நடிகர் பிரேம் குமாருக்கு நடிகை வடிவுக்கரசி இப்படி ஒரு உறவா?அதனால் பறிபோன பாரதிராஜா பட வாய்ப்பு
சென்னை: நடிகை வடிவுக்கரசிக்கு நடிகர் பிரேம் குமார் அத்தை பையன் தானாம்.
இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதாலேயே கிழக்கு சீமை திரைப்படத்தில் பிரேம்குமார் நடிக்க இருந்த நிலையில் வாய்ப்பு கடைசியில் பறி போய்விட்டதாம்
இந்த நிலையில் நடிகர் பிரேம்குமார் பற்றியும் கிழக்கு சீமை திரைப்படத்தைப் பற்றியும் வடிவுக்கரசி ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்து பலரையும் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டியும் குணச்சித்திர வேகத்தால் கவர்ந்த நடிகை வடிவுக்கரசி தற்போது சின்ன திரையில் பல முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலில் பாட்டி கேரக்டரில் பலருடைய மனதையும் கவர்ந்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் தன்னுடைய திரை வாழ்க்கை குறித்தும் அதில் நடந்த சுவாரசியமான தகவல்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.அந்த வகையில் கிழக்கு சீமை திரைப்படத்தில் ஆரம்பத்தில் இவரிடம் நடிகர் விஜயகுமாரின் மனைவியாக நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்களாம். இவரும் சரி என்று சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார்.
ஆனால் அங்கே போன பிறகு நாங்கள் விஜயகுமாருக்கு ஜோடி வைக்க வேண்டாம் என்று முடிவு வைத்திருக்கிறோம் என்று கூறி விட்டார்களாம். இதனால் வடிவுக்கரசிக்கு அந்த நேரத்தில் கோபம் வந்திருக்கிறது.நடிகர் விஜயகுமார் முன்பு தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களே என்று கடும் கோபம், வடிவுக்கரசிக்கு வந்திருக்கிறது.

அந்த நிலையில் அங்கிருக்கும் தயாரிப்பாளரிடம் கோபம் போட்டு திட்டி இருக்கிறார். அங்கு இருந்தவர்களும் வடிவுக்கரசியோடு சண்டையிட்டு இருக்கின்றனர். பிறகு நான் இப்பவே சென்னைக்கு போய் ஆக வேண்டும் என்று கோபத்தில் அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விட்டாராம்.அப்போது அந்த திரைப்படத்தில் நடிகை ராதிகாவின் மகனாக நடிகர் பிரேம் குமார் நடிக்க இருந்திருக்கிறார்.
பிரேம் குமார் நடிகை வடிவுக்கரசியின் அத்தை மகன்தானாம். அதனால் வடிவுக்கரசி கோபித்துக் கொண்டு வந்ததும், அவரை சமாதானம் செய்வதற்காக அத்தாட்சி நானும் வருகிறேன் என்று கூறிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார். ஆனால் திரைப்பட தயாரிப்பாளர் பிரேம்குமாரும் வடிவுக்கரசியோடு சேர்ந்து சென்று விட்டார் அதனால் இனி அந்தப் பையன் இந்த படத்தில் நடிக்க கூடாது என்று கூறிவிட்டாராம்.

நான் அந்த நேரத்தில் கோபப்படாமல் இருந்திருந்தால் நடிகர் பிரேம் குமார் பாரதிராஜாவின் படத்தின் மூலமாக அறிமுகமாகி இருப்பார். ஆனால் என்னால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. என்னை சமாதானப்படுத்த வந்து அவர் திரைப்படம் கைநழுவி போய்விட்டது. பிறகு அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் ராதிகாவின் மகனாக அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் என்று பல தகவல்களை தற்போது வடிவுக்கரசி கூறி இருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்கள் பலவற்றில் நடித்து வந்த பிரேம்குமார் தற்போது முன்னணி கதாநாயகர்களோடு நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக பிரேம்குமார் தற்போது அதிகமாக போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். இது இவருடைய கனவாக இருப்பதாகவும் ஏற்கனவே அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் நிஜ வாழ்க்கையில் போலீசாக வேண்டும் என்பது இவருடைய ஆசையாக இருந்த நிலையில் நடிப்பு துறையில் காலடி எடுத்து வைத்து தற்போது திரைப்படங்களில் போலீசாக நடித்து வருகிறார்.
-
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications