கேஜிஎஃப் முதல் காந்தாரா வரை! கன்னட சினிமாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட 2015! என்ன நடந்தது?
ஒரு காலத்தில், கன்னட சினிமா பிற மொழிப் படங்களின் ரீமேக்குகளையே நம்பியிருந்தன. கதைகள், திரைக்கதை, நடிப்பு, இசை எல்லாவற்றிலும் மற்ற மொழிப் படங்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு வரை, கன்னட திரை உலகில் டப்பிங் திரைப்படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது. "டப்பிங் அனுமதி கொடுத்தால் கன்னட சினிமா அழிந்துவிடும்" என்ற மனோநிலையே பலரிடம் இருந்தது. ஆனால் இன்று, அந்த தடையினை நீக்கிய பிறகு, கன்னட திரைத் துறையில் ஒரு புதிய தோற்றம் உருவாகியுள்ளது.

கன்னட சினிமாவின் முன்னேற்றம்
2015 வரை, கன்னட திரைப்படத் துறை மற்ற மொழிப் படங்களை அதிகமாக ரீமேக் செய்திருந்தது. தமிழிலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் வெளியாகிய வெற்றிப் படங்களை கன்னடத்தில் வெளியிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இதனால் ஒருவகையில் சொந்த கதை, படைப்பாற்றல் ஆகியவை குறைந்து காணப்பட்டன.
இந்நிலையில், 2015-ல் கர்நாடக அரசு டப்பிங் படங்களுக்கு அனுமதி வழங்கியது. முதலில் பலரும் இதற்கெதிராகக் கருத்து தெரிவித்தாலும், மாறுபட்ட விளைவுகள் பின்பு தென்பட்டன. டப்பிங் அனுமதி கிடைத்த பிறகு, உலக சினிமாவை பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன. மற்ற மொழி படங்கள் மட்டும் அல்லாது, ஹாலிவுட், கொரியன், போன்ற பல்வேறு மொழிப் படங்களும் கன்னடத்தில் பேசத் தொடங்கின.
டப்பிங் அனுமதியின் எதிர்பாராத தாக்கம்
கன்னட சினிமா திரையுலகத்திற்குள் தன்னம்பிக்கை மற்றும் போட்டி உணர்வு வந்தது. "நாம் நம்முடைய சொந்த படைப்புகளை உருவாக்க வேண்டுமா, இல்லையென்றால் டப்பிங் படங்களால் வெற்றி பெற வேண்டுமா?" என்ற கேள்வி எழுந்தது. இதனால், கன்னட சினிமா தரமான படங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது.
கேஜிஎஃப் & காந்தாரா - தேசிய அளவில் கன்னட சினிமா
டப்பிங் அனுமதி வந்த பிறகு, கன்னட திரை உலகம் தான் வேறு மொழிப் படங்களை மட்டும் அல்லாது, உலகத் தரத்திலான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என முயன்றது. இதன் விளைவாக, KGF (2018) மற்றும் Kantara (2022) போன்ற படங்கள் வெளிவந்து இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
KGF ஒரு மெகா பீரியட் ஆக்ஷன் திரைப்படமாகும், இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெற்றி கண்டது. இதன் பிறகு, Kantara தனது சொந்த கதையுடனும், மக்களின் கலாச்சார உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்திலும் உலகம் முழுவதும் கவனிக்கப்படத் தொடங்கியது.
இவை அனைத்தும் காட்டுவது, கன்னட சினிமா தற்போது ஒரு புதிய போக்கை அமைத்துள்ளதென்பதே. தற்போது, கன்னட படங்கள் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பாராட்டைப் பெறத் தொடங்கியுள்ளன.
- குரு கிருஷ்ணன்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications