் என்னால் பேச முடியவில்லை என்று தவிர்த்து வந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியே வந்த பிறகு இவருக்கு கிடைத்த அவார்டை தன்னுடைய நண்பருக்கு பரிசளித்திருக்கிறார்.

ஜி பி முத்துவை கண்டிக்கும் ரசிகர்கள்

ஜி பி முத்துவை கண்டிக்கும் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் ஜி பி முத்து இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து ஜி பி முத்து நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு வழக்கம் போல அவர் பல பழைய வேலைகளில் செய்து வருகிறார். அதன்படி தற்போது அவர் சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருக்கிறார் .அங்கே அவருக்கு கொடுத்த அவார்டை தன்னுடைய நண்பரின் புகைப்படத்திற்கு முன்பு வைத்து இவர் அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். தான் இன்று இவ்வளவு சுகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமாக தன்னுடைய நண்பன் இருந்தார் என்று இவர் பல முறை கூறியிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் வீடியோ எடுக்கும் போது அவருடைய நண்பர் தான் இவருக்கு உதவி செய்திருக்கிறாராம். அதுபோல பண உதவியும் பலமுறை செய்திருக்கிறாராம். தன்னுடைய நண்பனின் உதவியை மறக்காமல் தனது வளர்ச்சியில் கிடைத்த பரிசை ஜி பி முத்து சமர்ப்பித்து மகிழ்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் செய்யாதீர்கள் நீங்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று செல்லமாக கண்டித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+