சின்ன பிரச்சனையில் தொடங்கி..விஜே பிரியங்கா கணவரை பிரிய காரணம் இதுதானா..? பிரபலம் கூறிய தகவல்கள்
சென்னை: விஜே பிரியங்கா விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்.
ஆனாலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவருடைய கணவர் பற்றி சில காலமாக எந்த வார்த்தைகளையும் பிரியங்கா பேசாமல் இருக்கிறார்.
இந்த நிலையில் பிரியங்கா மற்றும் அவருடைய கணவர் இருவருக்கும் இருக்கும் பிரச்சனையை குறித்து பிரபலம் ஒருவர் சில தகவல்களை கூறி இருக்கிறார். அதை குறித்து பார்க்கலாம்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை ஆக பல வருடங்களாகவே தொகுப்பாளராக வலம் வரும் விஜே பிரியங்கா விஜய் டிவியில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்காததால் தானோ என்னவோ அதிலும் ஒரு போட்டியாளராக இவர் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு செம என்டர்டைன்மென்ட் கொடுத்து இருந்தார்.
பிரியங்காவிற்கு எப்போதுமே அவருடைய ஜாலியான பேச்சு தான் அவருடைய பிளஸ் பாயிண்ட். எந்த நேரத்திலும் தன்னை யார் கலாய்த்தாலும் அதை கண்டு கோபப்படாமல் அதை சகஜமாக எடுத்துக்கொண்டு சிரித்தபடியே பலரையும் கலாய்த்து கொண்டிருக்கும் பிரியங்கா, விஜய் டிவியில் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்துக் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வேலை செய்யும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் சில காலமாக பிரியங்கா பிரவீனை விவாகரத்து செய்துவிட்டு தனியாக அவருடைய அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து சினிமா விமர்சகரும் நடிகருமாக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களை கூறி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் ஆரம்பத்தில் பிரியங்கா தொகுப்பாளராக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது அவருக்கு பிரவீன் தான் உதவி செய்தார். அவரால் தான் விஜய் டிவியில பிரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் பிரியங்கா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தொடங்கியது. பிரியங்காவின் பேச்சு திறமையால் குறுகிய காலத்திற்குள் பலரையும் கவர்ந்து இருந்தார்.
ஆரம்பத்தில் பிரவினும் பிரியங்காவும் நண்பர்களாகத்தான் பழகி இருக்கிறார்கள். ஆனாலும் சில காலங்கள் கழித்து இருவரும் காதலிக்க தொடங்கி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து திருமண வாழ்க்கையில் இணைந்த இவர்கள் வாழ்க்கையும் ஆரம்பத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்திருக்கிறது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிரியங்கா தன்னுடைய துறையில் நல்ல வளர்ச்சி பெற்று இருந்திருக்கிறார். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட தொடங்கியதாம்.
அப்போது பிரியங்காவிற்கும் பிரவீனுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகளும் சில பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கிறது. அந்த பிரச்சனை சின்ன பிரச்சினையாக இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் பிரியங்கா அவருடைய அம்மா வீட்டில் தங்கி இருக்கிறார். ஆனால் அதுதான் பெரிய விஷயமாக மாறி பிரவீன் பிரியங்காவிடம் பேசுவதையே தவிர்த்து இருக்கிறாராம்.
அதுபோல பிரவீனுக்கு தன் மீது இருக்கும் கோபம் குறைவதற்காக தான் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதற்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரவீனும் பணியாற்றி கொண்டிருந்தாராம். அதனால் தான் அவர் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தாராம்.
ஆனால் இப்போதும் பிரியங்கா பிரவீன் உடன் வாழ்வதற்கு தயாராக இருந்தாலும் பிரவீன் தான் அவரோடு சேர்ந்து வாழ்வதற்கு சம்மதிக்காமல் இருக்கிறார் என்று பயில்வான் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதுபோல இப்போது பிரியங்கா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று சொல்ல முடியாத நிலையில் தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். காரணம் பயில்வான் ரங்கநாதன் ஏற்கனவே பல நடிகைகளை பற்றி அடிக்கடி சர்ச்சை விஷயங்களை பேசி வருவதால் இதுவும் உண்மையா? இல்லையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில் பிரியங்காவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அவருடைய திருமண புகைப்படங்கள் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஆனால் பிரவீன் இன்னும் டெலிட் செய்யவில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இருவரும் பிரச்சனைகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு












Click it and Unblock the Notifications