அபிஜித் தீப்கேவிற்கு வார்னிங்.. நோட்டீஸ் வழங்கிய டெல்லி போலீசிடம் கையெடுத்து கும்பிட்டு சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தேசியக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே தான் அபிஜித் தீப்கேவிற்கு வார்னிங் கொடுத்து போலீசார் நோட்டீஸ் வழங்கிய நிலையில் அவர் கையெடுத்து கும்பிட்டு கூறிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் இன்று மாலை 5 மணிக்கு தேசியக்கொடி போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்க அறிவித்துள்ளார்.

போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள சென்ட்ரல் பார்க்கில் இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என டெல்லி மாநகராட்சி நிர்வாகிம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பார்க்கை சுற்றிய இடங்களில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 163ன் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய 144 தடை உத்தரவு போன்றதாகும்.

dont-to-hold-tiranga-march-delhi-police-serves-notice-cockroach-janta-party-founder-abhijeet-dipke

ஆனால் அபிஜித் தீப்கே தேசியக்கொடி போராட்டத்தில் உறுதியாக உள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) செய்தி தொடர்பாளர் அனிஷ் கவாண்டி வீட்டில் இருக்கிறார். இதுபற்றி அறிந்த போலீசார் இன்று அபிஜித் தீப்கேவை சந்தித்து நோட்டீஸ் வழங்கினர்.

மஞ்சள் நிற சோபாவில் அபிஜித் தீப்கே தனது தோளில் தேசியக்கொடி போர்த்தி அமர்ந்து இருந்தார். அவரிடம் காவல் அதிகாரிகள் நோட்டீஸ் பற்றி விளக்கம் அளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், ''என் மீது எந்த மாதிரியான குற்றச்சாட்டு சுமர்த்தப்பட்டுள்ளது?'' என அபிஜித் தீப்கே கேட்கிறார்.

அதற்கு போலீஸ் அதிகாரி விளக்கம் அளிக்கிறார். அப்போது போலீஸ் அதிகாரி, ''சென்ட்ரல் பார்க்கில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 163 அமலப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டெல்லி மாநகராட்சி நிர்வாகிம் சென்ட்ரல் பார்க்கிற்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளது. இதை மீறி சென்றால் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 163யை மீறுவதாக கூறி நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசியக்கொடியை ஏந்துவது ஒன்றும் சட்டத்துக்கு விரோதமானது இல்லை. ஆனால் அனுமதியில்லாத இடத்தில் பேரணியாக சென்று பொதுமக்களை கூட்டமாக சேர்ப்பது சட்டத்துக்கு எதிரானது. இது நடந்தால் போலீசார் சட்ட நவடிக்கையை எபுப்பார்கள். '' என்று வார்னிங் செய்துள்ளார்.

இந்த சமயத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, ''தேசியக்கொடி போராட்டம் என்பது சட்டத்துக்கு எதிரானது இல்லை. கிரிமினல்களை கண்டுபிடித்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் அமைதியான போராட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு போலீஸ் அதிகாரி ஒப்புக்கொள்ளவில்லை.

இதன்மூலம் அபிஜித் தீப்கே தேசியக்கொடி போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஒருவேளை அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தால் அவர் உடனடியாக கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. தற்போது அபிஜித் தீப்கே தங்கி உள்ள வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியே வந்தாலே அபிஜித் தீப்கே கைதாக அதிக வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. இதனால் டெல்லியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+