புன்னகை மன்னன் படத்தில் இத்தனை ட்விஸ்ட்டுகளா? ஏதேதோ எண்ணம் பாடல் கமலுக்கு எழுதவில்லையாமே
சென்னை: புன்னகை மன்னன் திரைப்படத்தில் இத்தனை ரகசியங்களா, ரேகா கேரக்டருக்கு பதில் வேறு நடிகை நடிக்க இருந்தாரா, ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடல் கமலுக்கானது இல்லையாமே! ஆஹா இந்த படத்தில் எத்தனை ட்விஸ்ட் என்னென்ன என பார்ப்போம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'எது வந்த போதும்...
இந்த அன்பு போதும்...' 'புன்னகை மன்னன்' படத்தின் 'ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்' பாட்டு கேட்டிட்டிருந்தேன்...

எவ்வளவு ஆழமா பாடி இருக்காங்க இந்த சித்ரா?.... காதலனை பிரிந்து தனிமையிலிருக்கும் காதலியின் தாபங்கள் அந்த குரலில் தான் எவ்வளவு அற்புதமா ஒலிக்குது. கமல் படங்களில் ராஜாவின் நல்ல நல்ல பாடல்களை வெட்டித் தூக்கி விடும்படி அமைஞ்சுடும். இதுல போனாப் போகுதுன்னு தூக்கி எறியப் போன பாடலை டைட்டிலுக்கு உபயோகப்படுத்திக்கிட்டார் போல...
புன்னகை மன்னன் படத்தின் முதல் கதை இரு ஜோடிகளைப் பற்றியது. அந்த இரண்டு ஜோடிகளுமே தத்தம் இணைகளை பிரிந்து பின் இருவருமாக ஆவதே கதை. 80லேயே திட்டமிடப்பட்ட இக்கதையில் தான் பூர்ணிமா ஜெயராம் அறிமுகம் ஆக இருந்தார். ஆனால் கமலோடு வேறு சப்ஜெக்ட் செய்வதால் தள்ளி தள்ளிப்போனது. பூர்ணிமா வேறு படங்களில் அறிமுகமானார்.
86ல் திட்டத்தை செயலாற்ற படம் துவங்கியதும் அழகா ராஜாவிடமிருந்து டியூன்களை வாங்கி கமல் வரும் முன்பே படப்பிடிப்பை துவக்கி விட்டார் கே.பி. ரேவதிக்கு ஜோடியாக ரமேஷ் அர்விந்த் நடித்து காட்சிகள் எடுக்கப்பட்டன. ஆனா அதுக்கப்புறம் கதை டிஸ்கஷனில் மாற ரேவதியின் பாத்திரத்தின் காதல் வலிமையாகக் காட்ட ரமேஷ் அரவிந்த் கதாபாத்திரம் தூக்கப்பட்டது.
அப்போது ரேகா கடலோரக் கவிதைகளில் நடித்துக் கொண்டிருக்க படத்தின் தலைப்பை பதிவு செய்து வைத்திருந்த கேபியிடம் பாரதிராஜா கேட்க அப்போது ரேகா பற்றி அறிந்ததோடு ரேகாவும் உள்ளே வந்தார். ரேகாவுக்கு தெரியாமல் முத்தம் கொடுத்ததாக ரேகா சொன்னது ஒரு அபத்த ஸ்டேட்ஸ்மெண்ட். கமலுக்கே தெரியாதாம்... அப்படின்னு கூட சொல்வாங்க. ஆனா சாகப்போகும் அந்த நேரத்தில் கூட கமல் கேரக்டர் ரேகாவின் உதட்டை நினைத்து காதல் கொள்வது புரியவில்லை....
வேறு ஒரு நடிகை தனக்கு அந்த வாய்ப்பு வந்ததாகவும் முத்தக் காட்சியால் மறுத்ததாகவும் சொல்லி இருந்தார். ரேகா தனக்குத் தெரியாது என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்.. ஏதேதோ பாடல் ரேவதி- ரமேஷ் பாடலாக இருக்க வேண்டும். பின் ரமேஷ் காட்சிகள் வெட்டப்பட்டு கதை மாறியதால் டைட்டிலில் பொருத்தப்பட்டது. சிறந்த ஒரு பாடலில் காட்சிப் பூக்களோடு மாலையாக தொடுத்திருந்திருக்கலாம் கே.பி.
'நீயே அணைக்க வா...தீயை அணைக்க வா...
நீ பார்க்கும் போது பனியாகிறேன்...
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்...
எது வந்த போதும்....இந்த 'அன்பு' போதும்...'
What a depth? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications