பசங்க "அன்பு” சீரியல் நடிகையை அவசரமாக கல்யாணம் செய்ய காரணம் இதுதானா? வெளியான ரகசியம்
சென்னை: பசங்க திரைப்படத்தில் மூலம் அன்பு கேரக்டரில் பலருக்கும் பரிட்சயமான நடிகர் கிஷோர் சமீபத்தில் தான் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை தெரிவித்த சில மாதங்களுக்குள் திடீரென்று திருமணத்தை முடித்து இருந்தனர்.
இந்த நிலையில் எதற்காக அவசர அவசரமாக திருமணத்தை முடித்தோம் என்று கிஷோர் பேட்டி ஒன்றில் உண்மைகளை உடைத்திருக்கிறார்.
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக கிஷோர் அறிமுகம் ஆகி இருந்தார்.. முதல் திரைப்படத்திலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.
முதல் திரைப்படத்தில் ஒரு பாசிட்டிவான குழந்தை கேரக்டரில் நடித்து வந்த கிஷோர் அதைத் தொடர்ந்து, கோலிசோடா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மார்க்கெட்டில் வேலை செய்யும் இளைஞராக நடித்திருப்பார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
அதைத் தொடர்ந்து வஜ்ரம், நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வெள்ளித் திரையில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
ப்ரீத்திக்குமார் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ப்ரீத்தி, கிஷோரை விட நான்கு வயது அதிகமானவர். இது குறித்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சைகளும் கிளம்பின. ஆனால் இவர்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர். அது குறித்து அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இப்படியான நிலையில் சமீபத்தில் இருவரும் பேட்டி ஒன்றில் தங்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி பல ரகசியங்களை உடைத்து இருக்கின்றனர். அதில் தாங்கள் எதற்காக சீக்கிரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்றும் கூறியிருக்கிறார்கள். அதற்கான காரணத்தைப் பற்றி கிஷோர் பேசுகையில், ப்ரீத்தியின் அப்பா நான்கு வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தாங்க.
அதனால் அவர் தன்னுடைய பொண்ணோட கல்யாணத்தை சீக்கிரமா பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதுக்காகத்தான் அவசரமாக கல்யாணம் பண்ண வேண்டியது ஆயிட்டு. இல்லனா என்னுடைய 31 வயசுக்கு மேல தான் ப்ரீத்தியை கல்யாணம் பண்ணி இருப்பேன்னு கூறி இருக்கிறார்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications