சிறகடிக்க ஆசையில் என்ட்ரியான 2 பிரபலங்கள்.. இனிதான் முக்கிய பிரச்சனையே! நடக்கப்போவது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இரண்டு பிரபலங்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். அவர்கள் விஜயாவின் டான்ஸ் கிளாஸில் சேர்வது போன்று காட்சிகள் இருக்கிறது. இதனால் இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ரோகிணியின் மகன் க்ரிஷை தத்தெடுக்க வேண்டும் என்று முத்துவும் மீனாவும் முடிவு செய்து இருக்கின்றனர். ஆனால் கோவிலில் சீட்டு எழுதி பார்த்ததில் இது வேண்டாம் என்று முடிவு வந்திருக்கிறது. ஆனாலும் முத்து நாம எடுத்த முடிவு பற்றி வீட்டில் பேசணும் என்று சொல்லி இருக்கிறார்.

இதை தொடர்ந்து அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் முத்து க்ரிஷ் பற்றி வீட்டில் பேசுகிறார். அப்போது வீட்டிற்கு வந்த ரோகிணி இதை எல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அப்போது மீனா அந்த பொண்ணுக்கு சின்ன வயசுலயே பிடிக்காத கல்யாணம் செஞ்சு வச்சுருக்காங்க. அப்புறம் குழந்தை பிறந்ததும் அந்த புருஷனும் இறந்து போயிட்டாரு. அதனால அவங்க க்ரிஷை ஏற்றுக் கொள்ளவே இல்ல.
அதனாலதான் அத்தைன்னு சொல்லிக்கிட்டு இருந்திருக்காங்க என்று சொல்ல, அதற்கு மனோஜ் அப்போ அந்த பொண்ணு தனக்கு பையன் இருப்பதை யார்கிட்டயுமே சொல்லி இருக்காதே...? ஒரு வேலை அந்த பொண்ணு எவனையாவது கல்யாணம் பண்ணி இருக்கும், அந்த கேனை எங்க இருக்கான்னு தெரியல என்று சொல்ல, இதை எல்லாம் ரோகிணி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே மீனாவும் முத்துவும் இனி தன்னுடைய வீட்டிற்கு வரக்கூடாது என்று தன் அம்மாவிடமும் ரோகிணி சண்டை போட்டுட்டு வந்திருக்கிறார். இதனால் முத்துவும் மீனாவும் குடும்பத்தினரை சமாதானம் செய்து விட்டு ரோகிணியின் அம்மாவிடம் சென்று க்ரிஷி தத்து கேட்டால் கூட அவர் தரமாட்டேன் என்று திட்டி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் விஜயாவின் டான்ஸ் கிளாஸ்க்கு இரண்டு கேரக்டர்கள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.

இவர்களுடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது இவர்கள் இருவரும் காதலர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இனி விஜயாவிற்கு பிரச்சனை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த இரண்டு நபர்களால் விஜயாவுக்கு பிரச்சனை வந்து அதிலிருந்து முத்து தான் விஜயாவை காப்பாற்ற போகிறார் என்றும் தெரிகிறது.

ஏற்கனவே ஒவ்வொரு முறையும் விஜயா மற்றும் மனோஜ் செய்யும் தப்புகளுக்கெல்லாம் கடைசியில் மீனாவின் மீதுதான் பழி விழுகிறது. அதுபோல இந்த விஷயத்திலும் மீனா மீது பழி விழ போகிறதா? அல்லது விஜயா சிக்கிக் கொள்ளப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கான விடை அடுத்த வாரத்தில் தெரியவரும்.
ஏற்கனவே இந்த சீரியல் டிஆர்பியில் தொடர்ச்சியாக நான்கு வாரங்களாக முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த வாரம் பெறும் எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் மீண்டும் இந்த சீரியல்தான் இனி முதலிடத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது... என்ன நடக்கப் போகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications