ரஜினிகாந்தின் கண்டக்டர் அடையாள அட்டையில் இருக்கும் விஷயம்.. ஜெயிலர் 2வுடன் ஆச்சரியமான ஒப்பீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு ரஜினிகாந்த் என்றாலே அவருடைய ஸ்டைல், மாஸ், படங்களின் வசூல் என பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், இந்த இடத்தை அவர் ஒரே நாளில் அடைந்துவிடவில்லை. ஒரு காலத்தில் பெங்களூரு பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்தான் இன்று இந்திய சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். இப்போது அவருடைய பழைய அடையாள அட்டை சமூக வலைதளங்களில் மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறது.

Rajinikanth Jailer 2 Tamil Cinema Superstar Cinema News 2

ரஜினிகாந்த் கண்டக்டர் அடையாள அட்டை

அந்த அடையாள அட்டையில் இருக்கும் ஒரு விஷயம்தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ரஜினிகாந்த் நடத்துநராகப் பணியாற்றிய காலத்தில் அவருடைய மாத சம்பளம் ரூ.275 என்று அந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், அப்போது வாங்கிய சம்பளத்தையும் இப்போது ஜெயிலர் 2 படத்துக்காக அவர் வாங்கிய கோடிக்கணக்கான சம்பளத்தையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

Rajinikanth Jailer 2 Tamil Cinema Superstar Cinema News 2

ரஜினிகாந்த்தின் ஆரம்ப சம்பளம்

ரஜினிகாந்தின் நிஜ பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு பெங்களூருவில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்தார் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். அப்போது அவருடைய ஸ்டைலும், பயணிகளிடம் பேசும் விதமும் நான் அவரை சினிமாவில் நடிக்க வைத்ததாக பலர் கூறி இருக்கிறார்கள். இப்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் பழைய அடையாள அட்டையில், பெங்களூரு போக்குவரத்துச் சேவையில் அவர் பணியாற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் நடத்துநர் என்ற பதவியும், ஸ்ரீநகர் பணிமனை, 10A வழித்தடம், பணியில் சேர்ந்த தேதி உள்ளிட்ட விவரங்களும் காணப்படுகின்றன. மாதச் சம்பளமாக ரூ.275 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Rajinikanth Jailer 2 Tamil Cinema Superstar Cinema News 2

ஜெயிலர் 2 சம்பளம்

ஒரு காலத்தில் மாதம் ரூ.275 சம்பளம் வாங்கியவர், இன்றைக்கு ஒரு படத்தில் நடிப்பதற்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதுதான் இப்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையில், ஜெயிலர் 2 படத்துக்காக ரஜினிகாந்துக்கு ரூ.275 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் ஒப்பீடுகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு தொகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது என்பது புரிகிறது. ஒரு காலத்தில் பஸ் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தவர், இன்று அவருடைய படம் வெளியாகும் நாளை ஒரு கொண்டாட்டமாகக் கருதும் அளவுக்கு ரசிகர்களின் அன்பைப் பெற்றிருக்கிறார்.

அவருடைய இந்த வளர்ச்சிக்குப் பின்னால் பல ஆண்டுகால உழைப்பும், தொடர்ந்து கிடைத்த வெற்றிகளும் இருக்கின்றன. ஆரம்பத்தில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இன்று அவருடைய படங்களைப் பற்றிய அறிவிப்புகள் வெளியானாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

அதனால்தான் இந்த பழைய அடையாள அட்டையை பார்க்கும் ரசிகர்களுக்கு, அதில் இருக்கும் ரூ.275 என்ற தொகை வெறும் சம்பள விவரமாக மட்டும் தெரியவில்லை. ரஜினிகாந்த் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தும் ஒரு விஷயமாகவும் இருக்கிறது. மாதம் ரூ.275 சம்பளம் வாங்கிய அந்த பயணத்துக்கும், இன்று கோடிக்கணக்கான சம்பளம் பற்றி பேசப்படும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசம்தான் இந்த புகைப்படத்தை மீண்டும் பேச வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+