அந்த எதிர்பார்ப்பு..பார்த்திபனை பிரிய காரணம் இதுதான்..பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை சீதா
சென்னை: நடிகை சீதா பார்த்திபனை எதற்காக பிரிந்தேன் என்று பல வருடம் கழித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஒரு சராசரியான பொண்ணு எதிர்பார்க்கிற மாதிரி நானும் என்னுடைய கணவரிடம் முழு அன்பு எனக்கு மட்டும் கிடைக்கணும் என்று எதிர்பார்த்தேன் என்று சீதா கூறி இருக்கிறார்.
80ஸ், 90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் சீதா திரையுலகில் அறிமுகமானது என்னவோ ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் ஆனால் தமிழ் கன்னடம் மலையாளம் என பழமொழி திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார். கதாநாயகியாக வலம் வந்த நேரத்தில் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணமும் செய்திருந்தார். வீட்டில் பல பிரச்சனைகளுக்கு இடையே அனைத்தையும் எதிர்த்து பார்த்திபனை சீதா திருமணம் செய்திருந்தார்.
அந்த நேரத்தில் சீதா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். அந்த நிலையில் திடீரென்று திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிறகு இவருடைய குடும்ப வாழ்க்கையை பார்த்து இவர் கிளம்பி விட்டதால் நடிப்பை விட்டு விட்டார். ஆனால் அதுதான் நான் செய்த தவறு என்று இப்போது கூறி இருக்கிறாய்.
நடிகர் பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது அத்துடன் ஒரு ஆண் குழந்தை ஒன்றையும் தத்து எடுத்து வளர்த்து வந்ததனர். இந்த நிலையில்தான் 11 வருட திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதற்கு பிறகு சீரியலில் கவனத்தை செலுத்தி வந்த நடிகை சீதா 43 வயதில் டிவி நடிகர் சதீஷை சீதா இரண்டாவது திருமணம் செய்து இருந்தார். ஆனால் அந்த திருமணமும் அவருக்கு அதிக நாட்கள் நிலைக்கவில்லை. சிறிது காலத்திற்குள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சீதாவிடம் எதற்காக பார்த்திபனை பிரிந்தீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டபோது அதிகமான எதிர்பார்ப்பு தான் எங்கள் பிரிவுக்கு காரணம் என்று கூறியிருக்கிறார். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்து வெளி உலகம் தெரியாமல் இருக்கும் ஒரு பெண் எந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு வைத்திருப்பாரோ அப்படித்தான் நானும் இருந்தேன். என்னுடைய கணவர் எனக்கு மட்டும்தான் என்கிற மாதிரி தான் நான் எதிர்பார்த்தேன்.
என்னுடைய எதிர்பார்ப்பில் என்ன தவறு இருக்கிறது. அப்படி நான் எதிர்பார்த்தது நடக்காத போது தான் எங்களுக்குள் பிரச்சனை வந்தது. எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் கூறினாலும் அடிப்படையான விஷயங்களில் எதிர்பார்ப்பு இருப்பது நியாயம் தான். அதை நான் எதிர்பார்த்ததும் தவறு இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications